தொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி கொடுக்க Startups Club நடத்தும் Demo Day : ஏப்ரல் 16 கோயம்புத்தூரில்

Share & Like

தொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கவும், முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டை பெறுவதற்கும், தொழில்முனைவோர்க்கு நெட்வொர்குகளை ஏற்படுத்தி கொடுக்கவும் Startups Club அமைப்பு Demo Day 2016 நிகழ்ச்சியை ஏப்ரல் 16-ல்  கோயம்புத்தூரில் வட்டமலைபாளையத்தில்  உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடத்துகிறது. Demo Day 2016 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான போட்டி நிகழ்ச்சியாகும். 

startup club demo day 2016
IMAGE CREDIT: NAGA.FARM

Demo Day நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் ஐடியாக்களை சமர்பிக்கலாம். Demo Day Coimbatore நிகழ்ச்சியில் 30 முதல் 40 ஸ்டார்ட் அப் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். இதிலிருந்து 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கால் இறுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும். இந்த 10 ஸ்டார்ட் அப்க்கள் கோயம்புத்தூரில் ஏப்ரல் 16-ல் நடக்கும் Demo Day நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் ஸ்டார்ட் அப்  ஐடியாக்களை சமர்பிக்கும். இதிலிருந்து 1 சிறந்த ஸ்டார்ட் அப் தேர்ந்தெடுக்கப்பட்டு நவம்பர் 11, 12 & 13-ல் சென்னை IITM  Research Park-ல் நடைபெறும் இறுதி Demo Day நிகழ்ச்சியில் பங்கேற்கும்.

10 நகரங்கள் 10 ஸ்டார்ட் அப்கள் 10 அரைஇறுதி போட்டிகள்

Startups Club அமைப்பு 10 நகரங்களில் Demo Day நிகழ்ச்சியை நடத்துகிறது. 10 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்படும் 1 சிறந்த ஸ்டார்ட் அப்க்கள் சென்னையில் இறுதி Demo Day நிகழ்ச்சியில் பங்கேற்கும். இதில் 1 ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

கோயம்புத்தூரில் நடைபெறும் Demo Day நிகழ்ச்சியை  வெற்றிப்பெறும் 1 ஸ்டார்ட் அப்க்களுக்கு பரிசு தொகை, வழிகாட்டுதல், முதலீடு பெற வாய்ப்பு கிடைக்கும். இந்த ஸ்டார்ட் அப் சென்னையில்  இறுதி Demo Day நிகழ்ச்சியில் பங்கேற்கும். 


PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra


Demo Day பங்கேற்க கட்டணம்

Coimbatore Demo Day நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களுக்கான கட்டணம் ரூ.1000 செலுத்தவேண்டும். Coimbatore Demo Day-யில் பங்கேற்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கட்டணமாக ரூ.2000 செலுத்தவேண்டும். பங்கேற்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள், பிற தொழில்முனைவோர்கள், வாழிகாட்டிகள், வல்லுநர்கள் போன்றவர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு

http://startupsclub.org/demoday/

Coimbatore Demo Day-யில் பங்கேற்க பதிவுசெய்ய:

https://goo.gl/N3FmX4


PLEASE READ ALSO: நீங்கள் மாணவர்களா உங்களுக்கு இன்டர்ன்ஷிப் வேலை வாய்ப்பு தேவையா அப்படியெற்றால் தேடுங்கள் Internshala தளத்தில்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.


TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons