புதிய திவால் சட்டத்தின் (Insolvency and Bankruptcy Law) நன்மைகள்
மத்திய அரசு, நலிந்த நிறுவனங்களை, திவால் நிலையில் இருந்து காப்பாற்றவும், அவ்வாறு முடியாத பட்சத்தில், திவால் நடைமுறையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர உதவும், புதிய திவால் சட்டத்தையும் உருவாக்கி உள்ளது. கடந்த வாரம், ராஜ்யசபாவில் நிறைவேறப்பட்ட புதிய திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Code 2016), விரைவில், ஜனாதிபதியின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வர இருக்கிறது.
புதிய திவால் சட்டத்தின் (Bankruptcy Law) நன்மைகள்
- திவால் சட்டம் (Bankruptcy Law) அமலுக்கு வந்தால், கடன் கொடுத்தவருக்கும், கடனை திரும்ப செலுத்த முடியாமல், திவால் நோட்டீஸ் கொடுத்தவருக்கும் இடையிலான பிரச்னைக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும்.
- வாங்கிய கடனை விட, குறைந்த சொத்துகள் உள்ள நலிந்த நிறுவனங்கள், திவால் நோட்டீஸ் அளிக்கின்றன. இதனையடுத்து, திவால் நோட்டீஸ் அளித்த சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு, கடன்தாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைகளின் கீழ், ஒரு வழக்கை முடிக்க, 4 ஆண்டுகள் ஆகின்றன.
- இந்நிலையில், புதிய திவால் சட்டம் சட்டத்தின் கீழ், திவால் நோட்டீஸ் அளித்த, 180 நாட்களுக்குள், வாராக்கடன்கள் வசூலிக்கப்படும். சில பிரத்யேக வழக்குகளில், கூடுதலாக, 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
- இத்தகைய புதிய திவால் சட்ட நடைமுறைகளால் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர், இருவரின் நேரம் மற்றும் ஆற்றல் சேமிக்க மிச்சமாகிறது
- முதலீட்டாளர்களிடையே (investor) நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதுடன், இந்தியாவில், வாராக்கடனை வசூலிக்க, நீண்ட காலமாகும் என்ற பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்’
- வங்கிகளில் வாராக்கடன்களை மீட்டுஎடுக்க புதிய திவால் சட்டம் உதவும்.
- வங்கிகள் எவ்வித தயக்கமும் இன்றி அதிகளவில் கடன் வழங்கும்
- திவால் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதன் மூலம், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்க நிதி நிறுவனங்கள் முன்வரும்.
- ஒரு நிறுவனத்தின், திவால் நடைமுறை துவங்கியது முதல், 2 ஆண்டுகள் வரை, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, புதிய சட்டம் வகை செய்கிறது
- திவாலுக்கு விரைந்து தீர்வு காணும் நாடுகளின் வரிசையில், சீனா, 55வது இடத்திலும், இந்தியா, 136வது இடத்திலும் உள்ளன.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான வங்கித் தீர்வுகளை கொடுக்கும் HDFC SmartUp