பால் பண்ணை தொழில் செய்து முன்னேற நினைப்பவர்களுக்கான மாபெரும் கால்நடை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் : PDFA Dairy & Cattle Expo 2016

Share & Like

கிராமங்களின் பொருளாதராத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலத்தின் மாற்றத்திற்கேற்ப விவசாயிகளும் தங்களுக்கு அதிக வருவாய் ஈட்டக்கூடிய தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. பசு மாடுகளின் பால், வருவாய் ஈட்டித் தரும் ஒன்றாக உள்ளது. இத்தகைய பாலை மூலாதாரமாக கொண்டு, பால்பண்ணை தொழில் செய்து விவசாயிகள் வெற்றி அடையலாம்.

பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலாவது இடத்தில் உள்ளது என்பது குறிபிடத்தக்கது. 

PDFA Dairy & Cattle Expo

பால் பண்ணை (dairy farm) தொழிலுக்காக, மாபெரும் கால்நடை கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் கறவைகளுக்கானப்  போட்டி PDFA Dairy & Cattle Expo 2016, ஈரோட்டில் ஜூன்  18 மற்றும் 19 தேதிகளில் நடைப்பெறவுள்ளது. 

தொழில் ரீதியாக, மிகப்பெரிய அளவில் பால்பண்ணை வைக்க விரும்புவோருக்கு, இந்த PDFA Dairy & Cattle Expo 2016 கண்காட்சி உதவிகரமாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியை Progressive Dairy Farmers Association (PDFA), Tamilnadu முற்போக்கு பால் பண்ணையாளர்கள் சங்கம்) ஏற்பாடு  செய்துள்ளது.

பால் பண்ணை தொழில் தொடர்பான பல நிகழ்ச்சிகள் PDFA Dairy & Cattle Expo 2016 -ல் நடைப்பெறவுள்ளது.  

நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள்:

PDFA Dairy & Cattle Expo 2016 நிகழ்ச்சியில் பால் தொழில் சார்ந்த வல்லுநர்கள், பால் பண்ணையாளர்கள், விவசாய பண்ணை உரிமையாளர்கள், பால் கொள்முதல் நிறுவனங்கள், ஆலோசகர்கள், NGOs, பால் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் (Dairy Machinery and Equipment Manufacturers), பால் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள்,மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை தீவின உற்பத்தியாளர்கள்,  கால்நடை உணவு மற்றும் உணவு சார்ந்த இயந்திர உற்பத்தியாளார்கள் போன்றோர்கள் பங்குபெற உள்ளனர். 

 கருத்தரங்கு தலைப்புக்கள்

PDFA DAIRY AND CATTLE EXPO

  • ஏன் செயற்கை கருவூட்டல்? – கறவை இன மேம்பாடு (Breed Improvement),
  • எளிய வங்கிகடன் திட்டங்கள் – பண்ணை விரிவாக்கம் (Dairy Management),
  • கன்று முதல் கறவை 24 மாதங்களில் – கன்று வளர்ப்பு (Calf Rearing),
  • சந்தோச கறவைகள் – கறவை நலம் (Cow Comfort),
  • இரைப்பை மேலாண்மை – இலாபத்தை அதிகரித்தல் (Maximizing Profits),
  • தீவின திட்டமிடுதல் – செலவு குறைப்பு (Cost Cutting).
நடைப்பெறும் இடம் மற்றும் நேரம்

PDFA Dairy & Cattle Expo 2016 நிகழ்ச்சி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் ஈரோட்டில் நடைபெறவுள்ளது. 

ஸ்ரீ லட்சுமி துரைசாமி மகால்,
நசியனார் ரோடு , ஈரோடு, தமிழ்நாடு.

மேலும் விவரங்களுக்கு மற்றும் கருத்தரங்கிற்கு பங்கேற்க, பதிவுசெய்ய  

http://www.pdfaexpo.com/ 

தொடர்பு எண் : +91-9677198458, +91-7373600602

பால் பண்ணை தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கண்காட்சி ஒரு பயனுள்ளதாக அமையும். 


Please Read Also: இலவச மீன் வளர்ப்பு பயிற்சி தஞ்சாவூர் மாவட்டத்தில்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons