இந்திய இளம் தொழில் முனைவோர்களில் உள்ள 12 ஹீரோக்கள்

Share & Like

இப்போது இந்தியாவில் பெரும்பாலோர்களிடம் தொழில்முனைவு எண்ணம் மேலோங்கி வருகிறது. பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல தொடங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, சீனாவை அடுத்து அதிகமான ஸ்டார்ட் அப்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தொழில்முனைவிற்கான சுழலும்  இப்போது சாதகமாகவே உள்ளது. பல இளைஞர்கள் தங்களின் தொழில்முனைவு கனவுகளை நிறைவேற்ற மிகுந்த தன்னம்பிக்கையுடன் தொழிலை தொடங்குகின்றனர். 

பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுவருகின்றன. இந்திய ஸ்டார்ட் அப் துறையை வடிவமைத்த பல இளம் தொழில் முனைவு ஹீரோக்கள் உள்ளனர். இந்த ஹீரோக்கள் பல வருங்கால தொழில் முனைவோர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்குகிறார்கள்.

இந்திய இளம் தொழில் முனைவோர்களில் உள்ள 11 ஹீரோக்கள்

#  Sachin Bansal and Binny Bansal (Flipkart)
Binny Bansal Appointed Flipkart New CEO
Sachin Basal (left) and Binny Bansal. Photo: Hemant Mishra/Mint

 

நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart   சச்சின் பன்சல் (Sachin Bansal) மற்றும் பின்னி பன்சல் (Binny Bansal) ஆகியோர் 2008-ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார்கள்.

ப்ளிப்கார்ட் (Flipkart) வெறும் 4 இலட்சம் மற்றும் இரண்டு கணினியுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இப்போது $17 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் இருவரும் IIT-டெல்லியில் படித்தவர்கள். அமேசானில் (Amazon) ஒன்றாக பணிபுரிந்துவந்தார்கள்.

Flipkart நிறுவனம் முதலில் புத்தகத்தை ஆன்லைனில் விற்பனை செய்து வந்தது. இப்போது பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. செப்டம்பர் 2015 ல், அதன் இரண்டு நிறுவனர்களும் $ 1.3 பில்லியன் டாலர் மதிப்புடன் Forbes இந்திய பணக்கார பட்டியலில் 86-வது இடத்தைப் பிடித்தனர்.

Myntra, WeRead, Chakpak.com மற்றும் Mime360 ஆகிய நிறுவனங்களை flipkart வாங்கியுள்ளது குறிபிடத்தக்கது.


Please Read Also:

ப்ளிப்கார்ட்

வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை


#  Kunal Bahl and Rohit Bansal (Snapdeal)

Kunal Bahl and Rohit Bansal

 

மற்றொரு நாட்டின் மிகப்பெரிய  இ-காமர்ஸ் நிறுவனமான Snapdeal ஐ தொடங்கியவர்கள் Kunal Bahl மற்றும் Rohit Bansal ஆவர்.  Snapdeal நிறுவனம் 2010 ஆம் ஆண்டு  டெல்லியில் தொடங்கப்பட்டது. இங்நிறுவனத்தின் மதிப்பு $.6.5 பில்லியன் டாலர் ஆகும். Exclusively.in மற்றும் Freecharge போன்ற நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.


#  Bhavish Aggarwal (Ola)

ola

 

Bhavish Aggarwal லூதியானா நகரில் பிறந்தார், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் ஐஐடி மும்பையில் பெற்றார். 2010 வரை Microsoft Research ல் இரண்டு வருடம் பணிபுரிந்தார். 

Ankit Bhati என்பவருடன் சேர்ந்து Ola Cabs ஐ 2010 ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கினார். Ola Cabs போக்குவரத்திற்காக வாகனங்களை ஆன்லைன் (online cab aggregator)மூலம் ஏற்பாடு செய்துகொடுக்கும் நிறுவனமாகும். பன்னாட்டு நிறுவனமான Uber நிறுவனத்திற்கு மிகுந்த போட்டியை கொடுக்கும் நிறுவனமாகும். 

Ola நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை ஒருங்கிணைக்கிறது. செப்டம்பர் 2015 வரை இதன் மதிப்பு $ 5 பில்லியன் டாலர் ஆகும்.  TaxiforSure and Geotagg நிறுவனங்களை Ola கையகப்படுத்தியுள்ளது. 


#  Vijay Shekhar Sharma (Paytm)

paytm

 

Paytm நிறுவனத்தை தொடங்கியவர் விஜய் சேகர் ஷர்மா ஆவார். பொறியியல் படிப்பை Delhi College of Engineering கல்லூரியில் முடித்தார். அவர் ஆங்கிலம் மொழியில் பேசமுடியாமல் ஆரம்பநாட்களில்  மிகுந்த சிரமத்தை சந்தித்தார். 

ஆனால் இது அவரின் முயற்சியை தடுக்கவில்லை. 1997 ல் indiasite.net இணையத்தளத்தை தொடங்கினார். இரண்டு வருடம் கழித்து $1 மில்லியன் டாலர் தொகைக்கு அதை விற்றார். 2005 ல் One97 communications நிறுவனத்தை தொடங்கினார். இது செய்தி, கிரிக்கெட் ஸ்கோர், ரிங்டோன், ஜோக் மற்றும் தேர்வு முடிவுகளை வழங்கியது. 

பிறகு 2010 ல் Paytm நிறுவனத்தை தொடங்கினார். online recharge, bill payment, e-commerce, bus tickets மற்றும் movie tickets booking ஆகிய சேவைகளை வழங்குகிறது. 


Please Read Also:

freshdesk

Economic Times Startup Awards 2016: தேர்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த 8 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்


#  Pranay Chulet (Quikr)

quikr

 

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் classified portal ஆன Quikr ஐ தொடங்கியவர் Pranay Chulet. இவர் பள்ளிபடிப்பை ராஜஸ்தானில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முடித்தார். பின்னர் IIT டெல்லியிலும், IIM கல்கத்தாவில் மேற்படிப்பையும் முடித்தார்.

பின்னர் இவர் Procter & Gamble, Mitchell Madison Group, Walker Digital, Pricewaterhouse Coopers மற்றும் Booz Allen Hamilton ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தார். Pranay Chulet 2007 ல் Excellere என்ற தனது முதல் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் 2008 ல் ஜிபி தாமஸ் என்பவருடன் சேர்ந்து Kijiji India நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் Quikr ஆக பிராண்ட் மாற்றம் செய்யப்பட்டது.

2016, ஜனவரியில் Quikr நிறுவனம் commonfloor.com ஐ கையகப்படுத்தியது.


#  Deepinder Goyal (Zomato)

zomato

 

உணவகம் தேடல், ஆன்லைன் மூலம் உணவை பதிவு செய்தல், ஹோட்டல் டேபிள் ரிசர்வேஷன் மற்றும் மேலாண்மை நிறுவனமான Zomato வை தொடங்கியவர் Deepinder Goyal. இவர் Pankaj Chaddah என்பவருடன் சேர்ந்து  Zomato வை தொடங்கினார்.

2005 ல் IIT டெல்லியில் படிப்பை முடித்தவர். பின்னர் Bain & Co நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதன் கேண்டினில் மெனுவை பார்த்து மதிய உணவை ஆர்டர் செய்ய நீண்ட வரிசையில் நிற்கவேண்டியது இருந்தது. இந்த நேர விரயத்தை குறைக்க 2008 ல் Deepinder Goyal மற்றும் Pankaj Chaddah ஆகியோர் மெனுவை ஸ்கேன் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றினர். இதற்கு Foodiebay என்று பெயர் வைத்தனர்.

இந்த தளத்திற்கு பார்வையாளர்கள் அதிகரிக்கவே, உணவகங்களையும் பட்டியலிட்டனர். 2010 ல் Zomato என்று பெயர் மாற்றினர். இது பிரபலமடையவே தங்கள் வேலையை விட்டு Zomato நிறுவனத்திற்காக தங்களை அர்ப்பணித்தனர்.

Zomato இப்போது 23 நாடுகளில் இயங்குகிறது. 


#  Kavin Bharti Mittal (Hike)

hike

 

 

மெசேஜ் அப்ளிகேசன் Hike ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கவின் பார்தி மிட்டல் ஆவார். இவர் மிகப்பெரிய தொழிலதிபரான பார்தி மிட்டலின் மகன் ஆவார்.

Hike Messenger 2012 ல் தொடங்கப்பட்டது. ஒரு சில மாதங்களில் Bharti SoftBank யிடமிருந்து $7 டாலர் முதலீட்டை பெற்றது. WhatsApp, WeChat, Viber மற்றும் Telegram போன்றவற்றுடன் Hike போட்டியிட்டுவருகிறது. 


#  Naveen Tewari (InMobi)

inmobi

 

நவீன் திவாரி InMobi நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.  InMobi ஸ்டார்ட் அப் நிறுவனம் mobile advertising and technology platform துறையில் உள்ளது. இங்நிறுவனம் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. the Fast Company இதழ் வெளியிட்ட Top 10 Most Innovative Companies in India பட்டியலில் InMobi முதலிடத்தை பிடித்தது.

நவீன் திவாரி Paytm மேலாண்மை குழுவில் உறுபினராகவும் (Board member) உள்ளார். 


#  Kunal Shah (FreeCharge)

freecharge

 

குணால் ஷா Freecharge நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. Freecharge இந்தியாவின் முதன்மையான Digital Payments platform ஆகும். இதன் மூலம் மொபைல், DTH ஆகியவற்றிக்கு ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.  குணால் ஷா 16 வயதில் தனது நிதி தேவைக்காக டீ சர்ட், mixed tapes விற்பது, இணைய படிப்புகளை கற்றுக்கொடுப்பது போன்ற வேலைகளை செய்துள்ளார். 

Freecharge ஐ snapdeal நிறுவனம் $400 மில்லியன் டாலருக்கு கைபற்றியது குறிபிடத்தக்கது.


#  Rahul Yadav (Housing.com)

rahul yadav

 

இந்திய ஸ்டார்ட் அப்களில் சர்ச்சைக்குரிய முகம் ராகுல் யாதவ். Housing.com நிறுவனத்தை தொடங்கியவர். IIT மும்பையில் சேர்ந்து பின் படிப்பை பாதியில் நிறுத்தியவர். 2012 ல் 11 மற்ற கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து Housing.com ஐ தொடங்கினார். இது real estate classified portal ஆகும்.

மார்கெட்டிங்கில் (marketing) அதிகமான பணத்தை செலவு செய்தார் இதனால் முதலீட்டாளர்களுக்கும் ராகுல் யாதவுக்கும் மோதல் உண்டானது. மாறாக சில முக்கிய Housing.com நிர்வாகிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிட்டார். இதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார், பின்னர் தனது அனைத்து பங்குகளையும் (shares) அவரது ஊழியர்களிடம்   விநியோகித்தார்.

அவர் அடுத்த தொழிலை Intelligent Interfaces துறையில் தொடங்கினார். ஆனால் அந்த ஸ்டார்ட் அப் தோல்வியடைந்ததாக அறிவித்தார்.


Please Read Also:

STARTUP

2016 ஆம் ஆண்டில் அதிக முதலீட்டு நிதியை பெற்ற 10 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons