வாழை விவசாயி மற்றும்தொழில்முனைவோர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி ( National Research Centre for Banana, Trichy )
உலகத்தில் பல நாடுகளில் வாழை முக்கியமான பயிராக உள்ளது. உலக அளவில் வாழை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது . “இந்தியாவில் 8 லட்சம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. 30 மில்லியன் மெட்ரிக் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 63 ஆயிரம் மெட்ரிக் டன் வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு 5.70 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
வாழை மேம்பாட்டிற்காக அரசு பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. 1993-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Agricultural Research-ICAR) வழிகாட்டுதலின்படி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ( National Research Centre for Banana, Trichy ) தமிழ்நாட்டில் திருச்சியில் நிறுவப்பட்டது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்-த்தில் ( National Research Centre for Banana, Trichy ) வாழை ரகங்கள் மேம்பாடு (Crop Improvement), வாழை உற்பத்தியை (Crop Production) அதிகரித்தல், அறுவடை பின் வாழை நிர்வாகம் (Post Harvest Management), வாழை பாதுகாப்பு (Crop Protection) என்ற அடிப்படையில் ஆராய்ச்சிகள் (Research) நடைப்பெற்று வருகின்றன.
ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய வேலைகள் :
1.வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கத் தக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல். (Developing technologies to enhance productivity and utilization of Banana).
2.வாழை பற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் களஞ்சியமாகவும், உற்பத்தித்திறன் மற்றும் மகசூல் அளவை அதிகரிக்கும் தகவல்களைப் பரப்பவும்,தேசிய வாழை பண்பகப் பண்ணையாகவும் செயல்படுகிறது. ( To serve as national repository of germplasm information related to Banana and plantain and also to disseminate the knowledge for production and productivity )
3.பழங்கால மற்றும் உயிர்த் தொழில்நுட்ப முறைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட இரகங்களை உருவாக்குதல் மற்றும்வேறுபாடுகளைப் பராமரித்தல். (To develop improved cultivars through traditional and biotechnological methods and conserve the diversity.)
4.வாழையில் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், இடம் சார்ந்த இரகங்கள் மற்றும் அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் ஆராய்ச்சியினை ஒருங்கிணைத்து வழிநடத்துவதாகவும் இந்நிலையம் திகழ்கின்றது. (To provide leadership and coordinate the network research for generating location specific varieties, technology & solving specific constraints of Banana and plantain production)
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ( National Research Centre for Banana ) வழங்கப்படும் ஆலோசனைகள் (Consultancy):
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ( National Research Centre for Banana, Trichy ) பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறது.
வாழை உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது, வாழையை பயிரிடுவதற்க்கு நிலத்தை தயார் செய்தல் (Preparation of Land), வாழை பயிரிடும் முறை (Method of plating), லாப நோக்கமுள்ள வாழை இரகங்களை தேர்தெடுக்கும் முறைகள், தரமான வாழைக் கன்றுகளை தேர்தெடுதல் (selection of suckers), வாழையை நோய்களிடமிருந்து பாதுகாப்பது (Crop protection) எப்படி, தரமான வாழைபழங்களை உற்பத்தி செய்தல், இயற்கை சீற்றகளிலிருந்து வாழையை பாதுகாத்தல், நீர் பாசன முறை (Water irrigation), ஒவ்வொருமாதமும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் (Operations), உரமிடுதல் (Manuring), உயர் தொழில்நுட்பத்தின் மூலம் கூடுதல் உற்பத்தி, இலாபம் ஈட்டும் சந்தை வாய்ப்புகள் (Market opportunity), அறுவடை பின் வாழை நிர்வாகம் (Post Harvest Management), அறுவடைக்கு பின்னர் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் முறைகள் (How to Avoiding losses occur after harvest), மேம்பட்ட சேமிப்பு வசதிகள் (Storage Facilitation) , வாழை உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பங்கள் ( required technologies for Banana production) போன்ற வாழை சம்மந்தமான எண்ணற்ற ஆலோசனைகளை வழங்குகிறது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ( National Research Centre for Banana ) வழங்கப்படும் பயிற்சிகள் (Training Offered) :
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ( National Research Centre for Banana, Trichy ) பல்வேறு வாழை சம்மந்தமான பயிற்சிகளை வழங்குகிறது. வாழையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்தல் (Value added Products) , அறுவடை பின் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் (Post Harvest Techniques), வாழையில் மேம்படுத்தப்பட்ட வாழை உற்பத்தி , தரமான வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்யும் முறைகள் (Export) போன்ற அடிப்படையில் பல பயிற்சிகளை (Training) வழங்குகிறது.
- மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சார்ந்த பயிற்சிகள் (Training on production of Value Added products from Banana)
- வாழைபட்டையில் இருந்து வாழைநார் பிரித்தெடுத்தல் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் (Training on extraction of Banana fiber and production of handicrafts).
- வாழைப் பழங்களை உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்காக அறுவடைக்குப்பின் கையாளுதல், சேமித்துவைத்தல், பழுக்க வைத்தல், பேக்கேஜின் செய்தல் போன்ற பயிற்சிகளை வழங்குகிறது. (Training on Post Harvest Handling, Storage, Packaging & Ripening in Banana for domestic and Export markets)
மற்றும் பல்வேறு தொழில் நுட்பத்தை உருவாக்கி அதற்கான தொழில்நுட்பத்தை பயிற்சியாக தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ( National Research Centre for Banana, Trichy ) விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் அறிவுரைப்படி( National Research Centre for Banana, Trichy ) நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழை விவசாயம் செய்தால், அதிக வருமானம் ஈட்டலாம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-
National Research Centre for Banana Somarasempettai-Thogaimalai Rd, Thayanur post, Tamil Nadu 620 102, India
Phone:+91 94425 53117
Email : directornrcp@gmail.com , nrcpdirector@gmail.com , nrcbanana@gmail.com
Website : http://www.nrcb.res.in/