TANSTIA-FNF Service Centre For SMEs

Share & Like

           TANSTIA-FNF Service CentreTANSTIA - FNF Service Centre in guindy            TANSTIA-FNF என்ற சேவை அமைப்பு ( TANSTIA-FNF SERVICE CENTRE) தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (Tamil Nadu Small and Tiny Industries Association (TANSTIA) )  மற்றும் ஜெர்மனியின்   தலைசிறந்த லாபநோக்கற்ற சேவை அமைப்பாகிய  Friedrich Naumann Stiftung Foundation (FNST), Germany (பிரடெரிக் நாமன் ஃபவுடேஷன்) ஆகிய இரண்டு அமைப்புகள் இணைந்து 1992-ஆம் ஆண்டு தொடங்கி  சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு   சேவைகளை  அளித்துவருகிறது.

                    தொழில் துறையில் நிறைந்த அனுபவமும், மிகுந்த தகுதிகளும், செயற்பாட்டுத்திறனும் கொண்ட தலைசிறந்த குழுவினரால் சிறு  மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கு பயன்தரும் வகையில் சேவை செய்து வருகிறது.  இந்தியாவிலேயே ISO 9001-2000 தரச் சான்றிதழ் பெற்ற முதல் சிறு தொழில் சேவை மையம்.

TANSTIA-FNF-ன் சேவைகள் :
I.  தொழிற்பயிற்சிகள்(TRAINING) :
     தொழிலதிபர்கள் மற்றும் தொழில்   முனைவோர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளும், சந்தை வாய்ப்பு, அலுவலக மேலாண்மை என பல்வேறுபட்ட தலைப்புகளில் கருத்தரங்குகளை  TFSC  நடத்துகின்றது.
TANSTIA-FNF பின்வரும் பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறது:
  • Quality/Process Training ,
  • Soft Skills Training
  • Leadership Training
  • General Training
  • Entrepreneur/Managerial Skill Training 
II.ஆலோசனை  (CONSULTANCY & ADVISORY) 
  1.ஆலோசனை சேவை (ADVISORY):

                     ஒரு குறிப்பிட்ட தொழில் துவங்க தொழில் முனைவோர்க்கும், ஏற்கெனவே தொழில் நடத்திவரும் தொழிலதிபர்களுக்கும், அவர்கள் விரும்புகின்ற துறையில் தனிப்பட்ட முறையில் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், சவால்கள், மேலும் தங்கள் தொழிலை நவீனமாக்க, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை ஏற்றுமதி  செய்வதற்கேற்ப  உயர்த்துதல் என பல்வேறு சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றது.

2.CONSULTANCY:-

                 தொழில் துவங்க முற்படுவோர்க்கென வங்கியில்  கடன் உதவி பெறுவதற்கான  திட்ட அறிக்கை தயார் செய்து கொடுத்தல், குறிப்பிட்ட பொருளின் சந்தை நிலவரம் பற்றி அறிய விரும்புவோருக்கு அப்பொருளின் உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு சந்தை நிலவரத்தை பற்றி ஆராய்ச்சி செய்து விரிவான அறிக்கை தயார்படுத்தி கொடுத்தல், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டமைப்புத் தொழில் செய்வதற்கு உதவுதல் மற்றும் காப்புரிமை (Patent) , வர்த்தக சின்னம் (Trademark)  , இறக்குமதி, ஏற்றுமதி அனுமதி எண் (IE CODE) , PAN போன்ற சான்றிதழ்களையும் TANSTIA FNF நிறுவனத்தின் மூலமாக பெறலாம்.

          மேலும்  ISO 9001, ISO 14000 தரச் சான்றிதழ்களை பெற்றுத்தரவும்,  தூய உற்பத்தி(CLEAR PRODUCTION) தொழிற்சாலை கழிவுகளை குறைத்தல்(Waste Minimisation) போன்றவைகளுக்கு ஆலோசனைகளை மூலம் பெறலாம்.  

சிறு தொழில்முனைவோர்கள் , ஏற்றுமதியாளர்கள்  பயன்பெறும் வகையில்  பல்வேறு வெளியீடுகள் மற்றும் அறிக்கைகளை (Publications and  Study Reports)  வெளியிடுகிறது. வெளியிடும்  வெளியீடுகள் மற்றும் அறிக்கைகளில் சில:

A.STUDY REPORTS:-
1. Ensuring Viablity in SSI Units,
2.ISO 9000:2000 – Platform for Organization Excellence,
3.Food Additives,and Etc,,.

B.WORKING GUIDES:-
1.How to Start and Manage a Small Scale Industry ,
2.Schemes of Government of India & Government of TamilNadu for SMES,
3.Working capital Management,
4.what You need to know about the financial well Being of Your Business,
5.Total Quality Management , Manage small scale Industry,
7.Customer Relationship management,
8.Total Productivity Management,
9.Kaizen and 5s for Higher productivity

C.Project Profiles:

1.CHEMICAL INDUSTRIES,
2.BIO TECHNOLOGY INDUSTRIES
3.ELECTRICAL AND ELECTRONICS                                                                                            4.INFORMATION TECHNOLOGY,                                                                                                            5.ENGINEERING INDUSTRIES,                                                                                                                  
6.FOOD PROCESSING INDUSTRIES,                                                                                                     7.SERVICE INDUSTRIES                                                                                                                                      8. RUBBER INDUSTRIES and etc,.

 

III. தகவல் பரிமாற்றம் சேவை (Information Services) :-
     TFSC (TANSTIA- FNF SERVICE CENTRE)கீழ்காணும் வர்த்தக தகவல் பரிமாற்ற சேவைகளை தொழில் முனைவோர்க்கு வழங்குகிறது .
1.உலகில் 92-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 306-க்கும் மேற்பட்ட வர்த்தக மையங்களோடு தொடர்பு கொண்டு வர்த்தக வாய்ப்புகள் (Trade Opportunities) வாங்குதல்(Buy) ,  விற்றல்(Sell) மற்றும் பிறவாய்புகள்  நிகழ்த்த தகவல் பெறலாம்.
  2.வேளாண் பொருட்களின் உலகளாவிய தேவைகளை சேகரித்து தரும் தகவல்களைப் பெறலாம்.
3.பல்வேறு நாடுகளிலுள்ள வியாபார நிறுவனங்களின் முகவரிகள் (Producer/Exporter/Importer/Trader)  மற்றும் நிதிநிலை விபரங்களைப் பெறலாம்.
4.பல்வேறு பொருட்களுக்கு சந்தை  ஆய்வு அறிக்கை (Market Research Report)  மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் பெறலாம்.
5.சென்னை துறைமுகங்களின் வழியே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் பொருட்களின் விபரங்களைப் பெறலாம்.

IV.தொழில் முனைவோரை வழிநடத்தும் சேவை (HAND HOLDING SERVICE):

1.சிறு தொழில் நிறுவனம் அமைக்கத் தேவையான உதவிகள் அனைத்தையும் (பணஉதவி)  தவிர்த்து) வழங்குகிறது.
2.தரமான பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் முதன் முறையாக ஏற்றுமதி  செய்ய TFSC (TANSTIA- FNF SERVICE CENTRE) -ஐ அணுகுபவர்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புகள் பெற்று தருவது .
3.தொழில்நுட்பம் பரிமாற்றம் தேவையென அணுகுபவர்களுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து தருவது.

V.இருவகையான உறுப்பினர்   சேவைகள் :-

 1.வழக்கமான உறுப்பினர்கள்(Regular Members)

   இவ்வகையான உறுப்பினர்கள் பின்வரும் தகவல்களை பெற முடியும்

  • வர்த்தக வாய்ப்புகள்
  • சந்தை நிலவரம்
  • வர்த்தக பொருட்காட்சிகள்,
  • வர்த்தக முகவரிகள், வர்த்தக செய்திகள்,
  • புதிய தொழில்கள்,
  • உலக சந்தை நிலவரம் ,
  • வர்த்தக செய்திகள் ,
  • ஒப்பந்தபுள்ளி விபரங்கள்,
  • பலநாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விபரங்கள், பல நாடுகளின் பொது விபரங்கள்,
  • காப்புரிமைகள்,
  • பொருட்களின் விலை விபரம் ,
  • அரசு கொள்கைகள்,
  • பயிற்சி குறிப்பேடு,
  • சிறு தொழில் பற்றி கேள்வி பதில்கள்.

2.முதன்மை உறுப்பினர்கள் (Premium Members) :-

இவ்வகை உறுப்பினர்கள் வழக்கமான உறுப்பினர் பகுதியில் உள்ள தகவல்கள் மற்றும் பின்வரும் தகவல்களை பெற முடியும்

  • தொழில்  முனைவோராக வழிகாட்டல்,
  • ஏற்றுமதியாளராக   வழிகாட்டல் ,
  • திட்ட அறிக்கைகள்,
  • தொழில்நுட்ப   விபரங்கள்,
  • இயந்திரங்களின் முகவரிகள்
தொழில்முனைவோர் TANSTIA- FNF SERVICE CENTRE-ன் பலன்களை பெற்று தங்களது தொழிலில் மேம்பாடும் ,புதுதொழில்  வர்த்தக வாய்ப்புகளும் பெற்று ,தொழில் வர்த்தக முனைப்புகளில் வெற்றி பெறலாம்.

VI.TANSTIA- FNF SERVICE CENTRE-ன் முகவரி :

TANSTIA-FNF Service Centre,
B-22, Industrial Estate, Guindy,
Chennai – 600 032
Tamil Nadu, India

Tel          : 044-22501451
Fax         : 044-22500860
Email      : tfsc@tanstiafnf.com
Web Site  : http://www.tanstiafnf.com/

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons