தொழில் முனைவோரை மேம்படுத்தும் Entrepreneurship Development Institute

Share & Like

Entrepreneurship Development Institute

             தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தொழில்முனைவு மேம்பாடு மையம் (Entrepreneurship Development Institute) . தொழில்முனைவு மேம்பாடு மையம் (Entrepreneurship Development Institute) ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் செயல்படுகிறது. தொழில்முனைவு மேம்பாடு மையம் (Entrepreneurship Development Institute) அந்தந்த மாநில அரசாலும், MSME-DI-யாலும் நிர்வகிக்கப்படுகிறது.

         தொழில்முனைவு மேம்பாடு மையம் (Entrepreneurship Development Institute)-ன் முக்கிய பணி தொழில் முனைவோரை வளர்ப்பது, அவர்களை மேம்படுத்துவதுமேயாகும். தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக பல பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்கள் EDI–ல் பயிற்றுனர்களாக உள்ளனர்.

தொழில்முனைவு மேம்பாடு மையம்(Entrepreneurship Development Institute) -த்தின் சேவைகள் :

1. ENTREPRENEURSHIP DEVELOPMENT PROGRAM (EDP):

        தொழில் முனைவு மேம்படுத்துவதற்கு Entrepreneur Development Program (EDP) என்ற பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு துறைச் சார்ந்த வல்லுனர்களை கொண்டு தொழில்முனைவோருக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. EDP-ல் தொழிலை எப்படி தேர்வு செய்வது?
சந்தை வாய்ப்பை எப்படி அறிவது?
தொழிலின் சாதக, பாதகங்களை எப்படி அறிவது?
வங்கியில் கடன் பெறுவது எப்படி?
வங்கியில் எந்த மாதிரியான கடன்கள் உள்ளன,
தொழிலுக்கான அரசின் சலுகைகள் என்ன?
தொழிலுக்கான Project Report எப்படி தயாரிப்பது?
தொழிலில் Accounts-ஐ பராமரிப்பது எப்பது?
தொழில் சட்டங்கள்,
சந்தைப்படுத்துதல்,
மென்திறன் பயிற்சிகள் போற்ற தலைப்பின்கீழ் பயிற்சிகளை வழங்குகிறது. இதனால் தொழில்முனைவோரின் திறன்கள் மேம்படுகிறது.இந்த பயிற்சிகள் எந்த கட்டணமும் இல்லாமல் ஒரு மாத காலம் வழங்கப்படுகிறது. .

2. ENTREPRENEURSHIP AND SKILL DEVELOPMENT PROGRAM (ESDP):

           தொழில்முனைவோருக்கென பல்வேறு தொழில் சார்ந்த திறன் மேம்பாடு பயிற்சிகளை. Web Designing and Development, Solar Power Training Program, Gold Appraisal programme, தோல் (Leather) சார்ந்தபயிற்சிகள், இரசயானம் (Chemical) ,உணவுப் பொருட்கள் (Food Products) , இயந்திரவியல் (Mechanical) , மின்சாரம் மற்றும் மின்னணுப் (Electrical & Electronics) சார்ந்த பயிற்சிகள் மற்றும் பல பயிற்சிகளை துறை சார்ந்த நிருவனங்களுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

3. TECHNOLOGY BASED ENTREPRENEURSHIP DEVELOPMENT PROGRAM (TEDPs)

           ஒரு குறிப்பிட்ட பொருள் தயாரிப்பு, அதன் செயல்முறைக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு தொழில்களுக்கு தேவையான தொழில்நுட்ப சார்ந்த பயிற்சிகளை கொடுக்கிறது. இந்த பயிற்சிகளை CSIR (Council for Scientific and Industrial Research) labs, CLRI (Central Leather Research Institute), CIPET (Central Institute of Plastics Engineering and Technology), FTDI, R&D institutions, State Universities போன்ற நிறுவனங்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

4.அரசு திட்டங்கள் சார்ந்த பயிற்சிகள் :

மத்திய மற்றும் மாநில அரசின் தொழில் திட்டங்களான

“Unemployed Youth Employment Generation Programme” – (UYEGP)

“Prime Minister Employment Generation Programme” – (PMEGP)

“New Entrepreneurs cum Enterprises Development Scheme” – (NEEDS) போன்ற திட்டங்களில் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு தொழில்முனைவு பயிற்சிகளை வழங்குகிறது.
தொழில்முனைவு ஆர்வமுள்ளவர்கள் தொழில்முனைவு மேம்பாட்டு மையத்தை அணுகி பயிற்சியை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு:

Entrepreneurship Development Institute,
N.P. Industrial Estate, Developed Plot,Next Namathu MGR,
Ekkaduthangal,Chennai-600 032.
Email-id : edichennai@gmail.com
Tel         : +91-44-2225-2081/82/83/84
Fax_no : +91-44-2225-2085

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons