மார்க் ஜுக்கர்பெர்க், பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், எலன் மஷ்க் போன்ற தொழில் முனைவோர்கள் மற்றும் தலைவர்களுக்கு பிடித்த புத்தகங்கள்
“நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்” ஆபிரகாம் லிங்கன் கூறியது.
புத்தகங்கள் அறிவின் புதையலாக விளங்குகின்றன. வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான வலிமையை புத்தகங்கள் கொடுக்கின்றன.
சில தொழில்முனைவோர்கள் மற்றும் தலைவர்களுக்கு பிடித்த புத்தகங்கள்
Jeff Bezos
E-commerce சந்தையில் உலகின் முதன்மையான நிறுவனம் Amazon. Amazon நிறுவனத்தை தொடங்கியவர் Jeff Bezos. ஜெப் பெசாஸின் சொத்து மதிப்பு $59.2 பில்லியன் டாலர். Forbes நாளிதழின் 2016-ஆம் ஆண்டு உலகின் பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
Jim Collins மற்றும் Jerry Porras எழுதிய Built to Last: Successful Habits of Visionary Companies என்ற புத்தகத்தை தொழிலுக்காக Bezos பரிந்துரைத்தார். The Remains of the Day என்ற புத்தகம் Kazuo Ishiguro’s வெளியிட்ட மூன்றாவது நாவலாகும். இந்த புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்த புத்தகம் என 2009 Newsweek க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
Please Read Also:
அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்
Bill Gates
Microsoft நிறுவனத்தின் துணை நிறுவனர் Bill Gates. இந்த நூற்றாண்டின் மிகவும் முக்கியமான தொழிலதிபர். John Brooks எழுதிய Business Adventures அவருக்கு பிடித்த புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தை வாரன் பஃபெட் (Warren Buffet) அவருக்கு பரிந்துரைத்தார். மேலும் J D Salinger’s எழுதிய The Catcher in the Rye என்ற புத்தகமும் அவருடைய கண்டிப்பாக படிக்க வேண்டிய பட்டியலில் உள்ளது.
Mark Zuckerberg
Facebook-ஐ தொடங்கிய மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg). உலகின் மிக இளம் வயது கோடிஸ்வரர். Moises Naim’s எழுதிய The End of Power என்ற புத்தகம் அவர் தேர்தெடுத்து புத்தகம் ஆகும். 2010 ஆம் ஆண்டு New Yorker இதழில் Virgil எழுதிய The Aeneid என்ற புத்தகம் தனக்கு பிடித்த புத்தகம் என குறிப்பிட்டிருந்தார். அவர் பள்ளியில் படிக்கும் போது முதன்முதலாக அந்த புத்தகத்தை படித்தார்.
Please Read Also:
உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்
Elon Musk
எலன் மஷ்க் (Elon Musk) PayPal நிறுவனத்தை தொடங்கியவர். Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, SolarCity நிறுவனத்தின் தலைவர், OpenAI நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார்.
JRR Tolkien எழுதிய The Lord of the Rings, Walter Isaacson எழுதிய Einstein: His Life and Universe, Douglas Adams எழுதிய The Hitchhiker’s Guide to the Galaxy ஆகிய புத்தகங்கள் அவருக்கு மிகவும் பிடித்த வையாகும்.
Please Read Also:
Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்
Sundar Pichai
சுந்தர் பிச்சை உலகின் மிகப் பெரிய நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரி. Game of Thrones கற்பனை நாடகம் மற்றும் science fiction சார்ந்த புத்தகங்களின் ரசிகர் ஆவார்.
Please Read Also:
தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய சுந்தர் பிச்சை வெற்றி கதை
Steve Jobs
Steve Jobs ஐ தொழில்நுட்ப துறையின் தந்தையென்றே கூறலாம். Apple நிறுவனத்தை தொடங்கியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். Apple நிறுவனம் இன்று தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ளது. உலகம் அவரின் வாழ்க்கை பாடத்திலிருந்து அதிகபட்ச ஊக்கத்தை பெற்றது. Ayn Rand’s எழுதிய Atlas Shrugged, George Orwell’s எழுதிய 1984, Herman Melville’s எழுதிய Moby Dick ஆகிய புத்தகங்கள் Steve Jobs க்கு பிடித்த புத்தகங்கள் ஆகும்.
Tim Cook
Apple நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Tim Cook ஆவார். இவர் Apple நிறுவன ஊழியருக்கு Jr. George Stalk எழுதிய Competing Against Time என்ற புத்தகத்தை படிக்க அடிக்கடி பரிந்துரைப்பார்.
Indra Nooyi
உணவு மற்றும் குளிர்பானங்கள் தொழிலில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள PepsiCo நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி (Indra Nooyi) ஆவார். Forbes இதழின் உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களில் முதல் 20 இடத்திற்குள் இடம்பெறுபவர். David Brooks எழுதிய The Road to Character என்ற புத்தகம் தனக்கு பிடித்த புத்தகம் என்று Fortune இதழுக்கு தெரிவித்தார். Gary Burnison எழுதிய No Fear of Failure புத்தகத்திலிருந்து எப்படி நிர்வாகியாகுவதை கற்றுக்கொண்டதாக fastcompany இணைத்தள பேட்டியில் தெரிவித்தார்.
Satya Nadella
உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான Microsoft ன் தலைமை செயல் அதிகாரி Satya Nadella. அவர் தனக்கு பிடித்த புத்தகமாக தேர்ந்தெடுத்தது Michael Harris ன் The End of Absence: Reclaiming What We’ve Lost in a World of Constant Connection, Judy Wajcman வுடைய Pressed for Time: The Acceleration of Life in Digital Capitalism புத்தகம், Daniel J. Levitin எழுதிய The Organised Mind: Thinking Straight in the Age of Information Overload புத்தகம் ஆகும்.
Narendra Modi
பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் (Mann ki baat) நிகழ்ச்சியில் உரையாற்றும்போது ஒருமுறை சொன்னார். ” பெஞ்சமின் பிராங்க்ளின் சுயசரிதை (Benjamin Franklin’s biography) எனக்கு நிறைய ஊக்கங்களை கொடுத்தன”.
“எனக்கு பெஞ்சமின் பிராங்க்ளின் சுயசரிதையை படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் 18 நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது சுயசரிதை எழுச்சியூட்டுபவை.
எப்படி ஒரு நபர் புத்திசாலித்தனமாக அவரது வாழ்க்கை மாற்ற முயற்சி செய்யலாம். நமக்கு அதிகப்படியான தூக்கம் உணர்வு இருந்தால், எப்படி என்று நாம் அதை கட்டுபடுத்த முடியும்? நமக்கு அதிகமாக சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது என்றால், அதை குறைபதற்கான வேலையை எப்படி செய்வது? உங்களின் வேலை அழுத்தம் காரணமாக மக்களை சந்திக்க முடியாமல் போனால், அவர்களின் வருத்தைத்தை போக்குவது எப்படி? இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான வழியை, அவரது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் ஒவ்வொருவரிடமும் பெஞ்சமின் பிராங்க்ளின் சுயசரிதை படிக்க வேண்டும் என்று கூறுவேன். இன்றும் கூட இது எனக்கு ஊக்கம் கொடுக்கிறது”
Please Read Also:
உலகையே அசத்திய 14 வயது விஞ்ஞானி : சிவா அய்யாதுரை