தொழில் முனைவோர்கள் பிற தொழில் செய்வோரிடம் கற்க வேண்டிய 5 திறமைகள்

Share & Like

தொழில் முனைவோர்கள் தங்கள் தேர்வு செய்துள்ள தொழிலில் வெற்றி பெற பல திறன்கள் தேவைப்படுகின்றன. தொழில்முனைவோருக்கு தேவைப்படும் திறன்களை அவர்களின் அனுபவத்தின் மூலமும், பயிற்சியின் மூலமும், புத்தகத்திலிருந்தும் கற்றுக் கொள்கின்றனர். அதேப்போல்  தங்கள் துறைகளில் சிறந்து விளங்குகின்ற பிற தொழில்முறை சார்ந்தவர்களிடமும் பல திறமைகளை கற்றுக் கொள்ளலாம். தொழில்முனைவோர்களுக்கு தேவைப்படும் ஒரு பண்பு தொடர்ந்து கற்றுக் கொண்டே இருப்பதுதான்.

பிற தொழில் சார்ந்தவர்களிடம் கற்று கொள்ள வேண்டிய ஐந்து திறமைகள்
1.  ரிஸ்க் எடுத்தல் – அறுவை சிகிச்சை நிபுணர்களிடம்
ரிஸ்க் எடுத்தல்
CREDITS: OUROWNSTARTUP

தொழில்முனைவோருக்கு தேவைப்படும் மிக முக்கிய திறமைகளில் ஒன்று ரிஸ்க் எடுப்பது. அதுவும் கணக்கிட்ட ரிஸ்க். ரிஸ்க் எடுக்கும் திறமையை தொழில்முனைவோர்கள் அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் எடுக்கும் ரிஸ்க் ஒரு மனிதரின் உயிரை காப்பாற்றலாம் அல்லது உயிரைப்  பரிக்கலாம். ரிஸ்க் எடுத்து அறுவை சிகிச்சை செய்யும்போது அவர்களின் செயல்திறன் எந்தவகையிலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வார்கள். நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டி அவர்களின் மன தைரியத்தை அதிகரிப்பார்கள்.

தொழில்முனைவோர்களும் இதே போல்தான் அவர்கள் பல காரியங்களில் எடுக்கும் ரிஸ்க் அவர்களை வெற்றிப்பாதைக்கும் அழைத்துச் செல்லலாம், தோல்விகளுக்கும் வழிவகுக்கலாம். ஆனால் அவர்கள் மிகவும் கணக்கிட்ட ரிஸ்காக இருக்கவேண்டும். ரிஸ்க் எடுத்தபிறகு அவர்களின் செயல்திறன் எந்த விதத்திலும் பாதிக்ககூடாது.

2.  விடாமுயற்சி  – விளையாட்டு வீரர்களிடமிருந்து
IMAGE CREDITS: BENCKS
IMAGE CREDITS: BENCKS

தொழில்முனைவோர் பயணம் வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே சேர்ந்ததுதான். மிகப் பெரிய தொழில்முனைவோர்களான மார்க் ஜுக்கர்பெர்க்,  எலன் மஷ்க், ஜாக் மா, ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர்கள் தோல்வியை சுவைத்தவர்களே. ஆனால் பல தொழில்முனைவோர்கள் தோல்வியை கண்டு பயந்து தங்களின் முயற்சியை கைவிடுகின்றனர். தொழில்முனைவோர்களுக்கு இருக்கவேண்டியவை உறுதி, விடாமுயற்சி, பிடிவாதம் (Persistence) போன்ற பண்புகள் மற்றும் திறமைகள்.

விடாமுயற்சி செய்வதை தொழில்முனைவோர்கள் விளையாட்டு வீரர்களிடம் கற்றுக் கொள்ளலாம். தோல்வி ஏற்பட்டாலும், எதனால் அந்த தோல்வி ஏற்பட்டது என்பதை கண்டறிந்து மீண்டும் அர்பணிப்புடன் கடுமையாக உழைத்து வெற்றிபெறுவார்கள். இதுதான் விளையாட்டு வீரர்களிடம் தொழில்முனைவோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய திறமைகள்.

3.  பேச்சுவார்த்தைகள்  – வக்கீல்களிடமிருந்து
lawyer
IMAGE CREDIT: INSISTPOST.COM

பேச்சு திறமை, கலந்து பேசுதல் (Negotiating) ஆகியவை தொழில்முனைவோர்களுக்கு தேவையான திறன்களாகும். ஊழியர்களுடன், வாடிக்கையாளர்களுடன், விற்பனையாளர்களுடன், நிபுணர்களுடன், முதலீட்டாளர்களுடன், மேலாளர்களுடன்  பல விசயங்களை அவர்களை செய்ய வைக்கும் நோக்குடன் கூடிக் கலந்து பேச நேரிடும். இதேபோல் ஒப்பந்தங்களை பல பேரை இணங்க வைத்து நிறைவு செய்ய நேரிடும். இவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள தொழில்முனைவோர் வக்கீல்களிடமிருந்து பேச்சுவார்த்தைகள், இணங்க வைத்தல் போன்ற திறமைகளை கற்றுகொள்ள வேண்டும்.


PLEASE READ ALSO: உங்கள் தொழிலை தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விசயங்கள்


சிறந்த வக்கீல்கள் தன்னம்பிக்கையுடன, அவர்கள் என்ன பேச வேண்டும் என்ற திட்டமிடலுடன் வழக்காடுவார்கள். அவற்றைப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு, தாங்கள் பேசும் விஷயத்தை ஆராய்ச்சி செய்து, மற்ற நபரின் கண்களைப் பார்த்து, அவர்களின் நோக்கத்தில் தெளிவாக மற்றும் நிலைப்பாடு விலகி செல்லாமல் பேசுவார்கள்.  வக்கீல்களிடமிருந்து தொழில்முனைவோர்கள் பேச்சு திறமை, இணங்க வைக்கும் திறமை போன்றவற்றை கற்றுகொள்ள வேண்டும்.

4.  பிரச்சினைகளுக்கு  தீர்வுகள் கண்டுபிடித்தல்  – மேம் வேலையாடுபவர்

பிரச்சனைகளுக்கு தீர்வு எடுத்தல்

பெரும்பாலும் கேம் (game) விளையாடுபவர்கள் பிரச்னையை தீர்ப்பதில் (Problem solving) வல்லவர்களாக இருப்பார்கள் என ஆராய்ச்சி கூறுகிறது. ஏனெனில் பெரும்பாலான விளையாட்டுகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட தீர்வுகளை கொண்டு விளையாடும்போது அடுத்த நிலைக்கு செல்கிறது.  பிரச்சினைகளுக்கு  தீர்வுகளை கண்டுபிடித்து தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவதே கேமின் சிறப்பு.

தொழில்முனைவோர்கள் தொழில்களை கேம் விளையாடுவதைப் போல நினைக்க வேண்டும்.  பிரச்சினையை தீர்வுகள் கண்டுபிடித்து, தன்னம்பிக்கையுடன், முயற்சி செய்து ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வெற்றி பெறவேண்டும்.

5.  விளக்குதல் – ஆசிரியர்களிடமிருந்து
விளக்குதல்
IMAGE CREDIT: BOSTON.COM

தொழில்முனைவோர்கள் பல விளக்கங்களை கொடுக்க வேண்டிவரும். ஊழியர்களிடம், முதலீட்டாளர்களிடம், வாடிக்கையாளர்களிடம் மற்றும் விற்பனையாளர்களிடம் நிறுவனத்தைப் பற்றிய, பொருட்கள் அல்லது சேவைகள் பற்றிய விளக்கங்களை கொடுக்க வேண்டிவரும். அவர்களிடம் எதை விளக்க வேண்டுமோ அதைப் பற்றி தெளிவாகவும், அவர்களுக்கு புரியும் படியும், அவர்களின் கவனத்தை சிதறவிடாமலும், மனநிலையை அறிந்து, உதராணத்துடன், சாதரான வார்த்தை மொழிகளுடன் விளக்க வேண்டும்.  விளக்கங்கள் கொடுக்கும் போது வெட்கப்படாமல், அவர்களின் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும்.

சிறந்த ஆசிரியர்களிடம் விளக்கங்கள் கொடுக்கும் திறமையை கற்றுக் கொள்ளலாம். அவர்கள் பல மனநிலையிலுள்ள, வேறுபட்ட அறிவுள்ள மாணவர்களிடம் அவர்களின் கவனத்தை குவிக்க வைத்து, சிறிதும் தொய்வில்லாமல் அவர்களுக்கு புரியும்படி பாடத்தை விளக்குவார்கள்.


PLEASE READ ALSO: மிகவும் மரியாதைக்குரிய உயர் அதிகாரிகள் செய்யும் 20 விஷயங்கள்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons