புதிய திவால் சட்டத்தின் (Insolvency and Bankruptcy Law) நன்மைகள்

Share & Like

மத்­திய அரசு, நலிந்த நிறு­வ­னங்­களை, திவால் நிலையில் இருந்து காப்பாற்றவும், அவ்­வாறு முடி­யா­த ­பட்­சத்தில், திவால் நடை­மு­றையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர உதவும், புதிய திவால் சட்­டத்­தையும் உரு­வாக்கி உள்ளது.  கடந்த வாரம், ராஜ்­ய­ச­பாவில் நிறை­வே­றப்பட்ட புதிய திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Code 2016), விரைவில், ஜனாதிபதியின் ஒப்­பு­த­லுடன் நடைமுறைக்கு வர இருக்கிறது.

திவால் சட்டம்
Image Credits: Livelaw.in
புதிய திவால் சட்டத்தின் (Bankruptcy Law) நன்மைகள்
  • திவால் சட்டம் (Bankruptcy Law) அம­லுக்கு வந்தால், கடன் கொடுத்­த­வ­ருக்கும், கடனை திரும்ப செலுத்த முடி­யாமல், திவால் நோட்டீஸ் கொடுத்­த­வ­ருக்கும் இடை­யி­லான பிரச்­னைக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும்.
  • வாங்­கிய கடனை விட, குறைந்த சொத்துகள் உள்ள நலிந்த நிறுவனங்கள், திவால் நோட்டீஸ் அளிக்­கின்­றன. இதனையடுத்து, திவால் நோட்டீஸ் அளித்த  சொத்துகள் விற்­பனை செய்­யப்­பட்டு, கடன்­தா­ரர்­க­ளுக்கு வழங்கப்­ப­டு­கி­றது. இந்த நடை­மு­றை­களின் கீழ், ஒரு வழக்கை முடிக்க, 4 ஆண்­டுகள் ஆகின்­றன.
  • இந்­நி­லையில், புதிய திவால் சட்டம் சட்­டத்தின் கீழ், திவால் நோட்டீஸ் அளித்த, 180 நாட்­க­ளுக்குள், வாராக்­க­டன்கள் வசூ­லிக்­கப்­படும். சில பிரத்யேக வழக்­கு­களில், கூடு­த­லாக, 90 நாட்கள் அவ­காசம் வழங்­கப்­படும்.
  • இத்தகைய புதிய திவால் சட்ட நடைமுறைகளால் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர், இருவரின் நேரம் மற்றும் ஆற்றல் சேமிக்க மிச்சமாகிறது
  • முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே (investor) நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் என்­ப­துடன், இந்தியாவில், வாராக்­க­டனை வசூ­லிக்க, நீண்ட கால­மாகும் என்ற பேச்­சுக்கும் முற்­றுப்­புள்ளி வைக்கும்’
  • வங்­கிகளில் வாராக்­க­டன்களை மீட்டுஎடுக்க புதிய திவால் சட்டம் உதவும்.
  • வங்­கி­கள் எவ்வித தயக்கமும் இன்றி அதி­க­ளவில் கடன் வழங்கும்
  • திவால் வழக்­கு­க­ளுக்கு விரைந்து தீர்வு காண்­பதன் மூலம், சிறிய, நடுத்­தர மற்றும் பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு தாரா­ள­மாக கடன் வழங்க  நிதி நிறுவனங்கள் முன்­வரும்.
  • ஒரு நிறு­வ­னத்தின், திவால் நடை­முறை துவங்­கி­யது முதல், 2 ஆண்­டுகள் வரை, ஊழி­யர்­க­ளுக்கு ஊதியம் வழங்க, புதிய சட்டம் வகை செய்­கி­றது
  • திவா­லுக்கு விரைந்து தீர்வு காணும் நாடு­களின் வரி­சையில், சீனா, 55வது இடத்­திலும், இந்­தியா, 136வது இடத்­திலும் உள்­ளன.

PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான வங்கித் தீர்வுகளை கொடுக்கும் HDFC SmartUp


 

Share & Like
TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.


TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons