மனித வளத் துறை சார்ந்தவர்களை மேம்படுத்தவும், வளர்ச்சியடையவும் உதவும் சென்னையைச் சேர்ந்த : HR Sangam
பொதுவாக வேலை பார்க்கும் ஊழியர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கும். அந்த ஊழியர்களையும், நிர்வாகத்தையும் இணைத்து வேலை பார்க்கும் மனித வள அதிகாரிகளுக்காக (Human Resources) ஒரு சங்கம் இல்லையே என்று ஏங்கும் அவர்களுக்காக ஒரு சங்கம் செயல்படுகிறது. அதுதான் சென்னையிலுள்ள HR Sangam.
மனித வள அதிகாரிகள் தங்களது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், அவர்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், பிற நிறுவனத்தில் என்ன நடக்கிறது, எப்படி செயல்படுகின்றார்கள், ஊழியர்களை எப்படி நிர்வகிக்கின்றனர், மனித வள துறையில் நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்கும், பகிர்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி HR Sangam கொடுக்கிறது.
மிகுந்த அனுபவமுள்ள மனித வள நிபுணரான சசிகாந்த் ஜெயராமன் என்பவரால் 2008 ல் சென்னையில் HR Sangam ஐ தொடங்கினார்.
HR Sangam, மனித வள நிபுணர்களை இணைக்கவும் (connect), அவர்களுக்குள் ஒத்துழைப்பை (collaborate) ஏற்படுத்திக்கொள்ளவும், கற்றுக்கொள்வதற்கு (learn) மற்றும் பகிர்வதற்கும் (share) உதவுகிறது.
9 வருடங்களுக்கு முன் 15 உறுப்பினர்களுடன் ஒரு சிறிய அமைப்பாக தொடங்கப்பட்ட HR Sangam த்தில் இன்று 2500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து 7500 மேற்பட்ட மனித வள அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அனுபவம் வாய்ந்த மனித வள நிபுணர்களை அழைத்து நிகழ்கால மனித வளத் துறை தலைப்பில் அவரது அனுபவங்கள், எண்ணங்களை பகிர வாய்ப்பளிக்கிறது. இதேபோல் நிறைய நிகழ்ச்சிகள் (events), கருத்தரங்கம், மாநாடு (conference), விவாதங்கள், காபி டேபிள் உரையாடல்கள், conclave, மாதாந்திர கூட்டங்கள் ஆகியவைகளை HR sangam நடத்துகிறது.
எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து ஒரே மேடையில், ஒரே அரங்கத்தில் கொண்டுவந்து மனித வளத் துறை தொடர்பாக என்ன ட்ரெண்ட் இருக்கிறது, சமீபத்திய என்ன மாற்றங்கள் நிகழ்கிறது போன்ற பல விஷயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பை இந்த சங்கம் ஏற்படுத்தி கொடுக்கிறது.
இதனால் அறிவு பகிர்தல்,மனித வள அதிகாரிகளுக்குள் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள முடிகிறது, மனித வளத் துறையின் ஐடியாக்களை பகிர்ந்துகொள்ள முடிகிறது, ஒட்டுமொத்தமாக மனித வளச் சமுதாயம் வளர்வதற்கும், மேம்படுவதற்கும் HR SANGAM பெரும் பங்கு வகிக்கிறது.
Please Read This Success Story: