மின்னணு சிஸ்டம் டிசைன் மற்றும் தயாரிப்பு சார்ந்த தொழில்முனைவோர்களை உருவாக்கும் முயற்சி : மத்திய அரசின் MeitY துறை தொடங்கிய ‘Electropreneur Park’

Share & Like

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (The Ministry of Electronics and Information Technology (MeitY)) மின்னணு சிஸ்டம் டிசைன் மற்றும் தயாரிப்பு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்காக ‘Electropreneur Park’ இன்குபேட்டார் மையத்தை தில்லி பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளது.  

இந்த Electropreneur Park ஐ Software Technology Parks of India (STPI), Delhi University (DU) மற்றும் Indian Electronics and Semiconductor Association (IESA) ஆகியவற்றுடன் இணைந்து அமைத்துள்ளது.

Electropreneur park

இந்த Electropreneur Park ல் 5 ஆண்டுகளில், மின்னணு சிஸ்டம் டிசைன் மற்றும் தயாரிப்பு (Electronic System Design & Manufacturing – ESDM) சார்ந்த 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்காகவும், இதில் குறைந்தது 5 உலகளாவிய நிறுவனங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இன்குபேட்டார் மையம் (incubation centre) தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மின்னணு சிஸ்டம் டிசைன் மற்றும் தயாரிப்பு (ESDM) நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டிகள், வசதிகள் மற்றும் அறிவுரைகளை வழங்குதல், மேம்பாடுகள், நிறுவனங்களின் மதிப்பை கூட்டி தயாரிப்பை மேம்படுத்துதல் (product development), கண்டுபிடிப்புகளை (innovations) உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல், Research and development (R&D) ஐ ஊக்குவித்தல், தயாரிப்பு முன் மாதிரியை உருவாக்குதல் (prototyping), தயாரிப்பை வணிகமயமாக்கல் (commercialisation) மற்றும் இது போன்ற பல உதவிகளை Electropreneur Park ல் பெறலாம்.

இந்த ‘Electropreneur Park’ இன்குபேட்டார் மையத்தில் சர்வதேச தரத்திலான ஆய்வகங்களை (laboratories) வழங்கும். தொழிலில் மிகுந்த அனுபவம் உள்ளவர்களை கொண்டும், கல்வியாளர்களை கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை (mentorship) வழங்கும். வரிகள் (taxation), சட்டம் (legal), நிதி (finance), கணக்கியல் (accounting), காப்புரிமை தேடல் (patent search), பயிற்சிகள் போன்ற பல வணிக ஆலோசனைகளையும் கொடுக்கும்.

மேலும் மின்னணு சிஸ்டம் டிசைன் மற்றும் தயாரிப்பு சார்ந்த ஸ்டார்ட் அப் தொழிலுக்கு தேவையான முதலீட்டு நிதியை (funding) பெறுவதற்கும் தேவையான உதவிகளை செய்யும். 

இதுவரையில் இந்த Electropreneur Park ல் பங்கேற்பதற்காக 175 விண்ணப்பங்கள் தொழில்முனைவோர்களிடமிருந்து வந்துள்ளது. ஏற்கனவே 6 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.

மத்திய அரசு தொழில்முனைவோர்களை மேம்படுத்துவதற்காக ‘Make in India’, ‘Digital India’, ‘Startup India, Standup India’ ஆகிய திட்டங்களை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Please Read Also: 

government schemes

NIDHI திட்டம் : அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்கான ரூ .100 கோடி திட்டம்

 

 

Electronics Development Fund (EDF)2

மின்­னணு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு நிதி உதவி அளிக்கும் மத்திய அரசின் Electronics Development Fund (EDF)

 


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons