தொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி கொடுக்க Startups Club நடத்தும் Demo Day : ஏப்ரல் 16 கோயம்புத்தூரில்
தொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கவும், முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டை பெறுவதற்கும், தொழில்முனைவோர்க்கு நெட்வொர்குகளை ஏற்படுத்தி கொடுக்கவும் Startups Club அமைப்பு Demo Day 2016 நிகழ்ச்சியை ஏப்ரல் 16-ல் கோயம்புத்தூரில் வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடத்துகிறது. Demo Day 2016 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான போட்டி நிகழ்ச்சியாகும்.

Demo Day நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் ஐடியாக்களை சமர்பிக்கலாம். Demo Day Coimbatore நிகழ்ச்சியில் 30 முதல் 40 ஸ்டார்ட் அப் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். இதிலிருந்து 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கால் இறுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும். இந்த 10 ஸ்டார்ட் அப்க்கள் கோயம்புத்தூரில் ஏப்ரல் 16-ல் நடக்கும் Demo Day நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் ஸ்டார்ட் அப் ஐடியாக்களை சமர்பிக்கும். இதிலிருந்து 1 சிறந்த ஸ்டார்ட் அப் தேர்ந்தெடுக்கப்பட்டு நவம்பர் 11, 12 & 13-ல் சென்னை IITM Research Park-ல் நடைபெறும் இறுதி Demo Day நிகழ்ச்சியில் பங்கேற்கும்.
10 நகரங்கள் 10 ஸ்டார்ட் அப்கள் 10 அரைஇறுதி போட்டிகள்
Startups Club அமைப்பு 10 நகரங்களில் Demo Day நிகழ்ச்சியை நடத்துகிறது. 10 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்படும் 1 சிறந்த ஸ்டார்ட் அப்க்கள் சென்னையில் இறுதி Demo Day நிகழ்ச்சியில் பங்கேற்கும். இதில் 1 ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
கோயம்புத்தூரில் நடைபெறும் Demo Day நிகழ்ச்சியை வெற்றிப்பெறும் 1 ஸ்டார்ட் அப்க்களுக்கு பரிசு தொகை, வழிகாட்டுதல், முதலீடு பெற வாய்ப்பு கிடைக்கும். இந்த ஸ்டார்ட் அப் சென்னையில் இறுதி Demo Day நிகழ்ச்சியில் பங்கேற்கும்.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra
Demo Day பங்கேற்க கட்டணம்
Coimbatore Demo Day நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களுக்கான கட்டணம் ரூ.1000 செலுத்தவேண்டும். Coimbatore Demo Day-யில் பங்கேற்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கட்டணமாக ரூ.2000 செலுத்தவேண்டும். பங்கேற்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள், பிற தொழில்முனைவோர்கள், வாழிகாட்டிகள், வல்லுநர்கள் போன்றவர்களின் தொடர்புகள் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு
http://startupsclub.org/demoday/
Coimbatore Demo Day-யில் பங்கேற்க பதிவுசெய்ய:
PLEASE READ ALSO: நீங்கள் மாணவர்களா உங்களுக்கு இன்டர்ன்ஷிப் வேலை வாய்ப்பு தேவையா அப்படியெற்றால் தேடுங்கள் Internshala தளத்தில்