ஆசிய பசிபிக் நாடுகளில் பணக்காரர்களின் (Multi-Millionaire) வளர்ச்சி அடிப்படையில் முதல் 20 நகரங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன
2004 டிசம்பர் முதல் 2014 டிசம்பர் வரையிலான ஆசிய-பசிபிக் (Asia Pacific (Apac)) நாடுகளில் மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) வளர்ச்சி அடிப்படையில் முதல் 20 நகரங்களை (The 20 fastest growing cities for the super-rich in Asia Pacific) NEW WORLD WEALTH நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
வியட்நாம் நாட்டிலுள்ள ஹோ சி மின் (Ho Chi Minh) நகரம் 400% வளர்ச்சியுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டு 40-ஆக இருந்த மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தா 396% வளர்ச்சியுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2004 ஆம் ஆண்டு 280-ஆக இருந்த மில்லியனர்களின் (Multi-millionaires) எண்ணிக்கை 1390-ஆக உயர்ந்துள்ளது.
PLEASE READ ALSO: மொத்த தனிநபர் சொத்து மதிப்பு (Total individual wealth) அடிப்படையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது
மில்லியனர்களின் (MultiMillionaires) வளர்ச்சி பட்டியலில் உள்ள இந்திய நகரங்கள்:
புனே நகரம் 317% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளது. புனே நகரில் 2004-ஆம் ஆண்டு 60-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 205- ஆக உயர்ந்துள்ளது.
மும்பை நகரம் 220% வளர்ச்சிப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. 2004-ஆம் ஆண்டு 840-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 2,690-ஆக அதிகரித்துள்ளது.
ஹைதராபாத் நகரம் 219% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 5-ஆம் இடத்தில் உள்ளது. 2004-ஆம் ஆண்டு 160-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 510- ஆக வளர்ச்சிப் பெற்றுள்ளது.
பெங்களுரு நகரம் 214% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 6-ஆம் இடத்தில் உள்ளது. பெங்களுரு நகரில் 2004-ஆம் ஆண்டு 140-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 440-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி நகரம் 214% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ளது. 2004-ஆம் ஆண்டு 430-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 1,350-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை நகரம் 200% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 9-ஆம் இடத்தில் உள்ளது. சென்னை நகரில் 2004-ஆம் ஆண்டு 130-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 390-ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தா நகரம் 171% வளர்ச்சியுடன் இந்த பட்டியலில் 12-ஆம் இடத்தில் உள்ளது. 2004-ஆம் ஆண்டு 210-ஆக இருந்த மல்டி-மில்லியனர்களின் (Multi-Millionaires) எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு 570-ஆக உயர்ந்துள்ளது.