வணிகத்திற்காக பயன்படுத்தக்கூடிய படங்களை (Image) இலவசமாக பெறக்கூடிய 15 இணையத்தளங்கள்
ஒரு படம் (image) ஒரு முழு கட்டுரையின் விளக்கங்களை சொல்லிவிடும். எழுத்துகளினால் ஒரு விஷயத்தை உணர்த்துவதைப் போலவே ஒரு படத்தினாலும் அந்த விஷயத்தை உணர்த்திவிட முடியும்.
பல்வேறு வணிக பயன்பாட்டிற்காக படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு நிறுவனத்தின் இணையத்தளத்தில் பல படங்கள் (image) பயன்படுத்தப்படும். வணிகப் பயன்பாட்டிற்கான (commercial use) தேவையான படங்களை பெரும்பாலும் தேடு பொறி தளத்திலிருந்து (search engine) எடுக்கப்படுகின்றன.
இந்தப் படங்கள் பெரும்பாலும் வேறு ஒரு நிறுவனத்திற்கு உரிமையுடையதாக இருக்கும். அந்த உரிமையுடைய நிறுவனத்திற்கு படங்களை பயன்படுத்துவது கவனத்திற்கு வரும்பட்சத்தில் அந்த படங்களை நீக்கவேண்டியிருக்கும் அல்லது அவர்களுக்கு அபராதம் தொகை வழங்கவேண்டியிருக்கும்.
வணிக பயன்பாடு மற்றும் பிற தேவைகளுக்கான படங்களை இலவசமாகவும், இலவச ராயல்டி (royalty free) மற்றும் குறைந்த விலையிலும் பல தளங்களிலிருந்து (Free Stock Images) பெறலாம். வணிக தேவைக்காக அத்தகைய தளங்களிலிருந்து எடுக்கப்படும் படங்களை பயன்படுத்துவதை அவர்கள் அனுமதிக்கின்றனர். இதேபோல் தரமான படங்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.
படங்களை (images) குறைந்த விலை மாற்றும் இலவசமாக பெறக்கூடிய 15 இணையத்தளங்கள்
1. Gettyimages

Gettyimages யில் பல்வேறு வகையான படங்கள் (images), இசைகள் (music) மற்றும் வீடியோக்கள் (videos) இலவசமாகவும் மற்றும் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தளத்தில் விளையாட்டு, பொழுதுபோக்கு, நிகழ்சிகள், செய்திகள் மற்றும் பலவகையான பிரிவுகள் சார்ந்த படங்கள் இடம்பெற்றுள்ளன.
iStock, Photos.com மற்றும் Thinkstock போன்ற தளங்கள் Gettyimages ன் பிற தளங்களாகும். இந்த தளங்களிலிருந்தும் படங்களை பெறமுடியும்.
2. Shutterstock
![]()
Shutterstock தளத்தில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த படங்கள், வீடியோ, இசை, ஓவியங்கள் (art), vectors மற்றும் கார்ட்டூன் கிடைக்கும். இவைகளை கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் (royalty free) பெறலாம்.
3. Pixabay

Pixabay தளத்தில்
4. Flickr

Flickr இணையத்தள நிறுவனம் yahoo வின் துணை நிறுவனமாகும். இந்த தளத்தில் எண்ணற்ற புகைப்பட கலைஞர்கள் தாங்கள் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றிருப்பார்கள். வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக படங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Please Read Also:
சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த AliBaba நிறுவனர் ஜாக் மா
5. Startup Stock Photos

ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான படங்கள் Startup Stock Photos தளத்திலிருந்து பெறமுடியும். இந்த தளத்திலிருந்து பெறப்பட்ட படங்களை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களின் தேவைக்கேற்பவும் மாற்றிகொள்ளலாம்.
6. StockSnap
![]()
StockSnap தளத்தில் இயற்கை காட்சிகள் போன்ற பல படங்களை இலவசமாக பெற முடியும். இந்த தளத்தில் அதிகப்பட்ச தெளிவான படங்கள் (high resolution images) வாரந்தோறும் சேர்க்கப்படுகின்றன.
7. Bigstock
![]()
Bigstock இணையத்தளத்தில் படங்கள், videos, illustration, vector போன்றவைகளை பெறலாம். வணிகப் பயன்பாட்டிற்காக குறைந்த கட்டணத்தில் தரமான புகைப்படங்களை பெறலாம். Bigstock இணையத்தளம் Shutterstock ன் துணை நிறுவனமாகும்.
8. Pond5
![]()
Pond5 இணையத்தள நிறுவனத்தில் images, videos, 3D model, sound fx, music, photoshop psd, illustration போன்றவைகள் கிடைக்கும். Pond5 யில் HD தரத்திலான படங்கள் மற்றும் வீடியோக்களை பெறலாம்.
9. 123RF

123RF இணையத்தள நிறுவனத்தில் எண்ணற்ற Stock Images, Icons, Infographic, Vectors, Footage and Audio Clips இடம்பெற்றுள்ளன. இவற்றை இலவச உரிமையிலும் (royality free), குறிப்பிட்ட கட்டணத்திலும் பெறலாம்.
10. Dreamstime
![]()
Dreamstime இணையத்தளத்தல் photos, llustrations & Clipart, 3D & Computer generated, Hand drawn & Artistic, Vector, 2D & 3D Animation Stock Footage, Web Design, Banners, Buttons, Web Backgrounds & Textures, Web Icons, video போன்றவற்றை இலவச உரிமையுடனும், கட்டணம் செலுத்தியும் பெறலாம்.
Please Read Also:
உலகையே அசத்திய 14 வயது விஞ்ஞானி : சிவா அய்யாதுரை
11. YAY Images

YAY Images தளத்தில் photos, videos, illustration ஆகியவற்றை இலவசமாகவும், குறிப்பிட்ட கட்டணத்திலும் பெறலாம். பல்வேறு வகையான படங்கள் கிடைக்கும்.
12. Depositphotos

Depositphotos யில் Photos, Vector Images and Videos இலவச உரிமையுடன் பெற்றுக்கொள்ளலாம்.
13. Media Bakery
Media Bakery தளத்தில் Photos, Vectors, Videos and Music Files ஆகியவை பல்வேறு பிரிவுகளில் உள்ளன.
14. Realistic Shots

தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்கு தேவையான படங்களை Realistic Shots தளத்திலிருந்து பெறலாம். தொழில்நுட்பம், இயற்கை, கட்டிடக்கலை, மக்கள் மற்றும் பயணங்கள் தொடர்புடைய புகைங்கள் கிடைக்கும்.
15. Life of Pix

Life of Pix தளத்தில் இயற்கை காட்சிகள் (nature) சார்ந்த படங்கள் கிடைக்கின்றன.
Please Read Also:
முகேஷ் அம்பானியிடமிருந்து கற்க வேண்டிய 10 பாடங்கள்














