தொழில் முனைவோர்கள் அரசாங்க செலவில் சர்வதேச வர்த்தக நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்கலாம்

Share & Like

மத்திய அரசு தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு பல வித சலுகைகள் மற்றும் உதவிகளை செய்து வருகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (Ministry of Micro, Small & Medium Enterprises-MSME) உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியடைய பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தொழில்முனைவோர்கள் தங்களது தொழிலை உலகெங்கும் விரிவடைய செய்ய வேண்டுமானால் உலக வர்த்தக கண்காட்சிகள், மாநாடுகள், கருத்தரங்குகள், வாங்குபவர் விற்பவர் சந்திப்பு (Buyer-Seller Meets) மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்பது மிகவும் அவசியமானது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நடத்தும் தொழில்முனைவோர் உலக வர்த்தக நிகழ்ச்சிகளில் பங்கேற்க Micro, Small & Medium Enterprises (MSME) நிதி உதவிகளை வழங்குகிறது. Providing financial assistance on International Cooperation Scheme என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச நிகழ்ச்சியில் பங்கேற்கும் தொழில்முனைவோர்களுக்கு நிதி உதவிகளை MSME அளிக்கிறது.

International Cooperation Scheme
Image Source: gurtam.com
யாரால் நிதி உதவி பெற முடியும்? 
  • MSMEs-யில் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் தொழில்சாலைகள் (Industry). 
  • பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் / அறக்கட்டளைகள் (Registered Societies/Trusts).
  • மாநிலம் / மத்திய அரசு அமைப்புக்கள்.
நிதி உதவி (Financial Assistanc) பெற தகுதிகள்

சர்வதேச நிகழ்ச்சிக்கு பங்கேற்க நிதி உதவி பெற விரும்பும் நிறுவனங்கள் தங்களுக்கு பொருத்தமான அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு நிறுவனங்கள் The Companies Act கீழும், சங்கங்கள் the Societies Act கீழும் பதிவு செய்திருக்க வேண்டும்.

நிறுவனங்கள் சர்வதேச நிகழ்ச்சி சார்ந்த தொழில்களில் நல்ல நிலையில் குறைந்தது 3 ஆண்டுகள் ஈடுபட்டிருக்க வேண்டும்.

நிறுவனங்களில் கடைசி 3 ஆண்டுகளாக கணக்குகளை தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சர்வதேச நிகழ்ச்சியில் (events) பங்கேற்கும் நிறுவனங்கள், அவர்களின் வளர்ச்சிக்கு அந்த நிகழ்ச்சி முக்கியமானதாக இருக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்திற்கு ஒரு நிதியாண்டில் (a financial year) ஒரு தடவை மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிதி உதவி வழங்கப்படும். ஒரே ஆண்டில் இரண்டாவது முறை நிதி உதவி வழங்கப்படமாட்டாது.

முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்ற தொடர்பான பில்கள் (bills) / அறிக்கைகள் (reports) / ஆவணங்கள் (documents) அமைச்சகத்திடம் சமர்பித்திருக்க வேண்டும்.

 International Cooperation scheme
Image Credit: scouts.org
எந்த நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு நிதி உதவி பெறலாம்

தகுதியான நிறுவனங்கள் சர்வதேச நிகழ்ச்சியில் பங்கேற்க நிதி உதவிகளுக்கு Micro, Small & Medium Enterprises அமைச்சகத்தில் விண்ணபிக்கலாம்.

வெளிநாடுகளில் நடக்கும் சர்வதேச கண்காட்சிகள், வர்த்தகங்கள், நிகழ்ச்சிகள், வாங்குபவர் விற்பவர் சந்திப்புகள் ( International Exhibitions/Trade/Fairs/Buyer-Seller Meets) பங்கேற்க:

 

கண்காட்சி இடம் வாடகைக்கு தொகை அதிகபட்சமாக 1 இலட்சம் வரையிலும் நிதி உதவி வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு economy class விமான பயண சீட்டு தொகை அதிகபட்சமாக 1.5 இலட்சம் வழங்கப்படும். 

நிறுவன நிர்வாகிக்கு உணவு, தங்கும் இடம், பயண செலவு போன்ற செலவுகளுக்கு ஒரு நாள்களுக்கு $.150 டாலர் வழங்கப்படும்.

5 தொழில் முனைவோர் மற்றும் 1 நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.


PLEASE READ ALSO: தொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI


இந்தியாவில் நடக்கும்  சர்வதேச  கண்காட்சிகள், வர்த்தகங்கள், நிகழ்ச்சிகள், வாங்குபவர் விற்பவர் சந்திப்புகள் பங்கேற்க:

கண்காட்சி இடம் வாடகைக்கு தொகை அதிகபட்சமாக 1 இலட்சம் வரையிலும் நிதி உதவி வழங்கப்படும்.

 

வெளிநாடுகளுக்கு நிறுவன வர்த்தக பிரதிநிதிகள் குழுவினர் (MSME Business Delegations) செல்ல:

 நிறுவனங்களுக்கு economy class விமான பயண சீட்டு தொகை அதிகபட்சமாக 1.5 இலட்சம் வழங்கப்படும். 

நிறுவன நிர்வாகிக்கு உணவு, தங்கும் இடம், பயண செலவு போன்ற செலவுகளுக்கு ஒரு நாள்களுக்கு $.150 டாலர் வழங்கப்படும்.

5 தொழில் முனைவோர் மற்றும் 1 நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

 

சர்வதேச மாநாடுகள் / கருத்தரங்குகள் (International Conferences/Seminars) பங்கேற்க:

பங்கேற்பவருக்கு விமான பயண சீட்டு தொகை அதிகபட்சமாக 1.5 இலட்சம் வழங்கப்படும். 

நிதி உதவி பெற விண்ணபிக்க

http://msme.gov.in தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம் அல்லது  Micro, Small & Medium Enterprises (MSME) அமைச்சகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள MSME அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

http://msme.gov.in/Web/Portal/Schemes.aspx

முகவரி : 

Director (International Cooperation), Ministry of MSME, Udyog Bhavan, New Delhi 110 011.


PLEASE READ ALSO: பெண்கள் தொழில் முனைவோர்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை விற்க மத்திய அரசின் Mahila E-haat ஆன்லையின் தளம்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons