வழக்கறிஞர்களை எளிதாக கண்டுபிடிக்கும் தளத்தை உருவாக்கியுள்ளது MyAdvo.in
சரியான வழக்கறிஞர்களை கண்டுபிடிப்பது மிகச் கடினமான காரியமாகும். அதுவும் வழக்கிற்கு(Case) பொருத்தமான வழக்கறிஞர்களை (lawyers) கண்டு அறிவது மிகவும் சிரமம். வழக்கறிஞர்கள் கண்டுபிடிப்பதில் உள்ள பிரச்னையை மூலகாரணமாக கொண்டு ஒரு ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனம் MyAdvo.in என்ற இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது.

ரிஷாபத் குப்தா மற்றும் குஷால் பகத் என்பவர்களால் MyAdvo செப்டம்பர் 2015 தொடங்கப்பட்டது. இந்த ஆன்லைன் தளத்தில் தனிநபர்கள், குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் (Corporate) தங்களுக்கு பொருத்தமான வழக்கறிஞர்களை கண்டுபிடித்து கொள்ளலாம். வழக்கறிஞர்களிடமிருந்து இலவச சட்ட ஆலோசனைகளையும் (Free legal advice from lawyers) MyAdvo.in தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
PLEASE READ ALSO: நீங்கள் மாணவர்களா உங்களுக்கு இன்டர்ன்ஷிப் வேலை வாய்ப்பு தேவையா அப்படியெற்றால் தேடுங்கள் Internshala தளத்தில்
இந்த தளத்தில் வழக்கறிஞர்களின் கட்டணங்களும் இடம்பெற்றுள்ளதால் நமக்கு பொருத்தமான வழக்கறிஞர்களை (lawyers) தேர்ந்தெடுத்து கொள்ளலாம். நமது வழக்கிற்கு பொருத்தமான வழக்கறிஞர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தாலும் MyAdvo.in-ன் ஹெல்ப்லைன் எண்ணை 0124-406086 தொடர்பு கொள்ளும்போது அவர்களே வழக்கறிஞர்களின் தகவல்களை கொடுக்கிறார்கள்.