மத்திய பட்ஜெட் 2016-17: தொழில் துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள்

Share & Like

மத்திய  நிதியமைச்சர்  அருண்  ஜேட்லி  தனது மத்திய பட்ஜெட்டை 2016-17   திங்கள்கிழமை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைகளுக்கு பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

UNION BUDGET 2016-17
                                IMAGE CREDIT: INDIANEXPRESS

மத்திய பட்ஜெட்  2016-17: தொழில் துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள்:

 

  • இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.
  • இந்தியாவை உற்பத்தி சமுதாயமாக மாற்றுவதற்கான கல்வித் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குதல்.
  • சிறு தொழிலில் கடன் வழங்க முத்ரா திட்டத்திற்கு ரூ.1.8 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கிக் கடன் திட்டத்தில் இதுவரை 2.5 கோடி பேருக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா (Start Up India, Stand Up India) திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பொதுத்துறை வங்கிகளின்  மேம்பாட்டுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு.

   PLEASE READ ALSO :  Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப்     இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்


  • ஸ்டார்ட் அப் திட்டங்களை (Start Up India, Stand Up India) ஊக்குவிக்கும் வகையில் கம்பெனி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
  • தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மற்றும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தொழில்மையம் அமைக்கப்படும். ஸ்டாண்ட் அப் இந்தியா (Start Up India, Stand Up India) திட்டத்தின் மூலம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறனை கூட்டும் வகையில் நாடு முழுவதும் ரூ.1700 கோடி செலவில் 1500 பன்முக திறன்சார் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 
  • இளம் தொழில்முனைவோர்களை  உருவாக்க 2200 கல்லூரிகள், 500 அரசு ஐடிஐ, 300 பள்ளிகள், 50 தொழிற்பயிற்சி மையங்களில் ஆன்லைன் மூலம் தொழில் படிப்புகள் தொடங்கப்படும்.
  • புதிய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ஊழியர்களுக்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சந்தா தொகையை முதல் 3 ஆண்டுகளுக்கு அரசே செலுத்தும்.
  • பெரிய ஷாப்பிங் மால்களை போன்று சிறிய கடைகளும் வாரத்தின் 7 நாட்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்படும்.
  • புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு.
  • உணவு உற்பத்தி துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுமென மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons