மொத்த தனிநபர் சொத்து மதிப்பு (Total individual wealth) அடிப்படையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து மதிப்பு 211 சதவீதம் உயர்ந்திருப்பதாக New World Wealth நிறுவனம் தெரிவித்துள்ளது. 2000ம் ஆண்டில் இந்தியாவில் 900 அமெரிக்க டாலர்களாக ($900) இருந்த சராசரி தனிநபர் சொத்து மதிப்பு (Average wealth per person) , 2015ல் 2800 அமெரிக்க டாலர்களாக ($2800) உயர்ந்துள்ளது. இது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி அல்லது பிரேசில் நாடுகளின் 15 வருட சொத்து மதிப்பு உயர்வை விட அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் தனிநபர் சொத்து மதிப்பு (Average wealth per person) அடிப்படையில் கணக்கிடுகையில் உலகின் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தோனேஷியா, சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் பிரேசில் 6-வது இடமும், தென்கொரியா 7-வது இடமும், பிரான்ஸ் 8-வது இடமும், கனடா 9-வது இடமும், ஸ்விட்சர்லாந்து 10-வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவை விட இந்தோனேஷியா, சீனா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சொத்து மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவின் சொத்து மதிப்பு 362% , சீனாவின் சொத்து மதிப்பு 341%, ரஷ்யாவின் சொத்து மதிப்பு 253%, ஆஸ்திரேலியாவின் சொத்து மதிப்பு 248% அதிகரித்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் முக்கியமான மேற்கத்திய நாடுகளான ஜப்பான் 39%, அமெரிக்கா(41%, இங்கிலாந்து 58% மட்டுமே சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
PLEASE READ ALSO : உலகவங்கியின் எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 130வது இடத்திற்கு முன்னேற்றம் (Ease Of Doing Business: India Ranks 130)
மொத்த தனிநபர் சொத்து மதிப்பின் (Total individual wealth) அடிப்படையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த தனிநபர் சொத்து மதிப்பு 3,492 பில்லியன் அமெரிக்க டாலராக ($3,492 billion) உள்ளது. மொத்த தனிநபர் சொத்து மதிப்பின் அடிப்படையில் அமெரிக்கா 48,734 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், சீனா 17,254 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ($17,254 billion) 2-வது இடத்திலும், ஜப்பான் 15,230 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ($15,230 billion) 3-வது இடத்திலும், ஜெர்மனி ($9,358 billion) 4-வது இடத்திலும், இங்கிலாந்து ($9,240 billion) 5–வது இடத்திலும், பிரான்ஸ் ($8,722 billion) 6-வது இடத்திலும் இத்தாலி ($7,308 billion) 7-வது இடத்திலும், கனடா ($4,796 billion) 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியா ($4,497 billion) 9-வது இடத்திலும், இந்தியா 3,492 பில்லியன் அமெரிக்க டாலர் ($3,492 billion) சொத்து மதிப்புடன் 10-வது இடத்திலும் உள்ளது.
ஆனால் தனிநபர் சொத்து மதிப்பின் (On per capita wealth) அடிப்படையில் இந்தியா 20-வது இடத்தில் உள்ளது. சராசரி தனிநபர் சொத்து மதிப்பு (Average wealth per person) 2015-ஆம் ஆண்டில் 2800 அமெரிக்க டாலர்களாக ($2800) உள்ளது. சுவிட்சர்லாந்த் 285,100 அமெரிக்க டாலர் சொத்து ($285,100) மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.