முகேஷ் அம்பானியிடமிருந்து கற்க வேண்டிய 10 பாடங்கள்

Share & Like

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான Reliance Industries Limited (RIL) ன் நிர்வாக இயக்குனர் மற்றும் பெரிய பங்குதாரர். 2016 வரை அம்பானி தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஃபோர்ப்ஸ் (Forbes) பட்டியலில் இந்தியாவின் முதல் பணக்காரராக உள்ளார். 2014 ஆம் ஆண்டில், அவர் உலகின் மிக சக்திவாய்ந்த மனிதர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 36 வது இடத்தில் இருந்தார். 

mukesh ambani
Credit: financialexpress.com
1.  உங்கள் பார்வையை விசாலமாக திறந்து வையுங்கள்

முகேஷ் அம்பானி புதிய தொழில் வாய்ப்புகளை தேடுவதில் எப்போதும் தன் பார்வையை விசாலமாக திறந்துவைத்திருப்பார். அது சம்பந்தமான சூழலை புரிந்துகொள்ள எப்போதும் தனது கண்களை விசாலமாக திறந்து வைத்திருப்பார். 

2.  பயபடாதீர்கள், வலுவாக இருங்கள்

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) அவர் தந்தையின் தொழிலில் மிக இளம் வயதில் இணைத்தார். அதுவரை அவர் தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொள்பவராகவே இருந்தார். 1986 ஆம் ஆண்டு அவரின் மாமாவும், அவர்களின் தொழில் பங்குதாரருமான ராசிபாய் இறந்தார். அவர் இறந்து 5 மாதத்திற்குள் திருபாய் அம்பானி (Dhirubhai Ambani) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் முகேஷ் அம்பானி Reliance நிறுவனத்தில் அவர் திருபாய் அம்பானியின் இடத்தில் அமர்ந்தார். அந்த கடினமான தருணத்திலும் திடமாக இருந்து Reliance நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

3.  மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குங்கள் 

உங்கள் குழுக்களுடன் (team) இருங்கள். நம்பகத்தன்மையுடைய குழுக்களை உருவாக்கவேண்டும். குழுக்களில் உள்ள வல்லுனர்களை நம்புங்கள். உங்கள் குழுக்களுடன் நிறுவனத்தின் உயர்வுக்காக உங்கள் நேரத்தை செலவிடுங்கள். 

4. ரிஸ்க் எடுப்பதிலிருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கும்

யார் ஒருவர் ரிஸ்க் (risk) எடுக்கவில்லையோ அவர் வாழ்வில் முக்கிய உயரத்தை தொடமாட்டார் என்று முகேஷ் அம்பானி ஒரு முறை கூறினார். அவர் தனது வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்து அதை நிரூபித்தது காட்டினார். அவர் எடுத்த ரிஸ்க் எல்லாம் கணக்கிடப்பட்ட ரிஸ்க் (calculative risk) ஆகும். 


Please Read Also : அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்


 5.  கனவு காணுங்கள்

கனவுகளை கொண்டிருக்கும்போது, அந்த கனவு (dream) நமக்கான முக்கிய இடத்தை பிடிக்க தேவையான வேலைகளை செய்யும்.

6.  உங்களை பற்றி நீங்கள் செய்த காரியங்கள்தான் பேசும்

முகேஷ் அம்பானி ஊடகத்தில் அதிகம் தோன்றியவர் கிடையாது, பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான தனது எண்ணங்களை World Economic Forum யில் வெளிபடுத்தியதுகூட இல்லை. முகேஷ் அம்பானி சமூக வட்டத்தில் அவரின் விளம்பரத்தை குறைவாக இருபதையே  விரும்புபவர். ஆனால் நாட்டில் அதிகமாக பேசப்பட்ட பிரமுகர்களுள் (personalities) ஒருவர் ஆவார். நாம் செய்யும் காரியங்கள்தான் நம்மை பற்றி பேசும்.  

7.  வெற்றியின் மீது எப்போது ஆவல் கொண்டிருங்கள்

நாம் திட்டமிட்டதை செய்துகொண்டேயிருக்க வேண்டும். எக்காரணத்திற்காகவும் எடுத்த காரியத்தை பாதியில் நிறுத்த கூடாது. பொறுமையை இழக்காமல் வெற்றி ஒன்றை மட்டும் குறிகோளாகக் கொண்டு செயல்பட்டால், நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைத்தே தீரும்.  

8.  பணம் என்பது வெற்றியிலிருந்து கிடைக்கும் ஒரு துணை பொருள் (Money is a by-product) மட்டுமே

பணத்தை துரத்துவதினால் மட்டும் ஒருவர் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக முடியாது. பணம் என்பது வெற்றியிலிருந்து கிடைக்கும் ஒரு துணை பொருள் (by product) மட்டுமே என்றார் திருபாய் அம்பானி. இந்தியாவிலேயே மிகப் பெரிய நிறுவனமாக Reliance ஐ உருவாக்குவதையே முகேஷ் அம்பானி குறிக்கோளாக கொண்டிருந்தார். 

9.  உங்கள் உறுதியான உள்ளுணர்வுகளை நம்புங்கள்.
10.  எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.

Please Read Also : Alibaba Group-ன் நிறுவனர் ஜாக் மா-வின் வெற்றிக்கான 10 முக்கிய விதிகள்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons