இளம் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை உருவாக்குவதற்கான முதலீட்டிற்காக : Reliance Jio Digital India Startup Fund

Share & Like

இந்திய நுகர்வோர்கள்  Reliance Jio அறிமுகம் செய்துள்ள குறைந்த விலை data சேவை, இலவச அழைப்புகள் மற்றும் பல தள்ளுபடிகள், பில்லியன் டாலர் முதலீடு மற்றும் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுடன் தொடுக்கும் விலை போர்கள் (price wars) ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர். 

reliance jio
Img Credit : ourncr.com

Reliance நிறுவன Annual General Meeting ல் முகேஷ் அம்பானி Reliance Jio சேவையை அறிமுகப்படுத்தினார். இதில் டிஜிட்டல் உலகில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். 4G சேவையில் ரூபாய்.50 க்கு 1 GB data, இணையத்தை அதிகமாக பயன்படுத்துவோருக்கு கூட மாதத்திற்கு ரூ. 4,999 க்குள் அடங்கிடும் திட்டங்கள், இலவச ரோமிங் அழைப்புகள், அதிவேக இணையதள சேவை உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்த அறிவிப்பில் இந்தியாவில் இளம் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை உருவாக்குவதற்கு தேவையான முதலீட்டு நிதியை வழங்கும் நோக்கத்தோடு Reliance Jio Digital India Startup Fund என்ற venture capital fund ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொழில் முனைவோர் முதலீட்டு நிதிக்காக ரூ. 5000 கோடியை ஒதுக்கியுள்ளது. டிஜிட்டல் சார்ந்த தொழிலை தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு தேவையான முதலீட்டு நிதியை இந்த Reliance Jio Digital India Startup Fund வழங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிதியை முதலீடு செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. 

பெரு மற்றும் சிறு நகரங்களில் Digital Entrepreneurship Hub ஐ தொடங்கவும் Reliance திட்டமிட்டுள்ளது. “இந்தியாவில் இளம் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை தொடங்க ஊக்குவிப்பதற்காக இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக” முகேஷ் அம்பானி தெரிவித்தார்.


PLEASE READ ALSO:

mukesh ambani

முகேஷ் அம்பானியிடமிருந்து கற்க வேண்டிய 10 பாடங்கள்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons