மதுரையில் ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) நிகழ்ச்சி : ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முனைவு அனுபவத்தை பெறுவதற்கான தொழில்முனைவோர்களின் பயணம்
மதுரையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்புமிக்க தொழில்முனைவு அனுபவத்தை பெறுவதற்காக ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) என்ற பேருந்து பயண நிகழ்ச்சி வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் பயணம் நிகழ்ச்சியை மதுரை பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி நடத்துகிறது.
ஸ்டார்ட் அப் பயணம் நிகழ்ச்சியில் தொழில்முனைவு எண்ணம் கொண்ட தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் தொழில் கனவுகளோடு பயணம் செய்யவிருக்கின்றனர்.
இந்த ஸ்டார்ட் அப் பயணத்தில் தொழில்முனைவில் வெற்றிக் கண்ட தொழில்முனைவோர்களிடம் நேரடியாக சென்று அவர்களின் மதிப்பு மிக்க தொழில் அனுபவங்களை பெறுவதற்காவே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் பயணத்தில் தொழில்முனைவோர்களின் பல நாள் அனுபவங்கள்
ஸ்டார்ட் அப் பயண நிகழ்ச்சியில் Rainstock Tech நிறுவனர் சக்திவேல், Buddies Cafe நிறுவனர் நிர்மல், VEclean ராஜேஷ், Foodly விஜய்ராஜ், Bodhi Tree Skills அஸ்வீதா, தொழில்முனைவர் ஜெயபால் முருகன் ஆகியோர் தங்களின் தொழில்முனைவு அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள்.
முக்கியமாக தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் பயணங்கள், உத்திகள், அனுபவங்கள், அறிவுரைகள் போன்றவற்றை அறிய இந்த ‘ஸ்டார்ட் அப் பயணம்’ மிகவும் உதவிகரமாக இருக்கும். தொழில்முனைவுகளை பற்றி நேரடியாக கற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.
ஸ்டார்ட் அப் பயணத்தில் (StartUp Payanam) பங்கேற்க தொடர்பு கொள்ள :
இந்த பயணத்தில் பங்கேற்க தொடர்பு கொள்ள: Mr. P.KARUPPANAN, Incubation Centre , Pandian Saraswathi Yadav Engineering College , Madurai.
Mobile : +919994080430
WhatsApp : +91-9994080430
பங்கேற்க பதிவு செய்ய : https://in.explara.com/e/startup-payanam
Please Read Also:
இந்தியாவின் முக்கியமான சர்வதேச வேளாண் வர்த்தக கண்காட்சி : AGRI INTEX 2016, ஜுலை 15- 18 தேதி, கோயம்புத்தூரில்