தொழில்முனைவை ஊக்குவிக்க ஒரு முயற்சி : தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை ((DIPP) ரூ. 2,000 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன் உத்தரவாத நிதியை உருவாக்க திட்டம்

Share & Like

நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 2000 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன் உத்தரவாத நிதியை (Credit Guarantee Fund) உருவாக்க தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (DIPP) திட்டமிட்டுள்ளது. 

government schemes
Image credit: Shutterstock

டெல்லியில் PHD Chamber of Commerce and Industry நடத்திய ‘Start Up India Master Class, Challenges and Sustainability’ என்ற மாநாட்டில் கடன் உத்தரவாத நிதியை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிதி திட்டத்தை தொடங்குவதற்கான காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.

“இந்த நிதி திட்டம் தொழில்முனைவோர் மற்றும் தொழில் முனைவுகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்துடன் அமையும். இதன் மூலம் தொழில் முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து பண உதவியைப் பிணை இல்லா உத்தரவாதத்துடன் (collateral-free guarantee) பெற முடியும்,” என்றார் DIPP செயலாளர், ரமேஷ் அபிஷேக். 

“தொழில்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை மென்மையாக்கல் தொடர்பாக ரிசர்வ் வங்கி (RBI), செபி (SEBI) மற்றும் கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் துறை (Department of Corporate Affairs)  ஆகிய நிதி துறையிடம் கொண்டு சென்றிருப்பதாக”  அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், டாக்டர் மகேந்திர நாத் பாண்டி கூறியதாவது, “புதுமையை (innovations) சார்ந்த தொழிலை தொடங்குபவர்களுக்கு தேவையான சலுகைகள் (incentives) மற்றும் ஊக்குவிப்புகள் (motivations) கொடுக்கப்படவேண்டும், கண்டுபிடிப்பு சார்ந்த மனநிலையை இந்திய கல்வி முறையின் அடிப்படை மட்டங்களில் அவர்களின் மொழியின் வாயிலாக ஏற்படுத்தவேண்டும்.”


Please Read This Article For Your Growth

Amancio Ortega

பில்கேட்ஸை முந்தும் அமென்சியோ ஒர்டிஹா : கடை உதவியாளராக தொடங்கி உலகின் மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்த ஒர்டிஹா


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons