2015-ஆம் ஆண்டு அதிகப்பட்ச நிதியை முதலீடாகப் பெற்ற 7 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Highest Funded 7 Indian Tech Startups of 2015)
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குப் பிறகு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு (Tech Startups) வருகின்றன. பல தொழில்முனைவோர்கள் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக தங்கள் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். தொழில்முனைவோர்கள் நிறுவனங்களை விரிவுப்படுத்துவதற்கு முதலீடுகளை (funding) முதலீட்டு நிறுவனத்திடமிருந்து (Venture Capitalist ( VC firms), Angel investors & etc) பெறுகின்றனர். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு பல தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Tech Startups) முதலீட்டை (funding) முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளன. 2015-ஆம் ஆண்டு அதிகப்பட்ச நிதியை முதலீடாகப் பெற்ற 7 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களை (Tech Startups) NDTV வெளியிட்டுள்ளது.
1. Ola
Ola Cabs நிறுவனம் மொபைல் பயன்பாட்டை (mobile app) அடிப்படையாக கொண்டு வாடகை வாகனங்களை இயக்கி வரும் நிறுவனம் ஆகும். ஒருநாளைக்கு ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புக்கிங்களை (booking requests) இந்நிறுவனம் பெற்று வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் Ola Cabs நிறுவனம் 30 மடங்கு வளர்ச்சி விகிதம் கண்டுள்ளது. இந்நிறுவனம் 2015-ஆம் ஆண்டு 900 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெற்ற முதலீடு (Funding in 2015) : 900 மில்லியன் அமெரிக்க டாலர் ($ Million)
தொடங்கப்பட்ட ஆண்டு (Founded In): 2011
இணையத்தளம் (Website): www.olacabs.com
முதலீடு செய்த நிறுவனங்கள் (Investors): Tiger Global, Matrix Partners, SoftBank, Steadview Capital, Sequoia Capital, Falcon Edge Capital, DST Global, Didi-Kuaidi, Accel Partners, ABG Capital, GIC
தலைமை இடம் : பெங்களூர் (Banglore)
2. Paytm
Paytm 2010-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இ-காமர்ஸ் சாப்பிங் இணையத்தளம். இந்நிறுவனம் நொய்டாவை (Noida) தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மதிப்பு 3-4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். முதலில் மொபைல் கட்டணம், காஸ் கட்டணம், மின்சார கட்டணம் போன்ற கட்டணம் செலுத்தும் இணையத்தளமாக ஆரம்பிக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு முதல் இணையத்தின் மூலம் பொருட்களை விற்கும் (E-Commerce) தளமாகவும் செயல்படுகிறது. Paytm பணம் சார்ந்த வங்கியை அமைப்பதற்கான அனுமதியை RBI -யிடமிருந்து பெற்றுள்ளது. இந்நிறுவனம் 2015-ஆம் ஆண்டு 890 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெற்ற முதலீடு (Funding in 2015) : 890 மில்லியன் அமெரிக்க டாலர் ($ Million)
தொடங்கப்பட்ட ஆண்டு (Founded In): 2010
இணையத்தளம் (Website): www.paytm.com
முதலீடு செய்த நிறுவனங்கள் (Investors): Alibaba Group, SAIF Partners, Intel Capital, Reliance Capital
தலைமை இடம் : நொய்டா (Noida)
PLEASE READ ALSO: 2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்கள் (2015 World’s Best Multinational Workplaces)
3 FlipKart
Flipkart இந்தியாவின் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாகும். Flipkart பெங்களுருவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் 2015-ஆம் ஆண்டு 750 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெற்ற முதலீடு (Funding in 2015) : 750 மில்லியன் அமெரிக்க டாலர் ($ Million)
தொடங்கப்பட்ட ஆண்டு (Founded In): 2007
இணையத்தளம் (Website): www.flipkart.com
முதலீடு செய்த நிறுவனங்கள் (Investors): Tiger Global, Accel Partners, Iconiq Capital, Naspers, DST Global, GIC, Morgan Stanley, Sofina, Steadview Capital, Vulcan Capital, Dragoneer Investment Group, Baillie Gifford, Greenoaks Capital, Qatar Investment Authority, T. Rowe Price
தலைமை இடம் : பெங்களூர் (Banglore)
4 SnapDeal
Snapdeal ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் Flipkart-ன் போட்டி நிறுவனமாகும். இந்நிறுவனம் 6.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாகும். புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் 2015-ஆம் ஆண்டு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெற்ற முதலீடு (Funding in 2015) : 500 மில்லியன் அமெரிக்க டாலர் ($ Million)
தொடங்கப்பட்ட ஆண்டு (Founded In): 2010
இணையத்தளம் (Website): www.snapdeal.com
முதலீடு செய்த நிறுவனங்கள் (Investors): Temasek, BlackRock, Myriad Group, SoftBank, Nexus Venture Partners, Kalaari Capital, eBay, Bessemer Venture Partners, Intel Capital, Saama Capital, Foxconn, Alibaba, InnoVen Capital
தலைமை இடம் : டெல்லி (Delhi)
PLEASE READ ALSO: தொழில் முனைவோரை மேம்படுத்தும் Entrepreneurship Development Institute
5 Grofers
Grofers நிறுவனம் ஆன்லைன் (Online) மூலம் மளிகை பொருட்கள் (Grocery), காய்கறிகள், பழங்கள், பேக்கரி பொருட்கள், பூக்கள் மற்றும் பல அன்றாட தேவைக்கான பொருட்களை விற்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் நாட்டிலுள்ள பல கடைகளை (Local Stores) ஆன்லைனில் இணைத்து அந்த கடைகளின் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. 2015-ஆம் ஆண்டு 165 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெற்ற முதலீடு (Funding in 2015) : 165 மில்லியன் அமெரிக்க டாலர் ($ Million)
தொடங்கப்பட்ட ஆண்டு (Founded In): 2013
இணையத்தளம் (Website): www.grofers.com
முதலீடு செய்த நிறுவனங்கள் (Investors): Sequoia Capital, Tiger Global, SoftBank
தலைமை இடம் : டெல்லி (Delhi)
6 Quikr
Quikr பொருட்களை விற்போரை விளம்பரப்படுத்தும் இணையத்தளமாகும். இந்நிறுவனம் மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. 2015-ஆம் ஆண்டு 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெற்ற முதலீடு (Funding in 2015) : 150 மில்லியன் அமெரிக்க டாலர் ($ Million)
தொடங்கப்பட்ட ஆண்டு (Founded In): 2008
இணையத்தளம் (Website): http://www.quikr.com/
முதலீடு செய்த நிறுவனங்கள் (Investors): AB Kinnevik, Nokia Growth Partners, Matrix Partners, Omidyar Network, Norwest Venture Partners, Warburg Pincus, eBay, Tiger Global, Steadview Capital
தலைமை இடம் : மும்பை (Mumbai)
PLEASE READ ALSO: உழைப்பு என்றும் வீணாவதில்லை
7 E-Com Express
Ecom Express நிறுவனம் லாஜிஸ்டிக் (Logistics) துறையில் உள்ளது. ஆன்லைன் (Ecommerce) மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பொருட்களை விநியோகம் (Delivery) செய்கிறது. இந்நிறுவனம் 8000 ஊழியர்களை கொண்டு 210 நகரங்களில் செயல்படுகிறது. 2015-ஆம் ஆண்டு 133 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெற்ற முதலீடு (Funding in 2015) : 133 மில்லியன் அமெரிக்க டாலர் ($ Million)
தொடங்கப்பட்ட ஆண்டு (Founded In): 2013
இணையத்தளம் (Website): www.ecomexpress.in
முதலீடு செய்த நிறுவனங்கள் (Investors): Peepul Capital, Warburg Pincus
தலைமை இடம் : டெல்லி (Delhi)
PLEASE READ ALSO: உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா (India world’s 7th most valuable Nation Brands )