சர்வதேச இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளும் தேங்காய் நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் கண்காட்சி : India International Coir Fair 2016 கோயம்புத்தூரில்
தேங்காய் நார் உற்பத்தியில் உலகிலேயே முதன்மையான நாடாக இந்தியா விளங்கிறது. உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் நாரில், 90% உற்பத்தியை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் செய்கிறது. தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் நாரிலிருந்து (coir) பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் சார்ந்த பொருட்களை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசின் Coir Board வாரியம் India International Coir Fair 2016 கண்காட்சியை கோயம்புத்தூரில், ஜூலை 15 – 18 வரை நடத்துகிறது.
India International Coir Fair (IICF 2016) கண்காட்சி, வேளாண் வணிக கண்காட்சியான AGRI INTEX 2016 கண்காட்சியுடன் இணைந்து ஒரே நேரத்தில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது.
கண்காட்சி பங்கேற்பாளர்கள்
இக்கண்காட்சியில் உற்பத்தியாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சர்வதேச இறக்குமதியாளர்கள், இயந்திரக் கருவிகள் உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள், விவசாயிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் பங்கேற்க உள்ளன.
நடைப்பெறும் நிகழ்ச்சிகள்
உள்நாட்டு மற்றும் சர்வதேசம் சார்ந்த வாங்குபவர் விற்பவர் சந்திப்பு (Buyer Seller Meets),
கருத்தரங்குகள் (Coir Seminars),
முதலீட்டாளர்கள் சந்திப்பு (Investors Meet),
All India Road Show.
நடைபெறும் நாள் மற்றும் இடம்
India International Coir Fair 2016 கண்காட்சி , ஜூலை 15 – 18 வரை HALL D, கொடிசியா வணிக வளாகம், கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.