50% இந்தியர்கள் சொந்த தொழில் தொடங்க நினைக்கின்றனர் : ஆம்வே மற்றும் நீல்சன் இந்தியா ஆய்வு

Share & Like

ஆம்வே இந்தியா மற்றும் நீல்சன் இந்தியா இணைந்து இந்தியாவில் தொழில்முனைவு சமந்தமாக ஆய்வு மேற்கொண்டது. India Entrepreneurship Report 2015 என்ற ஆய்வை வெளியிட்டது. 21 மாநிலத்தில், 50 நகரங்களில் 21-65 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண்களிடம் தொழில்முனைவு ஆய்வை மேற்கொண்டது. 5,402 ஆண்கள் மற்றும் 5,366 பெண்கள் உட்பட 10,768 பேர்களிடம் ஆய்வை மேற்கொண்டது. 

ஆம்வே இந்தியா (Amway India) மற்றும் நீல்சன் இந்தியா (Nielsen India) ஆய்வில் தொழில்முனைவு (Entrepreneurship) சம்மந்தமான பல சுவராஸ்யமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தொழில்முனைவு
Image Credit: shutterstock
மூன்றில் இரண்டு இந்தியர்கள் தொழில் செய்வதை ஆக்கபூர்வமாக பார்கிறார்கள்

கேரளா (78%), பஞ்சாப் (77%) மற்றும் உத்தரகண்ட், தமிழ்நாடு மாநிலத்தில் (76%) பேர் தொழில்முனைவில் நேர்மறையான அணுகுமுறையை ( positive attitude) கொண்டிருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 சதவீதம் பேர் யாரையும் பயிற்சி/ கற்றுவிப்பதன் (trained/educated) மூலம் தொழில்முனைவோராக உருவாக்க முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

62% பேர் தாங்கள் கொண்டுள்ள கல்வி (education) தொழிலை தொடங்க போதுமானதாக இருப்பதாக நினைப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


PLEASE READ ALSO: பெரும்பாலான தொழில்முனைவோர்கள் தொழிலை தொடங்கும் வயது 28 மற்றும் 29 : Xeler8 பகுப்பாய்வு


41% பேர் நிதியை (finance) பெறுதல் மற்றும் 35 சதவீதம் பேர் குடும்ப ஆதரவு பெறுதல் போன்றவை சொந்த தொழிலை தொடங்க முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 50% பேர் தங்கள் சொந்த தொழில்  தொடங்க நினைக்கின்றனர்

47% பேர் அதாவது இரண்டில் ஒருவர் தாங்கள் தொழில் தொடங்க நினைப்பதாகவும் அல்லது தொழில் தொடங்க தீவிரமாக செயல்படுவதாகவும் ஆம்வே இந்தியா தெரிவிக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கிட்டத்தட்ட 60 % பேரும், உத்தரகண்ட் 40% பேரும்,  உத்தரப் பிரதேசம் 29% பேரும் இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில்  புதிய தொழிலை அடைய தீவிரமாக செயல்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்தியாவில் தொழில்முனைவோர் தொழில் தொடங்குவதற்கான சூழல் முன்னேறியுள்ளது 

45% பேர் கிட்டத்தட்ட பாதிபேர் தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் (environment)  கடந்த 5 ஆண்டுகளில் முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

நிதி நிறுவனங்கள் தொழில் தொடங்க முக்கிய பங்கு வகிக்கின்றன

83% பேர் தொழில் தொடங்க வங்கி (bank) முக்கிய நிதி (finance) ஆதாரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தொழில்முனைவை வளர்ப்பதற்கும், எளிதாக்குவதற்கும் நிதி நிறுவனங்கள் (financial institution) முக்கிய பங்கு வகிப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பம் இரண்டாவது நிதி ஆதாரமாக விளங்குவதாக 78% பேர் தெரிவித்துள்ளனர்.

தோல்வி பயம்

வயது, வருமானம், பாலினம் இதையெல்லாம் தாண்டி தோல்வி பயம் தொழில் தொடங்க தடையாக இருப்பதாக 63% பேர் தெரிவித்துள்ளனர். இந்த தோல்விபயம் பல காரணங்களால் அவர்களுக்கு ஏற்பட்டுயிருக்கிறது. 31% பேர் திவால் அடையும் (bankruptcy) அளவுக்கு நிதி சுமை அதிகமாகிவிடுமோ என்ற பயமும், 24% சந்தை சூழ்நிலை சாதகமில்லாமல் (Non-conducive market conditions) போய்விடும் என்ற பயமும், 23% பேர் வேலையின்னமை (unemployment) குறித்த பயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என India Entrepreneurship Report 2015 ஆய்வு கூறியுள்ளது.


PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான வங்கித் தீர்வுகளை கொடுக்கும் HDFC SmartUp


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons