புதுமையான தொழில் முயற்சி : ரசிகர்களிடம் உறவை பேணி ஒரு நிறுவனத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும் சென்னை ‘Fantain’

Share & Like

ஒரு விளையாட்டில் ஒரு நாடு உலகத்திலேயே முன்னணியில் இருப்பதற்கு காரணம் அதில் உள்ள  விளையாட்டு வீரர்களும், அந்த திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அதன் ரசிகர்களும்.  நம் நாட்டில் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டிற்கு என்று மிகப் பெரிய ரசிகர் படை உள்ளது. இதனாலேயே நிறுவனங்களிடமிருந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் ஸ்பான்சர்ஷிப்களும், கிரிக்கெட் வீரர்களின் மூலம் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளும் அதிகம்.

ஒரு நிறுவனம் விளையாட்டில் ஈடுபடுவதன் பயன் அதனால் அந்த நிறுவனத்திற்கு கிடைக்ககூடிய தொழில் வளர்ச்சியும், வருமானமுமே ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு ரசிகர்களை புரிந்து கொண்டு, அவர்களிடம் உறவை பேணி, தக்கவைத்து, அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்றி, நிறுவனத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வருமானத்தை பெருக்கவும் உதவும் நிறுவனமும்தான் சென்னையைச் சேர்ந்த ஃபான்டெயின்” (Fantain)

 

Fantain

 

விளையாட்டு மட்டுமல்லாமல் ஊடகம் (Media) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment) ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை நடத்தி எப்படி அவர்களை உற்சாகப்படுத்தலாம், அதன் மூலம் நிறுவனங்கள் எப்படி பயன்பெறலாம்  என்பதையும் Fantain பகுப்பாய்வு (Analytics) செய்கிறது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (Kolkata Knight Riders), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (Sunrisers Hyderabad), T-Series, Tami Nadu Premier League மற்றும் பல அணிகள் மற்றும் நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளனர். Sony Music, Red Chillies Entertainment ஆகிய பொழுதுபோக்கு நிறுவனங்கள் Fantain வுடன் டை அப் செய்துள்ளன. BookMyShow, Fantain யில் முதலீடு செய்துள்ள முக்கியமான நிறுவனமாகும்.

Fantain பயணத்தின் தொடக்கம்

20 வருடத்திற்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த ஆனந்த் ராமச்சந்திரன், விவேக் வேனுகோபாலன் மற்றும் அரவிந்த் ராமச்சந்திரன் ஆகிய மூவர் தாங்கள் பெற்ற திறமையை விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2013 ல் Fantain ஐ தொடங்கினார்கள். விளையாட்டின் மீதிருந்த தீவிர காதல் அவர்களை இத்துறையில் தொழில் தொடங்க தூண்டியது.

 

Fantain Team

 

ஃபான்டெயின் தரும் சேவைகள் 

இந்தியாவில் ரசிகர்கள் பகுப்பாய்வு துறையில் இருக்கும் ஒரே நிறுவனம் Fantain ஆகும். இந்தியாவில் ரசிகர்கள் பகுப்பாய்வு துறையில் இருக்கும் ஒரே நிறுவனம் ஆகும். இதன் புதுமையான செயல்பாடுகள் மூலம் பல நிறுவனங்களின் வளர்ச்சியையும், வருமானத்தையும் அதிகரித்துள்ளன. விளையாட்டு, மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ள ரசிகர்களை பகுப்பாய்வு செய்கிறது. 

 

“பொதுவாக ஒரு விளையாட்டுப் போட்டி நடந்து முடிந்துவிட்டால், ரசிகர்ளோடு அதற்கு பின் நாம் தொடர்பு கொள்வதில்லை. அந்த நேரத்தில் தகுதியான ரசிகர்களைப் பெரிதாக இழக்கிறோம். இந்த இழப்பைத் தடுக்கவே ஃபான்டெயின் முயல்கிறது”, என்று ஆனந்த் ராமச்சந்திரன் யுவர் ஸ்டோரியில் கூறியுள்ளார். 

 

ரசிகர்களின் விருப்புகள், வெறுப்புகள் மற்றும் பிடித்தவைகளை ஆராய்தல், விளையாட்டு அணிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பகுப்பாய்வு (Sponsorship Analysis), போட்டி மற்றும் நிகழ்ச்சிகளின் நுழைவுச்சீட்டு தரவு பகுப்பாய்வுகளை (Ticketing data analysis) போன்றவற்றை நிறுவனங்களுக்கு வழங்குகிறது. 

ரசிகர்களை எப்படி தக்கவைப்பது, ரசிகர்கள் விரும்பும் வகையில் போட்டியை நடத்துவது, அவர்களை உற்சாகப்படுத்துவது எப்படி, ரசிகர்களிடம் போட்டிக்கு பின்பும் தொடர்புகளை வைத்துக்கொள்வது எப்படி, ரசிகர்களை வாடிக்கையாளராக மாற்ற என்ன செய்ய வேண்டும், ரசிகர்கள் நிகழ்ச்சிகளில் எந்தெந்தவற்றை எதிர்பார்க்கிறார்கள் போன்ற பலவற்றை பகுப்பாய்வு செய்து பல்வேறு நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industries (CII)) “2014 ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட் அப்” ஆக ஃபான்டெயின் ஐ தேர்ந்தெடுத்தது.

 

“விளையாட்டாக பார்ப்பதைத் தாண்டி, அதையே சிறந்த தொழிலாகவும், முன்னனி நிறுவனமாக ஆக்க வழிகாட்டுவதே எங்கள் நிறுவனத்தின் இலக்கு” , என்று அதன் நிறுவனர்கள் யுவர் ஸ்டோரியில் கூறியுள்ளனர்.

 

Fantain (பான்டெயின்) அதன் சேவையின் மூலம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமின்றி, நாட்டின் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.


Please Read This For Your Growth:

Billionaire Drop Outs தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு : கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தங்களது கனவை நிறைவேற்றிய 10 கோடீஸ்வரர்கள்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons