ஹெச்டிஎப்சி வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது (HDFC Bank has reduced base rate by 0.05%)
நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி தன்னுடைய அடிப்படை வட்டி விகிதத்தை (Base rate) 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு மூலம் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.30 சதவீதமாக உள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் (HDFC Bank) அடிப்படை வட்டி விகிதம் (Base rate) 9.35 சதவீதமாக குறைத்தது.
அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இந்த புதிய வட்டி விகிதம் கடந்த திங்கள்கிழமை (28/12/2015) முதல் அமலுக்கு வந்தது. அடிப்படை வட்டி விகிதத்திற்கு (Base rate) குறைவாக எந்த வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்காது.
PLEASE READ ALSO : உலகவங்கியின் எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 130வது இடத்திற்கு முன்னேற்றம் (Ease Of Doing Business: India Ranks 130)