சிக்கல்களும் நமக்கு வாய்ப்புகளே !

Share & Like

இந்த உலகத்தில் பல சிக்கல்களும்  உருவாகி கொண்டே இருக்கின்றன. இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான தீர்வுகளும்  தேவைப்பட்டு கொண்டே இருக்கின்றன. அந்த மற்றும் சிக்கல்கள்தான் நம் தொழில்   வாய்ப்புகள் , அதன் தீர்வுகள் தான் நம் தொழில்கள் .

Turn Problem Into Opportunity

அந்த மூன்று நண்பர்கள் தீபாவளிக்கு விடுமுறைக்கு  வீடு செல்ல ஆயத்தமாயினர். அவர்கள் பெங்களூர்  போக்குவரத்து நெருக்கடியை தாண்டி   பேருந்து நிலையம் வருவதற்குள் பேருந்து டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது . இதனால் அவர்கள் வீடு செல்ல முடியவில்லை . இந்த சிக்கலை தீர்க்க தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள் . அந்த தீர்வுதான் ஆன்லையனில்  டிக்கெட் பதிவு செய்ய உதவும் RedBus.Com என்ற இணையதளம்.

 
வாகனங்களாகட்டும்,தொலைதொடர்புசாதனங்களாகட்டும், மின் மற்றும் மின்னனு சாதனங்களாகட்டும்  எல்லாம் ஒரு வித பிரச்சனைகளை சரி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட தீர்வுகளே. சிக்கல்கள்தான் பல வித கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்களுக்கும் மூலக்காரணம்.  
 
என்ன தொழில் செய்வது என்றே  தெரியாத நம்மில் பல பேருக்கு , நம்மை சுற்றி இருக்கிற இன்னப் பிற தொழில் வாய்ப்புகளையும்  மறந்து விடுகிறோம். இந்த உலகம் நமக்கு உதவும் வகையில் நம்மை சுற்றி யோசனைகளையும், வாய்ப்புகளையும் நிரப்பிவைத்துள்ளது. 
 
“The World around You is filled with ideas that can be helpful”
                                               – Andy Boyton,Co-Author of Idea Hunter 

 

நமக்கு தேவையான தொழில் ஐடியாக்களை நம் சொந்த அனுபவத்திலிருந்தே பெறலாம். நம்மை நிலைகுலைய வைத்த பிரச்சனைகள், நமது வாய்ப்புகளை தவற விட காரணமாக இருந்த சிக்கல்கள்,அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகள்  இதிலிருந்தும் தொழில் ஐடியாக்கள் பிறக்கின்றன. 


PLEASE READ ALSO: தொழில் அதிபர் மற்றும் பில்லியனர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்


மின்வெட்டு  பிரச்னையை தீர்க்க  உதவும் சூரிய ஒளிகலன்கள் (Solar Panel & Battery) போன்றவை சிக்கல்களின் தீர்வுகளே மற்றும் Online Flight & Bus TicketBookingOnline purchasing,  Matrimonial Websites  இவை  போன்றவை  எல்லாம் பல  சிக்கல்களின் தீர்வுகளே.

 
  ‘சிக்கல்கள்  மற்றும் பிரச்சனைகளை வாய்ப்புகளாக மாற்றுவோம்!’
Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons