பேரிடர் நிகழ்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள நாம் கற்றுகொள்வது காலத்தின் கட்டாயம்

Share & Like

இருபத்தோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த பின்னர் ஏறத்தாழ மூன்று பெரும் சோதனைகளை தமிழகம் கடந்துள்ளது. ஒன்று 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, இரண்டாவது 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயல், மூன்றாவது கடந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை மற்றும் கடலூர் பெருவெள்ளம். இம்மூன்றுமே தண்ணீர் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு, அரசு வல்லுநர்கள், மக்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நிறைய அனுபவங்களையும் பாடங்களையும் சேர்த்துக் கற்பித்துள்ளன.

பேரிடர்
IMAGE CREDIT: LIVEMENT

அரசும், தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவை இணைந்து அசுர வேகத்தில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டன. வெள்ளத்தில் மூழ்கிய நிமிடங்களில் தங்களின் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று எண்ணிய சென்னைவாசிகளின் மனதில் சில வெளிச்சக் கீற்றுகளை நிவாரணப் பணிகள் ஏற்படுத்தியது. அத்துடன் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மாவட்டங்களில் இருந்து வந்த தன்னார்வக் கரங்களின் உதவிகள் சமுதாயத்தில் ஒரு கூட்டுணர்வை (Collective Consciousness) ஏற்படுத்தியுள்ளது. பெரும் பாதிப்பு என்றபோதிலும் மனிதநேயத்தின் மகத்துவத்தை சென்னை மழைவெள்ளம் உருவாக்கியுள்ளதை நம்மால் உணர முடிகிறது.


PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra


பொதுவாக எந்த பெரிய சோதனையாக இருந்தாலும், அது குறிப்பிட்ட காலத்திற்குத் தாக்கங்களை எழுப்புவதும் பின் அந்த உணர்வுகள் மங்கி மறைவதும் வழக்கம். அரசு செய்ய வேண்டிய மிக முக்கிய செயல் என்னவென்றால், வெள்ள நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (Department For Disaster Management) என்ற புதிய துறையை ஏற்படுத்தி ஒவ்வொரு மாவட்ட அளவிலும் இத்துறையின் பிரிவுகள் உருவாக்கப்பட்டு இணைக்கப்படவேண்டும். வெள்ள நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆண்டு முழுக்க திட்டங்களை  தீட்டி செயல்படவேண்டும்.

தமிழகத்தை கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்கள் என வகைபடுத்தி, அதற்கேற்ப வெள்ள நிர்வாக மற்றும் நிவாரணத் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். இத்திட்டம், சமுதாய ஒத்துழைப்புடன் (Community Consultations) செயல்படுமானால், எந்தப் பேரிடர்களையும் நம்மால் துணிச்சலோடு எதிர்கொள்ள முடியும்.

மாவட்டந்தோறும் சமூகப் பணியாளர்களை (Social Workers) நியமித்து, அவர்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  பயிற்சி அளிக்கவேண்டும்.சுயவுதவிக் குழுக்களைப் பயன்படுத்தி கிராமப்புறங்களில் பேரிடர் விழிப்புணர்வு முகாம்களைச் செயல்படுத்தலாம்.  தகவல் தொடர்பு சாதனங்களை மற்றும் சமூக ஊடகங்களை பேரிடர் காலங்களில் சரியாக பயன்படுத்த பழகிக் கொள்ளவேண்டும். நமக்குள் குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு பேரிடர் காலங்களில் எல்லாவற்றையும் அரசிடமிருந்து எதிர்பார்க்காமல் திறமிக்க குழுக்களாக செயல்பட்டு, அரசுடன் கைகோர்த்து இயங்குவதே விரைவான தீர்வுக்கு வழிவகுக்கும்.


PLEASE READ ALSO: இலவச மீன் வளர்ப்பு பயிற்சி தஞ்சாவூர் மாவட்டத்தில்


வெள்ள நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மக்களுடன் இணைந்து செயல்பட்டால், அது இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டுதலை வழங்கும் புதிய முயற்சியாக அமைந்திடும். ஏனென்றால், வழிகாட்டுதல் என்பது தமிழகத்திற்குப் புதிதல்ல

Share & Like
VENDHAR VENDAN
Vendan is the EDP and HR facilitator for the past 20 Years. He is also Social development professional, dealing strategic planning in public health disaster response. He says awareness of self is the starting point for all STARTUPS
VENDHAR VENDAN on EmailVENDHAR VENDAN on Google

VENDHAR VENDAN

Vendan is the EDP and HR facilitator for the past 20 Years. He is also Social development professional, dealing strategic planning in public health disaster response. He says awareness of self is the starting point for all STARTUPS

Show Buttons
Hide Buttons