மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த பல்வேறு பதிவுகள் மற்றும் உரிமங்களை பெற ஒரே ஆன்லைன் போர்டல்: eBiz

Share & Like

ஒரு தொழிலை தொடங்கவேண்டும் என்றாலும், தொழிலை விரிவுபடுத்தவேண்டும் என்றாலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு அனுமதிகள், ஒப்புதல்கள், பதிவுகள், அங்கீகாரங்கள் மற்றும் உரிமங்களை பெற வேண்டியிருக்கும். இதற்காக பல அரசு துறைகள், அலுவலகங்கள் மற்றும் அமைச்சகத்திடம் விண்ணபித்து அவற்றின் அனுமதிகளை பெறவேண்டியுள்ளது.

இத்தகைய பல்வேறு தொழில் சார்ந்த பதிவுகள் மற்றும் உரிமங்களை (licenses) பெற விண்ணப்பிப்பதற்கு அதிக காலமும், உழைப்பும் தேவைப்படுகிறது. இதற்கான கால விரயத்தை தவிர்க்கவும் மற்றும் எளிதாக தொழிலை தொடங்கும் பொருட்டும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

www.ebiz.gov.in

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த பல்வேறு பதிவு மற்றும் உரிமங்களை பெற ஒருங்கிணைந்த www.ebiz.gov.in என்ற ஒரே ஆன்லைன் போர்டல் உள்ளது.

உலகவங்கியின் எளிதாக தொழில் செய்யும் நாடுகள் (Ease Of Doing Business) பட்டியலில் இந்தியா 142 வது இடத்தில் இருந்து 130 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

eBiz -யில் இடம்பெற்றுள்ள சேவைகள்

eBiz போர்டலில் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த சேவைகள் இடம்பெற்றுள்ளன. eBiz ஆன்லைன் போர்டல் தொழிலுக்கு தேவையான மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் (clearances), உரிமங்கள் (licenses), அனுமதிகள் (permissions), அங்கீகாரம் (approvals) மற்றும் பல்வேறு பதிவுகளை (registrations) பெறுவதற்கு தேவையான துறைகளை அணுகுவதற்கு உதவுகிறது.

இது தொடர்பான தகவல்களை eBiz தளத்தின் மூலம் பெற முடியும். வரி  (tax) மற்றும் பிற ஒழுங்கு அறிக்கைகளை தாக்கல் செய்யலாம்.

தொழில் உரிமங்களை பெற மின்னணு முறையில் முத்திரை கட்டணம், வரி, சேவை கட்டணம் போன்றவற்றை  eBiz தளத்திலிருந்து செலுத்திகொள்ளலாம்.

விண்ணப்ப நிலவரத்தை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். பல்வேறு அரசு துறைகளுடன் eBiz மூலம் தொடர்புகொள்ளலாம். தொழில் சார்ந்த உரிமங்கள் மற்றும் பல அனுமதிகளை புதுபித்து கொள்ளலாம்.

eBiz portal

Industrial Licence,  Importer Exporter Code, Tax Deduction & Collection Account Number,  Certificate of Incorporation, Employees’ State Insurance Corporation (ESIC)  RegistrationDirector Identification Number(DIN)Employees’ Provident Fund Organization (EPFO) Registration

Permanent Account Number, Reporting of FC-TRS (Transfer of shares)Filing of Industrial Entrepreneurs Memorandum, CentralReporting of Advance Foreign Remittance to RBIUnified Registration for 5 labour acts – (ESIC, EPFO, BOCW, CLA, ISMW) போன்ற பல பதிவுகள் மற்றும் உரிமங்களுக்கு eBiz ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் டெல்லி போன்ற சில மாநில சேவைகளும்  eBiz ஆன்லைன் உள்ளது.

eBiz -யில் இடம்பெற்றுள்ள அரசு துறைகள் 

eBiz தளத்தில் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு துறைகளின் சேவைகளை பெறலாம்.  Central Board Of Direct Taxes (CBDT)Ministry of Corporate AffairsEmployee State Insurance CorporationDepartment of Industrial Policy and Promotion (DIPP)Employees Provident Fund OrganizationDirectorate General of Foreign TradeDepartment Of Heavy Industries மற்றும் Safety Organization போன்ற மத்திய அரசின் துறைகள் eBiz தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் டெல்லி போன்ற பல மாநில தொழில் சார்ந்த துறைகளும் eBiz ஆன்லைன் உள்ளது.

eBiz போர்டலில் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த தகவல்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். 


Please Read Also:

STARTUP INDIA PORTALஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்ய, முதலீடு மற்றும் அரசின் உதவிகளை பெற மத்திய அரசின் Startup India Portal மற்றும் Mobile App


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons