கூகுள் நிறுவனர் லாரி பேஜ் கூரிய வெற்றிக்கான 10 விதிகள்
லாரி பேஜ் (Larry Page) கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் இணைந்து ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆய்வுத் திட்டத்துக்காக மேற்கொண்ட ஆராய்ச்சியில் உருவாக்கியதுதான் கூகுள் தேடு பொறி (Google search Engine). 1998 ஆம் ஆண்டில் 10 லட்சம் டாலர் முதலீட்டில் கூகுள் தொடங்கப்பட்டது. கூகுள் தொடங்குவதற்கு முன்னரே ஏரளாமான தேடு பொறி இணையதளங்கள் இருந்தன. லாரி பேஜின் சிறப்பான தலைமை பண்பின் காரணமாக இன்று கூகுள் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான இணையதளமாக உள்ளது.
கூகுள் நிறுவனர் லாரி பேஜ் கூரிய வெற்றிக்கான 10 விதிகள்
- பெரிய இலக்குகளை நிர்ணயுங்கள்
- தோல்விகளுக்கு பயப்படாதீர்கள்.
- நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கட்டமையுங்கள்.
- உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.
- சிறந்த ஐடியாக்களை வைத்திருங்கள். பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு சிறந்த ஐடியாக்கள் இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள்.
- பெரிய பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள்தான் தொழிலுக்கு மூல காரணம். கூகுளும் தகவல் கிடைப்பதில் நமக்கு ஏற்பட்ட பிரச்சனையின் தீர்வுதான்.
Please Read Also: சிக்கல்களும் நமக்கு வாய்ப்புகளே !
- சவால்களை ஏற்றுகொள்ளுங்கள்.
- ஒரே நிலையில் தங்கிவிடாதிர்கள். சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
- மாற்றங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- உங்கள் கனவுகளை பின்பற்றுங்கள் (Follow Your Dreams).
PLEASE READ ALSO: மார்க் கியூபனின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான 12 விதிகள்