தாழ்த்தப்பட்ட தொழில் முனைவோர்கள் நடத்தும் தொழில்களுக்கு முதலீட்டு நிதியை வழங்கும் : மத்திய அரசின் Venture Capital Fund for Scheduled Castes திட்டம்
2011 கணக்கெடுப்பின் படி இந்திய நாட்டில் 20.13 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் (Scheduled Castes )உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 16.62% ஆகும். நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்ந்த தொழில் முனைவோர்கள் (entrepreneurs) மிகவும் குறைவு. தாழ்த்தப்பட்டோர்களிடையே தொழில்முனைவை ஊக்கப்படுத்தும் வகையிலும், நிதி சலுகைகளை அளிக்கும் வகையிலும் 2014-15 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு Venture Capital Fund for Scheduled Castes (தாழ்த்தப்பட்டோர்க்கான வெஞ்சர் கேபிடல் நிதி) என்ற திட்டத்தை (scheme) தொடங்கியது.

இந்த திட்டத்தை மத்திய அரசு IFCI Venture Capital Funds Ltd நிறுவனம் மூலம் செயல்படுத்துகிறது. Venture Capital Fund for Scheduled Castes திட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர் நடத்தும் வளர்ச்சியுடைய தொழிலுக்கு தேவையான முதலீட்டு நிதியை பெறலாம்.
முதலீட்டு நிதியை பெற தகுதிகள்
நிறுவனங்களை தாழ்த்தப்பட்ட தொழில் முனைவோர் நடத்த வேண்டும். நிறுவனத்தில் தாழ்த்தப்பட்டோர் குறைந்தது 60% பங்குகளுடன் (60% stake holdings) மேலாண்மை கட்டுப்பாடுகளை (management control) கொண்டு 12 மாதங்களுக்கு மேலாக நிறுவனத்தை நடத்தியிருக்க வேண்டும்.
உற்பத்தி மற்றும் சேவைத் துறைச் சார்ந்த தொழிலை அமைக்க Venture Capital Fund for Scheduled Castes திட்டத்திலிருந்து முதலீட்டை பெறலாம்.
இந்த திட்டத்திலிருந்து வெளியேறும் வரை தொழில் முனைவோர் நிறுவனத்தில் 60% பங்குகளிலிருந்து குறைக்க கூடாது. தொழில் முனைவோர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற ஆவணச் சான்றுகளை திட்டத்தில் விண்ணப்பிக்கும் நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டத்தின் நிதியுதவி விவரம்
Venture Capital Fund for Scheduled Castes திட்டத்தின் மூலம் பெற்ற நிதியை அடைப்பதற்கான காலம் 6 ஆண்டுகள் ஆகும். ரூ.50 இலட்சம் முதல் ரூ.15 கோடி வரை நிறுவனத்திற்கு தேவையான முதலீட்டை (funding) பெறலாம்.
திட்ட செலவு ரூ. 5 கோடிக்குள் இருப்பின், 25% வரை தொழில்முனைவோர் முதலீடு செய்திருக்க வேண்டும். மீதி 75% ஐ இந்த திட்டத்திலிருந்து (scheme) நிதியுதவி (Financial assistance) பெறலாம்.
திட்ட செலவு ரூ.5 கோடிக்கு மேல் இருப்பின், அதிகபட்சமாக 50% மட்டுமே இந்த திட்டத்திலிருந்து நிதியுதவி (Financial assistance) பெறலாம். திட்ட செலவுவில் குறைந்தது 25% நிதியை வங்கி / பிற நிறுவனங்களிலிருந்து (bank/other institutions) பெற்றிருக்க வேண்டும். மீதி 25% தொழில்முனைவோர் முதலீடு செய்திருக்க வேண்டும்.
IFCI Venture Capital Funds நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் தொழில்களுக்கு பங்குகளாகவும் (Equity), கடனீட்டுப் பத்திர பங்குகளாகவும் (Optionally/ Compulsorily convertible debentures) அல்லது கடன்களாகவும் முதலீடு நிதியுதவியை அளிக்கும்.
அவர்கள் நிறுவனத்தில் செய்த முதலீட்டிற்கு ஆண்டு வருமானமாக (Returns through Investment) 10% – 15% வரை எதிர்பார்ப்பார்கள். NSFDC, IFCI/IFCI Venture ஐ சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஒரு நிபுணர் அடங்கிய குழு இந்த திட்டத்தில் முதலீட்டை பெற விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களை தேர்ந்தெடுக்கும்.
முதலீட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது
IFCI Venture Capital Funds நிறுவனத்தில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் மற்றும் Dalit Indian Chamber of Commerce & Industry (DICCI), National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC), மற்ற மாநில தாழ்த்தப்பட்டோர் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை அணுகியும் மற்றும் ஊடக விளம்பரங்கள் / வெளியீடுகள் மூலம் இத்திட்டத்திற்கு தொழில் முனைவோருக்கு அழைப்புகள் வரும் இதன் மூலமும் தொழிலுக்கு முதலீடு நிதியை பெற விண்ணப்பிக்கலாம்.
For more details visit : http://www.ifciventure.com/Venture Capital Fund For Scheduled Castes
Please Read This For Your Growth:
உலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்