சமூக தொழில் முனைவோர்களுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை அளித்து இந்தியாவின் சமூக நிலையை மேம்படுத்தும் : UnLtd Tamil Nadu

Share & Like

பல தொழில்முனைவோர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் தொழிலை தொடங்குகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை மக்களின் சமூக நிலையை மேம்படுத்துவதும் கனவுடன் தொடங்குகின்றனர். இத்தகைய தொழில்முனைவோர்கள் சமூக தொழில் முனைவோர்கள் (social entrepreneurs) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களின் நோக்கம் லாபத்தை தாண்டி சமூக பொறுப்புடன் இருக்கும்.

UnLtd Tamilnadu

UnLtd Tamil Nadu

சமூக தொழில் முனைவோர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகளை பல அமைப்புகள் செய்துவருகின்றன. அதேபோல்  UnLtd Tamil Nadu என்ற அமைப்பு சமூக தொழில் முனைவோர்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வருகிறது. இது UnLtd India உடன் இணைந்த அமைப்பாகும்.

UnLtd Tamil Nadu ல் தொழில்முனைவோர்களுக்கு கிடைக்கும் உதவிகள் 

ஆரம்ப நிலை சமூக தொழில் முனைவோர்களுக்கு தேவையான நிதி முதலீடு (funding), வழிகாட்டுதல் (mentors), வளங்கள் (resources), அறிவுரைகள் மற்றும் தொழில் பயிற்சிகள் (business coaching) ஆகியவற்றைகளை அளித்து அவர்களை மேம்படுத்துகிறது. இங்கு Incubation உள்ளது. இதன் மூலம் வழிகாட்டுதல் திட்டங்களை (mentorship program) செய்கிறது.

மாதாந்திர பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது. இதில்   வணிக திட்டமிடல் (business planning),   வணிக மாதிரியை உருவாக்குதல் (prototyping) மற்றும் சந்தையை ஆய்வு செய்தல் (market testing),  முதலீடு திரட்டுதல் (fundraising), நிதி திட்டமிடல் (financial planning), தகவல் தொடர்பு (communication), திறமையான குழுக்களை உருவாக்குதல் (team building), நிர்வாக கட்டமைப்பு மற்றும் சட்டம் (legal) போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நிபுணர்கள் (experts), ஆலோசகர்கள், வாழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் (investors) மற்றும் நிதி வழங்குவோர்களிடம் (funders) தொடர்பை UnLtd Tamilnadu ஏற்படுத்தி கொடுக்கிறது.

மாதந்திரம் நடைபெறும் ‘peer learning’ நிகழ்வுகள் மூலம் பிற தொழில் முனைவோர்களின் உதவிகளை பெற முடியும்.

நிதி முதலீட்டை திரட்ட (Fundraising)தேவையான உதவிகளை UnLtd வழங்குகிறது.

பல்வேறு துறை சார்ந்த சமூக தொழில்முனைவோர்களை மேம்படுத்துகிறது, குறிப்பாக கல்வி (education), சுகாதாரம் (health), மகளிர் மேம்பாடு (women empowerment), விவசாயம் (agriculture), சுற்றுச்சூழல் (environment), கலை (arts), வாழ்வாதாரங்கள் (livelihoods) சார்ந்தவைகளுக்கு இதன் உதவிகளை வழங்குகிறது.

Unltd
Img credit :aurovilleradio.org
தொழில்முனைவோர்களுக்கு 2 நிலைகளில் உதவிகளை செய்கிறது. 

Level 1 fellows : தொழில் திட்டங்களை ஆரம்ப கட்டத்தில் வைத்திருப்போர்களுக்கு அவர்களின் திட்டங்களை பரிசோதித்து அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை வழங்குதல்.

Level 2 fellows :  நிறுவப்பட்ட நிறுவனத்திற்கு வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்குதல்.

UnLtd Tamil Nadu ஐ அணுக:

UnLtd Tamil Nadu பாண்டிச்சேரி அருகில் உள்ள ஆரோவில் (Auroville) என்ற இடத்தில் அமைந்துள்ளது.

Auromode Campus, Opp.CSR, Auroville, Tamil Nadu 605101.

Mob: +91  96 05 876945

http://unltdtamilnadu.org/


Please Read This For Your Growth:

Amancio Ortega

பில்கேட்ஸை முந்தும் அமென்சியோ ஒர்டிஹா : கடை உதவியாளராக தொடங்கி உலகின் மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்த ஒர்டிஹா

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons