ஏன் நாம் தொழில் செய்ய வேண்டும், அதனால் நாட்டிற்கு என்ன பயன்? ஏன் மத்திய அரசு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறது?
நம் நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு என இரு அரசுகள் செயல்படுகின்றன, அவற்றுக்கு வருமானம் பின்வரும் வழிகளில் மட்டுமே கிடைக்கிறது
நிறுவனங்களின் இலாபம் மீதான வரி, வருமான வரி, சேவை வரி, சொத்து வரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி, அரசு நிறுவனங்கள் வழங்கும் லாபம், அரசு கொடுத்த கடனுக்கான வட்டி, இன்னும் சில …..
அரசுக்கு அதிகமான வருவாய் (revenue), நிறுவனங்களின் லாபம் மீதான வரி மூலமே கிடைக்கிறது இது மொத்த அரசு வருவாயில் 40% சதவிகிதம். அதாவது 5 லட்சம் கோடிக்குமேல்.
ஒரு நாடு என்பது ஒரு குடும்பம் போன்றதுதான், நம் மாத வருமானம் பத்தாயிரம் என்று வைத்து கொள்வோம். ஆனால் குடும்ப செலவு 12000 ஆகிறது செலவை தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வோம் கடன் வாங்குவோம். அது போலத்தான் நமது நாடும் வருவாய்க்கு மேல் செலவு செய்யும் போது கடன் வாங்குகிறது. இதைதான் வழக்கமாக நிதி அமைச்சர் கஜானா காலி என்று அறிவிக்கிறார் .
தொழில்முனைவோர்களாகிய (entrepreneurship) நாம் இந்த பற்றாக்குறையை போக்க அரசுக்கு உதவி செய்யலாம், நாம் சரியாக வரி செலுத்துவதன் மூலம், நாம் அதிகமாக ஏற்றுமதி மற்றும் உற்பத்தி செய்வதன் மூலம். உலகில் சீனா தான் செலவு போக 50% வருவாயை சேமிக்கிறார்கள். நாம் இன்னும் பற்றாக்குறை அரசாங்கமாகவே இருக்கிறோம். இப்போது புரிகிறதா ஒரு தொழில் முனைவோர் நாட்டின் வளர்ச்சிக்கு (growth) எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று .
உற்பத்தியாளர்கள் (manufacturer) தான் செய்யும் உற்பத்திக்கு, உற்பத்தி வரி மற்றும் விற்பனை வரி (இப்போது ஜிஎஸ்டி) செலுத்துகிறார் மற்றும் ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய நாடுகளின் பணத்தை நம் நாட்டிற்கு கொண்டு வருகிறார்.
மேலும் உள்நாட்டில் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பொருள்கள் கிடைக்கும்படி செய்யலாம். விலைவாசியும் குறையும் நாட்டின் வருமானம் பெருகும். இதனால்தான் அரசு உற்பத்தி்யாளர்களை உக்குவிக்கிறது, மற்றும் மானியம், இலவச மின்சாரம், உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் வாங்க மானியம் போன்ற சலுகைகளை வழங்குகிறது.
வியாபாரிகள் மற்றும் தரகர்கள் செலுத்தும் வரி வருவாய் விட உற்பத்தியாளர்கள் செலுத்தும் வரி வருவாய் அதிகம். அதனால்தான் அரசு பெரும்பாலும் வியாபாரிகளையும் தரகர்களையும் ஊக்குவிப்பதில்லை.
நீங்கள் எந்த தொழில் தொடங்கினாலும், உங்கள் இலக்கு ஒருநாள் உற்பத்தியாளர்களாக மாறவேண்டும் என்பதாக இருக்கட்டும். உலக சந்தையில் இல்லாத புதிய பொருள்களை அறிமுகம் செய்யவேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் உங்களிடம் இருந்து வந்தவண்ணம் இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் யார் அமெரிக்காவில் தொழில் தொடங்கினாலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் தான் தொழில் தொடங்குகிறார்கள்.
என்ன தொழில்முனைவோர்களே நாட்டிற்கு உங்களின் பங்களிப்பை அளிக்க தயாரா?
Please Read This Article:
வாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்
Disclaimer: This is an Contributor post from Mr.Santhosh Pillai (Director of NVRON Life Science ltd) . The statements, opinions and data contained in these publications are solely those of the contributors and not of TamilEntrepreneur.com.