தொழில்முனைவோருக்காக தொழில் திட்டங்களை தயார் செய்ய உதவும் முக்கிய இணையதளம் மற்றும் மென்பொருள்கள்

Share & Like

தொழில்முனைவோர்கள் நிறுவனத்தை தொடங்கவும் வளர்ச்சியடைய செய்யவும்  மற்றும் முதலீட்டை பெறவும் தொழில் திட்டங்கள் (business plan) மிக முக்கிய பங்குவகிக்கின்றது. தொழிலை பற்றிய ஐடியாக்கள் மற்றும் திட்டங்கள் போன்றவை மனத்தில் மட்டும் இருப்பது நிறுவன வெற்றிக்கு உதவாது. அந்த திட்டங்களை ஒரு ஒழுங்குப்படுத்தி அதை வரையறுத்து வடிவமைக்கவேண்டும். நல்ல திட்டங்கள் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தொழில் திட்டங்கள்
Image credit: rumahukm.com

தொழில் திட்டங்களை (business plan) தயார்செய்ய நிறைய இணையத்தளங்கள் மற்றும் மென்பொருட்கள் (software, Tools) உள்ளன. இவை தொழில்முனைவோர் (entrepreneur) திட்டங்களை தயார் செய்வதை எளிமைபடுத்துகின்றன. தொழில்முனைவோர்கள் உருவாகும் திட்டங்கள்தான் அவர்களின் தொழிலுக்கு தேவையான முதலீட்டைப் பெற முக்கிய காரணியாக இருக்கும். அந்த வகையில் தொழில் திட்டங்களை நன்றாக தயார்செய்வது மற்றும் வடிவமைப்பது என்பது மிக முக்கியம்.

தொழில் முனைவோர்கள் தொழில் திட்டங்களை தயார் செய்ய உதவும் முக்கிய இணையதளம் மற்றும் மென்பொருள்களை தெரிந்துகொள்ளவது அவசியம்.


Please Read Also: தொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடன்களை பெற சமர்பிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெறவேண்டிய முக்கிய விஷயங்கள்


Bizplan

Bizplan இணையத்தளம் ஒரு நிறுவனம் முதலீட்டை பெறுவதற்கும், இயக்குவதற்கும் மற்றும் வளர்ச்சி அடைவதற்கும் தேவையான தொழில் திட்டங்களை தயார் செய்வதற்கு உதவுகிறது. Bizplan நிறுவனத்தில்  பல துறைச் சார்ந்த வல்லுநர்கள் உள்ளனர்.

Bizplan.com தளத்தில் அழகான சிறந்த வடிவமைப்புக் கொண்ட business plan templates உள்ளது. படிப்படியாக நமது திட்டங்களை இதில் வடிவமைத்துக்கொள்ளலாம்.

Bizplan தளத்தில் Fundable.com என்ற ஒரு தளமும் உள்ளது. இதில் தொழில் முனைவோர் தங்களது நிறுவனத்தின் திட்டங்களை வெளியிடலாம். இதில் உலகெங்கும் பல முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர். ஒரு நிறுவனத்தின் திட்டங்களை ஏதேனும் முதலீட்டாளர்கள் விரும்பும் பட்சத்தில் அந்த நிறுவனத்திற்கு முதலீட்டை செய்யும் வாய்ப்பு உள்ளது.

LivePlan

LivePlan தளம் நிறுவன திட்டங்களை உருவாக்க உதவுகிறது. நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் திட்டங்களை வழங்கும் (Pitch) வகையில் வடிவமைத்து தருகிறது. LivePlan ல் எண்ணற்ற மாதிரி திட்டங்கள் (sample plans) உள்ளன.

LivePlan.com தளத்தில் திட்டங்களை (business plan) உருவாக்குவதற்கு வழிகாட்ட வல்லுநர்கள் உள்ளனர். விற்பனை (sales), வருவாய் (revenue), லாபம் ஈட்டும் காலம் முதலியவற்றை கணக்கிடுவதற்கு Automatic Financials முறையும் உள்ளன. இதில் எளிதாக நிறுவனத்தின் நிதி (finance) சார்ந்த விசயங்களை கணக்கிட்டு திட்டங்களை உருவாக்கலாம்.

Bplans

Bplans தளம் தொழில் முனைவோருக்கு தொழில் திட்டங்களை தயார் செய்ய உதவுவது மட்டுமின்றி, முதலீட்டை (investment) பெறுவது, முதலீட்டாளர்களிடம் எப்படி நிறுவனத்தை பற்றிய விசயங்களை வழங்குவது (pitch), ஸ்டார்ட் அப் நிறுவனங்களை எப்படி தொடங்குவது, நிறுவனத்தை நிர்வகிப்பது, மார்கெட்டிங் (marketing) போன்றவற்றிற்கு Bplans வழிகாட்டுகிறது.

Bplans.com  யில் எண்ணற்ற இலவச business plans மாதிரிகள் உள்ளன. 


Please Read Also: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கான 20 முக்கிய காரணங்கள்


Enloop

Enloop.com தளத்தில் தொழில்முனைவோர்கள் தொழில் திட்டங்களை வடிவமைத்து கொள்ளலாம். Automated Financial Forecasts மூலம் நிறுவன நிதி தொடர்பானவற்றை கணித்து திட்டங்களை உருவாக்கி கொடுக்கிறது.

Business Plan Pro

Business Plan Pro மென்பொருட்கள் (software) தொழில் திட்டங்களை உருவாக்க உதவுகிறது. Business Plan Pro மென்பொருட்களில் 500 க்கும் மேற்பட்ட business plans மாதிரிகள் உள்ளன. தொழில்முனைவோருக்கு தேவையான மாதிரிகளை தேர்வுசெய்து தொழில் திட்டங்களை வடிவமைத்துக்கொள்ளலாம்.

Smartsheet

Smartsheet இணையத்தளம் தொழில் திட்டங்கள் (business plan), விற்பனை நிர்வாகம் (sales operation),  மார்கெடிங் மேலாண்மை (marketing management) போன்றவற்றை தயார்செய்ய உதவும் மென்பொருட்களை (software) வழங்குகிறது. தொழில் திட்டங்களை உருவாக்க தேவையான template பல Smartsheet.com -ல் உள்ளது. தொழில்முனைவோர் தங்களுக்கு தேவையான template-ஐ தேர்ந்தெடுத்து திட்டங்களை வடிவமைத்துக் கொள்ளலாம். 

Business Power Tools

Business Power Tools நிறுவனம் தொழில்முனைவோருக்கு தேவையான பல மென்பொருட்கள் Tools-ஐ வழங்குகிறது. ஸ்டார்ட் அப் (startup) நிறுவனங்களுக்கான Start-Up Toolsதொழில் திட்டங்களை உருவாக்க Planning Tools, மனிதவள மேலாண்மைக்காக  HR Tools, நிபுணர்கள், தொழில் ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நிறுவன பயிற்சியாளர்கள் Consulting Toolsஇலாப நோக்கமற்ற நிறுவனங்களுக்காக Non-Profit Tools,  Business School ஆகியவற்றிற்கு Teaching Tools ஆகிய மென்பொருட்கள் Business Power Tools நிறுவனம் வழங்குகிறது.  


Please Read Also: தொழில் முனைவோர்கள் பிற தொழில் செய்வோரிடம் கற்க வேண்டிய 5 திறமைகள்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons