ஆசிய பசிபிக் நாடுகளில் பணக்காரர்களின் (Multi-Millionaire) வளர்ச்சி அடிப்படையில் முதல் 20 நகரங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன

Share & Like

 

IMAGE CREDIT :REUTERS
IMAGE CREDIT :REUTERS

   2004 டிசம்பர் முதல் 2014 டிசம்பர் வரையிலான ஆசிய-பசிபிக் (Asia Pacific (Apac)) நாடுகளில் மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) வளர்ச்சி அடிப்படையில் முதல் 20 நகரங்களை (The 20 fastest growing cities for the super-rich in Asia Pacific) NEW WORLD WEALTH நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.    

     வியட்நாம் நாட்டிலுள்ள ஹோ சி மின் (Ho Chi Minh) நகரம் 400% வளர்ச்சியுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டு 40-ஆக இருந்த மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தா 396% வளர்ச்சியுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டு 280-ஆக இருந்த மில்லியனர்களின் (Multi-millionaires) எண்ணிக்கை 1390-ஆக உயர்ந்துள்ளது.


PLEASE READ ALSO: மொத்த தனிநபர் சொத்து மதிப்பு (Total individual wealth) அடிப்படையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது


மில்லியனர்களின் (MultiMillionaires) வளர்ச்சி பட்டியலில் உள்ள இந்திய நகரங்கள்:

 

   புனே நகரம் 317% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளது. புனே நகரில் 2004-ஆம் ஆண்டு  60-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires)  எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 205- ஆக உயர்ந்துள்ளது.  

   மும்பை நகரம் 220% வளர்ச்சிப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. 2004-ஆம் ஆண்டு 840-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 2,690-ஆக அதிகரித்துள்ளது.  

   ஹைதராபாத் நகரம் 219% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 5-ஆம் இடத்தில் உள்ளது. 2004-ஆம் ஆண்டு 160-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires)  எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 510- ஆக வளர்ச்சிப் பெற்றுள்ளது. 

   பெங்களுரு நகரம் 214% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 6-ஆம் இடத்தில் உள்ளது. பெங்களுரு நகரில் 2004-ஆம் ஆண்டு 140-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires)  எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 440-ஆக உயர்ந்துள்ளது.  

   டெல்லி நகரம் 214% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ளது.  2004-ஆம் ஆண்டு 430-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires)  எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 1,350-ஆக உயர்ந்துள்ளது.  

   சென்னை நகரம் 200% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 9-ஆம் இடத்தில் உள்ளது. சென்னை நகரில் 2004-ஆம் ஆண்டு 130-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires)  எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 390-ஆக உயர்ந்துள்ளது.  

  கொல்கத்தா நகரம் 171% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 12-ஆம் இடத்தில் உள்ளது. 2004-ஆம் ஆண்டு 210-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires)  எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 570-ஆக உயர்ந்துள்ளது.  

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons