டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு

Share & Like

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை செய்யும் வணிகர்கள், நுகர்வோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இரண்டு புதிய பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. பணம் மதிப்பிழப்பு விவகாரத்தை அடுத்து நாட்டு மக்களை மின்னணு பணபரிவர்த்தனையை (digital payment) பயன்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. 

Img Credit: digitalready.co

இந்தநிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு (NITI Aayog | (National Institution for Transforming India)) மின்னணு பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் நுகர்வோர்களுக்கு ‘லக்கி கிரஹக் யோஜனா திட்டம்’ (Lucky Grahak Yojana) மற்றும் வணிகர்களுக்கு ‘டிஜி தன் வியாபார் யோஜனா திட்டம்’ (Digi Dhan Vyapari Yojans) என்ற இருவகையான பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.340 கோடிக்கு பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த் கூறுகையில், லக்கி கிரஹக் யோஜனா திட்டத்தின் கீழ், வரும் டிசம்பர் 25 முதல்  2017 ஏப்ரல் 14ம் தேதி வரை நுகர்வோர்களில் தினமும் 15,000 பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், வாரந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு ரூ.1 இலட்சம், ரூ. 10,000, ரூ. 5,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது

இதே போல் வியாபாரிகளுக்கான ‘டிஜி தன் வியாபார் யோஜனா’ திட்டத்தின் கீழ் வாரம்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு ரூ.50,000, ரூ.5,000 மற்றும் ரூ.2,500 மதிப்பிலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்னர் 2017 ஏப்ரல் 14ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும். நுகர்வோர்களுக்காக முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும், வணிகர்களுக்காக ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், மற்றும் ரூ.5 லட்சம் அறிவிக்கப்படும்.

இந்த இரு திட்டத்தின் கீழ் ரூ.3,000-க்குக் கீழ் மற்றும் ரூ.50-க்கு மேலான மதிப்புடைய பணபரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

UPI, USSD, Aadhar Enabled Payment System (AEPS) மற்றும் RuPay cards போன்ற அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் இந்தப் பரிசு போட்டிக்குத் தகுதியானவை என அவர் கூறியுள்ளார். The National Payment Corporation of India (NPCI) இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தும்.


Please Read This Article:

fiverr.COMதொழிலுக்கான கிராபிக்ஸ், வடிவமைப்பு, வீடியோ, அனிமேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பல தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் Fiverr.com


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons