முதலீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்ட Airbnb ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு $ 30 பில்லியன் டாலர்

Share & Like

Airbnb நிறுவனம் உலகெங்கும் விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக வீடுகளை வாடகைக்கு அமர்த்திகொடுக்க உதவும் ஒரு ஆன்லைன் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும்.

Airbnb இன்றைய மதிப்பு $ 30 பில்லியன் டாலர் ஆகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலேயே மதிப்பு அடிப்படையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. Uber நிறுவனத்தின் மதிப்பு $62.5 Bn, Xiaomi நிறுவனத்தின் மதிப்பு $46 Bn மற்றும் அடுத்து Airbnb $ 30  Bn  மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

airbnb
Image credit: getty image

Airbnb ஆன்லைன் தளத்தில் 200 நாடுகளில் 34,000 நகரங்களில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட விடுமுறை காலங்களை கழிப்பதற்கான வாடகை வீடுகள் இடம்பெற்றுள்ளன.

2007 ஆண்டில் Brian Chesky மற்றும் Joe Gebbia ஆகியோர் Airbedandbreakfast.com என்ற இணையத்தளத்தை தொடங்கினர். அதவாது வீட்டின் மிச்சமான ஒரு பகுதியை ஹோட்டல் போன்று வாடகைக்காக கொடுப்பது, அவர்களுக்கு சிற்றுண்டி போன்றவையும் வழங்குவது  AirBed & Breakfast என்ற தொழில் மாதிரியுடன் தொடங்கப்பட்டது.  பிறகு Airbnb என்று மாற்றப்பட்டது.

2008 ஆம் ஆண்டு Brian Chesky மற்றும் Joe Gebbia தங்களின்  நிறுவனத்திற்கு  $ 1.5 இலட்சம் டாலர்  முதலீட்டு நிதியை பெறுவதற்காக  7 முன்னணி  சிலிகான் வேலி முதலீட்டாளர்களிடம்  அணுகினர். அதில் 5 முதலீட்டாளர்களால் பல்வேறு காரணங்களால் Airbnb நிறுவனம் நிராகரிக்கப்பட்டது. 2 முதலீட்டாளர்கள் எவ்வித பதிலும் சொல்லவில்லை.

 

airbnb

“எங்களுக்கு உங்கள் தொழிலுக்கான சந்தை மிகப் பெரிய அளவில் இல்லை என்று தோன்றுகிறது” என்று ஒரு முதலிட்டாளர் Airbnb ஐ நிராகரித்தார்.

airbnb

“எங்களுக்கு பயணங்கள் தொடர்புடைய தொழில்கள் எப்போதும் சாவலாகவே இருந்திருக்கிறது” என்று ஒரு முதலீட்டாளர் Airbnb ஐ நிராகரித்தார்.

airbnb rejections

இதேபோல் 2008 ஆம் ஆண்டு மட்டும் 15 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் Airbnb ஐ நிராகரித்தனர். மறுப்புகள் உங்கள் முயற்சிக்கு முற்றுபுள்ளி வைக்க முடியாது. 

9 வருடங்கள் கழித்து Brian Chesky கூறினார் “முதலீட்டிற்காக எங்களை நிராகரித்தவர்களெல்லாம் மிகவும் புத்திசாலியான முதலீட்டாளர்கள், எங்களுக்கு தெரியும் அந்தநேரத்தில் அவர்களை ஈர்க்ககூடியவர்களாக நாங்கள் இல்லை” 

2009 ஆண்டில் முதன் முதலாக Sequoia Capital நிறுவனத்திடமிருந்து $ 600 ஆயிரம் டாலர் முதலீட்டை பெற்றனர். Airbnb தொடங்கப்பட்ட காலத்திலிருந்து சட்ட சிக்கல்கள், நிதி மற்றும்  வளர்ந்து வரும் போட்டியாளர்கள் போன்ற பல்வேறு போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறது. இன்று  Airbnb ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு $ 30 பில்லியன் டாலர் ஆகும்.


ஜாக் மா சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த  AliBaba நிறுவனர் ஜாக் மா


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons