இந்தியாவின் முக்கியமான சர்வதேச வேளாண் வர்த்தக கண்காட்சி : AGRI INTEX 2016, ஜுலை 15- 18 தேதி, கோயம்புத்தூரில்

Share & Like

இந்தியாவின் முக்கியமான வேளாண் வர்த்தக கண்காட்சியான AGRI INTEX 2016,  ஜூலை 15 – 18 ஆம் தேதி வரை கோயம்புத்தூரில் நடைப்பெறவுள்ளது. 16-வது AGRI INTEX வேளாண் கண்காட்சியை கோவை மாவட்ட சிறு தொழில் உரிமையாளர் சங்கம் (கொடிசியா)  நடத்துகிறது.

AGRI INTEX
Image Credit: crigroups.com

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு தொழில்துறை அமைச்சகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன் பல்கலைக்கழகம், வேளாண் இயந்திர உற்பத்தியாளர் சங்கம், பால் பண்ணை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட ஏராளமான மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்கு ஆதரவளிக்கின்றன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த நிறுவனத்தினரும் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். கண்காட்சி நேரம் காலை 10.00 முதல் மாலை 6.00 மணி வரை. கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

நடைபெறும் நிகழ்ச்சிகள் 

AGRI INTEX 2016 கண்காட்சியில் பல அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விவசாயத்திற்கு பயன்படுத்தும் பல்வேறு விதமான வேளாண்மை தொடர்புடைய பொருட்கள் இடம் பெறவுள்ளன.

பயிலரங்குகள், வேளாண் கருத்தரங்குகள், வாங்குபவர் விற்பவர் சந்திப்பு மற்றும் பல விவசாய துறை கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.

உணவு பொருட்கள் தொடர்பான FOOD INTEX 2016, 

கால்நடை தொடர்பான ANIMAEX 2016,

தோட்டக்கலை தொடர்பான Horti Intex 2016,

தேங்காய் நார் தொடர்பான Coco Intex 2016 & India International Coir Fair 2016 போன்ற கண்காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நடைபெறும் நாள் மற்றும் இடம் 

AGRI INTEX 2016 கண்காட்சி ,  ஜூலை 15 – 18 ஆம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா (CODISSIA) வணிக வளாகத்தில் நடைப்பெறவுள்ளது.  

கண்காட்சியில் இடம்பெற மற்றும் பங்கேற்க 

www.agriintex.codissia.com


Please Read Also:

India International Coir Fair

சர்வதேச இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளும் தேங்காய் நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் கண்காட்சி : India International Coir Fair 2016 கோயம்புத்தூரில்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons