10 ஊழியர் இருந்தாலே பிஎப் பிடித்தம் கட்டாயம்: பிஎப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தொழிலாளர் நல அமைச்சகம் திட்டம்
நிறுவனங்களில் இனி 10 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தாலே வருங்கால வைப்பு நிதி (பிஎப்) (Employee Provident Fund (EPF)) பிடித்தம் செய்யும் நடைமுறை விரைவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இப்போது 20 தொழிலாளருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்கள் அவர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்து வேண்டியது கட்டாயம் என்று சட்டம் உள்ளது. இந்த வரம்பு 10 ஊழியர்கள் என குறைக்கப்பட இருக்கிறது. இதற்கு ஏற்ப நடைமுறையில் உள்ள பிஎப் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால், நாடு முழுவதும் உள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் கிட்டத்தட்ட 50 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் .
இந்த புதிய திருத்தங்கள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று மத்திய தொழிலாளர் நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்போது அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் கணக்கிட்டு பிஎப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
PLEASE READ ALSO : சந்தையில் ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கும் 10 நிறுவனங்கள் மற்றும் அதன் பிராண்டுகள்