ஏற்றுமதி, இறக்குமதியில் Freight Forwarder மற்றும் Clearing Agent ஆகியோருக்கிடையே உள்ள வேறுபாடுகளை தெரிந்துகொள்ளுங்கள்

Share & Like

ஏற்றுமதி மற்றும்  இறக்குமதி தொழிலில் பொருட்களை கப்பலில் ஏற்றுதல், சுங்க விதிகளை நிறைவு செய்தல், அனைத்துவிதமான ஆவணங்களை சுங்க துறையிலிருந்து பெற்றுத்தருதல், இறக்குமதி வரிகளை சுங்கத்துரையினரிடம் செலுத்துவதற்கு உதவுதல் போன்ற பல  ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைமுறைகளை Freight Forwarder மற்றும் Clearing Agent செய்து தருகின்றனர்.

ஆனால் பல ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இவ்விருவருக்கிடையே உள்ள வேறுபாடுகள் தெரிவதில்லை. பெரும்பாலானோர் Freight Forwarder மற்றும் Clearing Agent ஆகியோர் ஒரே சேவைகளை வழங்குவதாக கருதுகின்றனர். அதேபோல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பெயரின் பின்பு Freight Forwarder and Clearing Agent என்று சேர்த்தே வைத்துள்ளன. சில நிறுவனங்கள் மட்டுமே இந்த இரு சேவைகளையும் சேர்த்து வழங்குகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் தாங்கள் செய்யாத சேவைகளை அவுட்சோர்சிங் செய்துவிடுகின்றன. ஆனால் ஏற்றுமதியாளர்  மற்றும் இறக்குமதியாளர்களுக்கு தாங்கள் அனைத்து சேவைகளையும் செய்வதாக காட்டிகொள்கின்றன.

freight forwarder and clearing agent
IMAGE CREDIT: NDTV
Freight Forwarder
  •  ஏற்றுமதி செய்யும்  பொருட்களை கப்பலில் அனுப்புவதற்கு  பதிவு செய்தல்.
  • வாடிக்கையாளர்களுக்கு shipping liner-களிடம் பேரம் பேசி கப்பல் சரக்கு கட்டணத்தை (freight rates) பெற்றுத்தருதல்.
  • bills of lading மற்றும் தொடர்புடைய கப்பல் ஆவணங்கள் தயார்செய்தல் (Certificate of Origin, etc). 
  • சுங்கத்துறையினரிடம் (customs) சமர்பிப்பதற்கு house bill of lading தயார்செய்தல்.
  • வாடிக்கையாளர்களின் சரக்குகளை  கிடங்குகளில் சேமித்தல். சில Freight Forwarder தங்களது சொந்த கிடங்குகளை (warehouse) வைத்திருப்பார்கள்.
  • சரக்குகளை கப்பலின் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்புதல் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்களை கப்பலிலிருந்து இறக்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்புதல் போன்ற சரக்கு விநியோக சேவைகளை செய்தல்.
  • சுங்கம் மற்றும்  துறைமுகம்  போன்றோர்களிடம் அங்கீகாரம் பெற்ற Freight Forwarder மட்டுமே சுங்கதுறை சார்ந்த  நடைமுறைகளை (customs clearance) நிறைவு செய்ய முடியும்.
Clearing Agent
  • சுங்கம் மற்றும்  துறைமுகம் போன்றோர்களிடம் Clearing Agent  அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.
  • சரக்கு வாகனங்கள் சுங்கத்துறை கிடங்குகளில் உள்ளே நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் அனுமதிகளை (pass) பெற்றுத்தருதல்.
  • சுங்க அதிகாரிகள் சரக்குகளை ஆய்வுகள் (customs inspections) செய்ய  ஏற்பாடு செய்தல்.
  • இறக்குமதி வரிகள் (duty) மற்றும் வாட் வரிகள் (VAT tax) போன்றவற்றை செலுத்தும் நடைமுறைகளை  செய்து தருதல்.
  • Freight Forwarder-ஆக செயல்பாடாமல் bills of lading வெளியிட முடியாது. 

PLEASE READ ALSO:  சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons