தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு : கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தங்களது கனவை நிறைவேற்றிய 10 கோடீஸ்வரர்கள்

Share & Like

இன்றைய காலத்தில் வாழ்க்கை தரம் நன்றாக அமையவும், சமூகத்தில் நல்ல நிலையில் மதிக்கப்படுவதற்கும் கல்வி மிக மிக முக்கியம். ஒரு காலத்தில் ஓரளவிற்கு படித்தாலே நல்ல வேலையும், கைநிறைய வருமானமும் கிடைத்த நிலையில், இப்போது உயர்கல்வி என்பதே குறைந்தபட்ச தகுதியாகிவிட்டது.

Billionaire Drop Outs

பல பேர் பல காரணங்களால் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் இடையில் நிறுத்தி (drop out) கொள்கிறார்கள். அதில் மிகச் சிலரே இதை ஒரு குறையாகவும், தோல்வியாகவும் எண்ணாமல் தங்களுக்கு இருக்கும் கனவுகளை அடைய முயற்சி செய்து கடின உழைப்புடன் வெற்றி பெற்றவர்கள். 

நம் கனவு, எண்ணம், முயற்சி, உழைப்பு பெரியதாக இருக்குமானால் கல்வி தகுதி ஒரு தடையல்ல என்பதை சாதித்து நிரூபித்தவர்கள் பல பேர்.

கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தங்களது கனவை நிறைவேற்றிய 10 கோடீஸ்வரர்கள்

#  ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) –  Apple Founder

 

Steve Jobs

 

ஸ்டீவ் ஜாப்ஸ் மிகப் பெரிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியவர். ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) உலகமறிந்த பெயர். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கியவர். 1972 ல் ஸ்டீவ் ஜாப்ஸ் Reed College ல் சேர்ந்தார். ஆனால் அந்த கல்லூரியில் கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் அவரின் வளர்ப்பு பெற்றோர்களால் கல்வி கட்டணத்தை கட்ட முடியவில்லை. அதனால் ஒரு  செமஸ்டர் மட்டுமே முடித்த நிலையில் கல்லூரி படிப்பை இடையில் நிறுத்தினார்.

புதுமையை படைக்க வேண்டும் என்ற கனவுடன் 1976 ல் ஆப்பிள் (Apple) நிறுவனத்தை தொடங்கினார். இன்று ஆப்பிள் நிறுவனம் புதிய கண்டுபிடிப்பின் மூலம்  தனக்கென ஒரு மிகப் பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது.

“That’s been one of my mantras — focus and simplicity. Simple can be harder than complex; you have to work hard to get your thinking clean to make it simple.” – Steve Jobs


Please Read This Article For Your Growth:

Steve Jobsஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவன வியூகம் தொடர்பாக உயர்மட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சல்


#  பில் கேட்ஸ் (Bill Gates) – MicroSoft Founder

 

bill gates

 

உலகின் மிகப் பெரிய பணக்காரராக  போர்ப்ஸ் (Forbes) இதழின் பட்டியலில் அதிக ஆண்டுகள் இருந்துவருபவர் பில் கேட்ஸ் (Bill Gates). அவருக்கு சிறு வயது முதலே கணினியில் ஆர்வமும், அறிவும் இருந்தது. 1973 ல் ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

தனது கனவிற்காக உழைக்கும் பொருட்டு கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னரே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை விட்டு விளக்கினார். 1975 ல் பால் ஆலன் உடன் சேர்ந்து  மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தை தொடங்கினார். அன்று அவர் எடுத்த கடினமான முடிவு இன்று அவரை உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக உயர்த்தி இருக்கிறது.

இன்று மென்பொருள் மற்றும் தொழில்நுட்பங்களில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது மைக்ரோசாப்ட்.

“Don’t compare yourself with anyone in this world. If you do so, you are insulting yourself.” – Bill Gates

#  மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) – Facebook Founder

 

மார்க் ஜுக்கர்பெர்க்
IMAGE SOURCE:TECHNEWZ.NET

 

நம் எல்லோரையும் வசியப்படுத்தி அவரின் தாக்கத்தில் நம்மை பயித்தியமாக்கியவர். உலகின் பலகோடி மக்களை அவரின் இணையத்தளத்திலே கட்டிப் போட்டவர் Facebook-ஐ தொடங்கிய மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg).

2002 ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது Facemash, CourseMatch போன்ற தளத்தை தொடங்கினார். பிறகு தனது கனவிற்காக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். 2004-ஆம் ஆண்டு Facebook ஐ தொடங்கினார்.  ஒரு ஓய்வு அறையில் தொடங்கப்பட்ட Facebook இன்று பல பேரை ஓய்வில்லாமல்  செய்துவிட்டது. இன்று உலகின் மிகப் பெரிய  இளம் கோடீஸ்வரர் மார்க் மார்க் ஜுக்கர்பெர்க்.

“I think a simple rule of business is, if you do the things that are easier first, then you can actually make a lot of progress.” – Mark Zuckerberg


Please Read This Article For Your Growth:

மார்க் ஜுக்கர்பெர்க்

உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்


#  மைகேல் டெல் (Michael Dell) –  Dell Founder

Michael Dell

 

டெல் கணினி விற்பனையில் தனக்கென தனி இடத்தை கொண்ட நிறுவனம். டெல் (Dell) நிறுவனத்தை தொடங்கியவர் மைகேல் டெல் (michael dell). டெல் பெற்றோர்கள் அவரை ஒரு மருத்துவராக ஆக்க வேண்டும் என்று விரும்பினர். 1983 ல் டெல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் கல்லூரி படிப்பை விட அவருக்கு கணினியில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் முதல் வருடம் மட்டுமே முடிந்த கல்லூரியை விட்டு விளக்கினார். 1984 ல் டெல் நிறுவனத்தை உருவாக்கினார்.

போர்ப்ஸ் இதழ் (Forbes) இந்தாண்டு வெளியிட்ட பட்டியலில் 20.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 41 வது  பணக்காரராக இருக்கிறார்.

“You don’t have to be a genius or a visionary or even a college graduate to be successful. You just need a framework and a dream.”- Michael Dell

#  ஜாக் டோர்சே (Jack Dorsey) – Twitter Founder

 

Jack Dorsey

 

ஜாக் டோர்சே (Jack Dorsey) உலகின் முன்னணி சமூக வலைத்தளமான Twitter ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. சிறுவயதிலிருந்தே கணினி மற்றும் மென்பொருட்கள் உருவாக்கத்தில் ஆர்வம் இருந்தது. அவர் Missouri University of Science and Technology கல்லூரியில் சேர்த்தார். அதிலிருந்து விலகி பின்னர் New York University Tandon School of Engineering ல் சேர்ந்தார். ஆனால் அதிலிருந்து கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திக்  கொண்டார்.

பிறகு 2010 ல்  ஓக்லாண்ட் நகரில் இணையத்தின் மூலம் தேவைப்படுவோருக்கு கார்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த துணிகர முயற்சியே Twitter எனும் மிகப் பெரிய சமூக வலைத்தளத்தை  தொடங்குவதற்கான ஐடியாவை அவருக்கு கொடுத்தது. 2006 ல் ஜாக் டோர்சே (Jack Dorsey), இவான் வில்லியம்ஸ் (Evan Williams) மற்றும் சில பேர் சேர்ந்து Twitter ஐ தொடங்கினர்.

#  இவான் வில்லியம்ஸ் (Evan Williams) – Twitter Co-Founder

 

Evan Williams

 

இவான் வில்லியம்ஸ் (Evan Williams) Twitter ன் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி. அவர் ஒரு விவசாய பண்ணையில் வளர்ந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம்  பெற்றோருக்கு உதவியாக பண்ணையில் வேலை செய்தார்.  University of Nebraska பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஒன்றரை ஆண்டு மட்டுமே படித்த நிலையில் அந்த பல்கலைக்கழகத்தை விட்டு படிப்பை நிறுத்தினார்.  2006 ல்  இவான் வில்லியம்ஸ், ஜாக் டோர்சே (Jack Dorsey), மற்றும் சில பேர் சேர்ந்து Twitter ஐ தொடங்கினர்.

#  ஜான் கோம் (Jan Koum) – WhatApp Founder

 

Jan Koum - WhastApp founder

 

இன்றைய உலகின் தகவல் தெய்வமாக இருப்பது WhatsApp. உக்ரைனிலிருந்து வாழும் வழி தேடி அமெரிக்காவுக்கு வந்த ஜான் கோம் (Jan Koum) தான் WhatsApp ஐ தொடங்கியவர்.

1995 ல் San Jose State University பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மேலும் படிப்புச் செலவுக்காக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் யாஹு (Yahoo) நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஜான் கோம்க்கு யாஹு நிறுவன வேலை பிடித்துப் போனதால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

அங்கு பிரையன் ஆக்டனுடன் (Brian Acton) நெருங்கிய நண்பரானார். இருவரும் இணைந்து 2004ல் வாட்ஸ்அப்பை துவக்கினர். பல சோதனைகள் மற்றும் இழப்பிற்கு பிறகு  2014 ல் Facebook நிறுவனம் WhatsApp ஐ $19.3 பில்லியன் டாலர் தொகைக்கு கையகப்படுத்தியது.

#  டிராவிஸ் கலானிக் (Travis Kalanick) – Uber Founder

 

Uber
Img Source : sputnik.by

 

இன்று Uber ன் சேவை உலகமெங்கும் பரந்து விரிந்திருக்கிறது. வாடகை வண்டிகளை (Cab) அண்ட்ராய்டு அப்ளிகேஷன் (App) மூலம் ஒருங்கிணைக்கும் நிறுவனம் Uber.  66 நாடுகளில் 507 க்கும் மேற்பட்ட நகரங்களில் இதன் சேவைகள் உள்ளது.

டிராவிஸ் கலானிக் (Travis Kalanick) The University of California, Los Angeles (UCLA) பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருக்கும் போது படிப்பை இறுதிவரை முடிக்காமல் நிறுத்தினார். பிறகு 1998 ல் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து Scour என்ற file sharing technology சேவை நிறுவனத்தை தொடங்கினார்.

2009 ல் அலெக்சாண்டர் ஹாங்க் (Alexander Hank) காரெட் கேம்ப் (Garrett Camp) ஆகியோருடன் சேர்ந்து Uber நிறுவனத்தை தொடங்கினார். Uber ன் இன்றைய மதிப்பு (Valuation) கிட்டத்தட்ட $65 பில்லியன் டாலர் ஆகும். ஸ்டார்ட் அப் (startup) நிறுவனங்களில் உலகின் மிக அதிக மதிப்புடைய நிறுவனம் இதுவாகும்.

#  லாரி எலிசன் (Larry Ellison) – Oracle founder

 

Larry Ellison - Oracle Founder

 

தான் தொடங்கிய Oracle நிறுவனத்தை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவாக்கியவர் லாரி எலிசன் (Larry Ellison). போர்பஸ் பட்டியலில் 2014 ல் உலகின் 5 வது மிகப்பெரிய பணக்காரர், 2016 ல் 7 வது மிகப்பெரிய பணக்காரர்.

1962 ல்  லாரி எலிசன் Illinois பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அவரின் வளர்ப்புத் தாய் புற்றுநோயால் இறக்கவே , இரண்டாம் ஆண்டில் பல்கலைகழகத்திலிருந்து விலகினார்.

சில மாதங்கள் கழித்து சிகாகோ பல்கலைகழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் சேர்ந்தார். அதிலும் தொடரமுடியாமல் சிறிது காலத்திலேயே படிப்பை நிறுத்தினார்.

லாரி எலிசன் அடுத்த சில ஆண்டுகளில் கலிபோர்னியாவில் உள்ள பல நிறுவனங்ளில் programmer ஆக பணியாற்றினார். 1977 ல் Ampex Corporation யில் அமெரிக்காவின் CIA க்கு  database உருவாகும்  பணியில் சேர்ந்தார். இந்த பணிக்கு குறியீட்டு பெயராக Oracle என்றழைத்தனர்.

லாரி எலிசன் Ampex நிறுவன முன்னாள் மேற்பார்வையாளருடன் சேர்ந்து $2000 முதலீட்டுடன் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். இதுவே Oracle என்ற  மைக்ரோசாப்ட் (MicroSoft) அடுத்து உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகும்.

#  ஜான் மெக்கே  (John Mackey) – Whole Foods

 

John Mackey - Whole Foods Founder

 

1978  ல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் (Texas University) தத்துவயியல் படித்துகொண்டிருந்த ஜான் மெக்கே (John Mackey) படிப்பை நிறுத்தினார். பிறகு Renee Lawson Hardy என்பவருடன் சேர்ந்து SaferWay என்ற காய்கறி கடையை தொடங்கினார். இதுவே இன்றைய அமெரிக்காவின் சங்கிலி தொடர் இயற்கை பொருள் சூப்பர்மார்கெட் Whole Foods நிறுவனமாகும்.


Please Read This Article For Your Growth:

ஜாக் மாசீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த  AliBaba நிறுவனர் ஜாக் மா


 

Share & Like
PRABHAKARAN ELAMVAZHUDHI
He is an aspiring Entrepreneur. A wanderer in the Entrepreneurship & startup space. He likes learning new things. His favorite Quote is I may not be there yet, but i'am closer than i was yesterday.

PRABHAKARAN ELAMVAZHUDHI

He is an aspiring Entrepreneur. A wanderer in the Entrepreneurship & startup space. He likes learning new things. His favorite Quote is I may not be there yet, but i'am closer than i was yesterday.

Show Buttons
Hide Buttons