UberPitch நிகழ்வு : ஸ்டார்ட் அப் களுக்கு 7 நிமிடங்களில் முதலீட்டு நிதியை திரட்ட உதவுகிறது Uber
வாடகை வண்டிகளை (Cab) ஒருங்கிணைத்து சேவை வழங்கும் Uber நிறுவனம், ஸ்டார்ட் அப் (startups) நிறுவனங்கள் முதலீடு நிதியை திரட்ட உதவுவதற்காக UberPitch ஐ தொடங்கியுள்ளது. வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்துடன் (Ministry of Commerce and Industry) இணைந்து இங்நிகழ்வை நடத்தவுள்ளது.

UberPitch ன் நோக்கம் முதலீடு நிதியை (funding) திரட்ட startups மற்றும் venture capitalists ஐ ஒரே தளத்தில் கொண்டுவருவதாகும்.
FICCI (Federation Of India Chamber Of Commerce & Industry) நடத்திய நிகழ்ச்சியில் UberPitch நிகழ்ச்சிக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம், அரசு இரண்டாம் தர நகரங்களில் (Tier II cities) ஸ்டார்ட் அப் சூழ்நிலையை (startup ecosystem) உருவாகும் நோக்கம் வலுப்பெறும்.
UberPitch நிகழ்வு
UberPitch 2 நாள் நிகழ்வு இந்தியாவில் 28 நகரங்களில் நவம்பர் 18-19, 2016 இல் நடைபெறும். இதில் பங்கேற்கும் முதலீட்டாளர்களின் (investors) பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தேர்ந்தெடுக்கப்படும் தொழில் முனைவோர்கள் (entrepreneur) தங்களின் தொழில் ஐடியாக்களை (business idea) வெஞ்சர் கேபிடல் (venture capitalists) மற்றும் முதலீட்டாளர்களிடம் (investors) முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு குழுவுக்கும் தொழில் ஐடியாவை முன்வைக்க 7 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அடுத்த 7 நிமிடங்கள் முதலீட்டாளர்கள் அவர்களின் கருத்துகளை (feedback) தொழில் முனைவோருக்கு வழங்குவார்கள். இதில் ஸ்டார்ட் அப்கள் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டு நிதியை (funding) பெற முடியும்.
3 இறுதிப் போட்டியாளர்கள் Silicon Valley யில் Uber நிறுவனத்தின் தலைமை குழுவை (leadership team) சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
UberEXCHANGE
2016 ஜனவரியில் Uber நிறுவனம் மத்திய அரசின் Invest India வுடன் இணைந்து UberEXCHANGE incubation programme ஐ தொடங்கியது. இதன் நோக்கம் இந்திய தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுதல்களை (mentorship) வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.
ஹைதராபாதில் உள்ள தெலுங்கானா மாநில அரசின் ஸ்டார்ட் அப் இங்குபேட்டாரான (incubator) T-Hub வுடன் இணைந்து நாட்டின் முதன்மையான 20 ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டுத்தல்களை வழங்க UberEXCHANGE ஒப்பந்தம் செய்துள்ளது.
UberPitch நிகழ்வில் பங்கேற்க விண்ணபிக்க
UberPitch நிகழ்வில் தொழில் முனைவோர்கள் பங்கேற்க விண்ணபிக்க நவம்பர் 1, 2016 இறுதி நாளாகும்.
The startups can register for the UberPitch Click here.
https://uber9.typeform.com/to/FHTMcO
Please Read This Article For Growth: