இந்தியாவின் மிகவும் தாராள மனமுடைய கொடையாளிகள் பட்டியலில் மூன்றாவது முறையாக அசிம் பிரேம்ஜி முதலிடம் (Azim Premji named the most generous Indian for third year)
இந்தியாவின் மிகவும் தாராள மனமுடைய கொடையாளிகள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் (Wipro) தலைவர் அசிம் பிரேம்ஜி (Azim Premji) மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். ஹுரன் இந்தியா (Hurun India) நிறுவனம் 2015-ம் ஆண்டின் சிறந்த கொடையாளிகள் பட்டியலை (Hurun India Philanthropy List 2015) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 36 கொடையாளிகள் இடம்பிடித்துள்ளனர்.
தாராள மனமுடைய கொடையாளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அசிம் பிரேம்ஜி 27,514 கோடி ரூபாய் கல்வி துறைக்கு கொடையளித்துள்ளார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை எட்டு மாநிலங்களில் உள்ள 3.5 இலட்சம் பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் (Infosys) இணை நிறுவனர் நந்தன் நிலகேணி மற்றும் அவரது மனைவி ரோகினி நிலகேணி (Nandan, Rohini Nilekani) இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இவர்கள் நகர்புற மேம்பாடு, கல்வி, பொதுநலன் போன்றவற்றிற்கு 2,404 கோடி ரூபாய் கொடையளித்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் முன்னாள் இன்ஃபோசிஸ் (Infosys) தலைவர் நாராயண மூர்த்தி (Narayana Murthy) உள்ளார். இவர் தொழில்முனைவோரை ஊக்குவித்தல், சமூக வளர்ச்சி மற்றும் கல்வி போன்றவற்றிற்கு 1,322 கோடி ரூபாய் கொடையளித்துள்ளார்.
நான்காவது இடத்தில் மற்றொரு இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனத்தின் இணை நிறுவனரான கே. தினேஷ் (K Dinesh) உள்ளார். இவர் கல்வி, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், சுகாதார நலம் ஆகியவற்றிக்கு 1,238 கோடி ரூபாய் கொடையளித்து முதன்முறையாக இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
ஹச்சிஎல் (HCL) நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் (Shiv Nadar) 535 கோடி ரூபாய் கொடையளித்து 5-ம் இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) 6-ம் இடத்தில் உள்ளார். இவர் 345 கோடி ரூபாயை சுகாதார நலத்திற்கு கொடையளித்துள்ளார். ஜேம்ஸ் கல்வி குழுமத்தை (GEMS Education) சேர்ந்த மற்றும் அயல்நாட்டு வாழ் இந்தியரான சன்னி வர்கி (Sunny Varkey) மற்றும் அவரது குடும்பம் 326 கோடி ரூபாய் கொடையளித்து 7-ம் இடம் பிடித்துள்ளார்.
யுடிவி தலைமை நிர்வாகி (UTV chief executive) ரோனி ஸ்க்ரூவாலா (Ronnie Screwvala) 158 கோடி ரூபாய் கொடையளித்து 8-ம் இடம் பிடித்துள்ளார். பஜாஜ் (Bajaj) நிறுவனத்தைச் சேர்ந்த ராகுல் பஜாஜ் (Rahul Bajaj) மற்றும் அவரது குடும்பம் 139 கோடி ரூபாய் கொடையளித்து 9-ம் இடம் பிடித்துள்ளார்.
சாபூர்ஜி பல்லோஞ்சி குழுமத்தை (Shapoorji Pallonji Group) சேர்ந்த பல்லோஞ்சி மிஸ்திரி (Pallonji Mistry) 96 கோடி ரூபாய் கொடையளித்து 9-ம் இடத்தில் உள்ளார். இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி (Rohan Murthy (32)) இளைய கொடையாளி ஆவார்.
PLEASE READ ALSO : 2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்கள் (2015 World’s Best Multinational Workplaces)