நமது பாரம்பரியத்தையும் வாழ்வியலையும் வளர்க்கும் முயற்சி : மண்வாசனை 2017 – பாரம்பரிய விவசாய வகைகளின் கண்காட்சி

Share & Like

இன்றைய காலக்கட்டத்தில் நமது பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த விஷயங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் வளர்ப்பதும் நமது கடமையாகும். அதை முன்னெடுக்கும் வகையில் மண்வாசனை 2017 (Mann Vasanai 2017) என்ற கண்காட்சி மார்ச் 4 ஆம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

முக்கியமாக மண்வாசனை கண்காட்சியில் பாரம்பரிய அரிய விவசாயம் வகைகள் (rare species) மற்றும் கலாசார நிகழ்வு (cultural) சார்ந்த விஷயங்கள் இடம்பெறவுள்ளன.

 

MANN VASANAI 2017 EXHIBITION

 

இக்கண்காட்சியில் பல சிறப்பு பேச்சாளர்களும் தங்களது கருத்துக்களை வழங்க உள்ளனர்.

அஸ்வத் எக்கோ ஆர்கானிக்ஸ் (Aswat Eco Organics) மற்றும் அண்ணா பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஏ.சி டெக்னாலஜி (NSS A.C.Tech) இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.

 

#  இடம்பெறும் நிகழ்ச்சிகள்

 

இந்த கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட அரியவகை பாரம்பரிய அரிசி வகைகள் (traditional rice), பருப்பு வகைகள் (traditional pulses) , பாரம்பரிய விதைகள் (traditional seeds), மூலிகை வகைகள் (herbs) மற்றும் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் (organic foods) இடம்பெற உள்ளன.

 

பஞ்சகாவியா மருத்துவ முகாம், பாரம்பரிய கலைகளான பறை, சிலம்பம், தெருக்குத்து, கரகாட்டம், பம்பரம், உறியடி, இளவட்டக்கல் ஆகிய கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

 

#  சிறப்பு விருந்தினர்கள் & பேச்சாளர்கள்

இக்கண்காட்சியில் பல சிறப்பு பேச்சாளர்களும் பேச்சுகளும் இடம்பெறவுள்ளன.

புழக்கத்தில் இருந்து மறைந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததற்காக ஜனாதிபதியிடம் தேசிய விருது பெற்ற  திரு நெல்.ஜெயராமன், விஞ்ஞானி டாக்டர். சுல்த்தான் இஸ்மாயில், இயற்க்கை விவசாயி திரு.பாமயன், திரு.கிருஷ்ணமூர்த்தி, இயற்கை மருத்துவர் டாக்டர்.காசி பிச்சை, கலைமாமணி வி.ஜி.சந்தோஷ்,

திரு. ஹீலர்  சுந்தரம், உயிரோட்ட விவசாயி திரு. அரியனுர் ஜெயச்சந்திரன்,  திரு.பசு ராகவன், சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி திருமதி மதுமதி IAS போன்ற பல விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

 

#  கண்காட்சி இடம் மற்றும் நேரம்

A.C. Tech,

Anna University, Guindy, Chennai – 25.

4th March 2017,  Time : 9.00 A.M – 8.00 P.M

#  மேலும் விவரங்களுக்கு

Mobile : +91- 9841611045 / 9884166772

Mail : tnmannvasanai@gmail.com


Please Read About This Person:

Dr.velumani

கையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons