சென்னையில் Google Technology User Groups இலவசமாக நடத்தும் Women Tech Makers 2016, மார்ச் 26
பெண்களை தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் மேம்படுத்த Google Technology User Groups (GDG, Chennai) மார்ச் 26-ஆம் தேதி சென்னையில் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையிலுள்ள Freshdesk நிறுவன அலுவலகத்தில் நடைப்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது.
Google Technology User Groups (GDG, Chennai) குழு அண்ட்ராய்டு (Android), அப்ளிகேசன் உருவாக்குபவர்கள், YouTube API மற்றும் Google Calendar API போன்ற தொழில்நுட்பத்தில் உள்ளவர்களை மேம்படுத்தவும் அவர்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் உதவுகிறது.
Women Tech Makers 2016 நிகழ்ச்சியில் Contentment Vs. Settling Down என்ற தலைப்பில் சென்னை Yoga Studio நிறுவனர் ரோகினி மனோகர் பேசவுள்ளார். Building scalable Javascript Web Applications என்ற தலைப்பில்Skcript துணை நிறுவனர் சுவாதி கக்கர்லா பேசவுள்ளார். Build A Startup In 1 Hour என்ற தலைப்பில்CI Global Technologies Pvt Ltd நிறுவனத்தைச் சேர்ந்த சாரதா ரமணி பேசவுள்ளார் மற்றும் Changing the world என்ற தலைப்பிலும் பேச்சுகள் நடைபெறவுள்ளது.
PLEASE READ ALSO: நீங்கள் மாணவர்களா உங்களுக்கு இன்டர்ன்ஷிப் வேலை வாய்ப்பு தேவையா அப்படியெற்றால் தேடுங்கள் Internshala தளத்தில்
மேலும் விவரங்களுக்கு
இணையதள முகவரி http://gdgchennai.com/. karthik@skcript.com மற்றும் swaathi@skcript.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள லிங்கை அழுத்தி படிவத்தை பூர்த்தி செய்தும் விண்ணபிக்கலாம். http://bit.ly/WTMCHN16
Women Tech Makers 2016 நிகழ்ச்சி நடைபெறும் இடம்
Fresdhesk,
SP Infocity, Block B, 40 MGR Road, Chennai 600 096.
PLEASE READ ALSO: NASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse- சென்னையில்