உலகவங்கியின் எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 130வது இடத்திற்கு முன்னேற்றம் (Ease Of Doing Business: India Ranks 130)
உலக வங்கி எந்தெந்த நாடுகளில், தொழில் செய்ய சுமுகமான நிலை, எளிமையான சூழ்நிலை உள்ளது (“Ease of Doing Business”) என்பதை ஆய்வு செய்து , ‘எளிதாக வணிகம் செய்ய 2016’ (“Ease of Doing Business”-DB 2016 ) என்ற ஆண்டு இறுதி பட்டியலை உலக வங்கி (World Bank) வெளியிட்டு உள்ளது. 10க்கும் மேற்பட்ட அடிப்படை அம்சங்களைக் கொண்டு கணக்கிட்டு (The rankings are based on 10 indicators), பட்டியல் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் 189 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலக வங்கியின் (World Bank) எளிமையான வணிகம் செய்யும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 130வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
நாடுகளும் அது பெற்றிருக்கும் இடங்களும்:
உலக வங்கியின் எளிதாக வணிகம் செய்ய ஏதுவான நாடுகள் (“Ease of Doing Business”) பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்திலும் அதை தொடர்ந்து நியூசிலாந்து, டென்மார்க், தென்கொரியா, ஹாங்காங், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன
சீனா 84வது இடத்தில் உள்ளது. சீனா கடந்த ஆண்டு 90வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது 6 இடங்கள் முன்னேறி 84வது இடத்தை பிடித்து உள்ளது. பாகிஸ்தான் 138வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் 10 இடங்களுக்கு பின் தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 128வது இடத்தில் இருந்தது.
PLEASE READ ALSO : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 10அடிப்படை அம்சங்கள் (The rankings are based on 10 indicators):
தொழில் தொடங்குதல் (Starting a Business), கட்டுமானங்களுக்கான அனுமதிகளைப் பெறுதல் ( Dealing with Construction Permits), மின்சார வசதி (Getting Electricity), சொத்து பதிவு (Registering Property), கடன் பெறுதல் (Getting Credit), சிறுபான்மையின முதலீட்டாளர்கள் பாதுகாப்பு (Protecting Minority Investors), வரி செலுத்தும் முறை (Paying Taxes), எல்லை தாண்டிய வர்த்தம் (Trading Across Borders), ஒப்பந்தங்களை செயல்படுத்துவது (Enforcing Contracts), கடன்களை செலுத்த இயலாமையை தீர்ப்பது (Resolving Insolvency) போன்ற 10க்கும் மேற்பட்ட அடிப்படை அம்சங்களைக் கொண்டு கணக்கிட்டு (The rankings are based on 10 indicators), பட்டியல் வெளியிட்டு உள்ளது.
உலக வங்கியின் எளிதாக வணிகம் செய்ய ஏதுவான நாடுகள் பட்டியலில் (“Ease of Doing Business”) இந்தியா :
இந்த பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 130வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு விட தொழில்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் சிலவற்றை இந்தியா மேற்கொண்டுள்ளதால் இந்தப் பட்டியலில் (Ease of Doing Business) இந்தியா 130 இடத்தை எட்டி உள்ளது எனவும் உலகவங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா ஒவ்வொரு அடிப்படை அம்சங்களிலும் பெற்றுள்ள இடங்கள் :
-
Topics DB 2016 Rank DB 2015 Rank Change in Rank Starting a Business (தொழில் தொடங்குதல்) 155 164 9Dealing with Construction Permits ((கட்டுமானங்களுக்கான அனுமதிகளைப் பெறுதல்) 183 184 1Getting Electricity (மின்சார வசதி) 70 99 29Registering Property (சொத்து பதிவு) 138 138 No change Getting Credit (கடன் பெறுதல்) 42 36 -6Protecting Minority Investors (சிறுபான்மையின முதலீட்டாளர்கள் பாதுகாப்பு) 8 8 No change Paying Taxes (வரி செலுத்தும் முறை) 157 156 -1Trading Across Borders (எல்லை தாண்டிய வர்த்தம்) 133 133 No change Enforcing Contracts (ஒப்பந்தங்களை செயல்படுத்துவது) 178 178 No change Resolving Insolvency (கடன்களை செலுத்த இயலாமையை தீர்ப்பது) 136 136 No change மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளப்பறிய சாதனையாகவே கருதப்படுகிறது. இனிவரும் காலங்களிலும் இந்தியா தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முன்னேறும் எனவும் உலகவங்கி (World Bank) கணித்து உள்ளது.
PLEASE READ ALSO : உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள் -FRED DELUCA (Founder of Subway Restaurants)