Economic Times Startup Awards 2016: தேர்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த 8 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

Share & Like

The Economic Times இதழ் இந்தியாவின் இந்த ஆண்டுக்கான பல்வேறு பிரிவுகளில் சிறந்த ஸ்டார்ட் அப் க்கான  விருதுகளை Economic Times Startup Awards 2016 வழங்கியுள்ளது. இதில் 8 பிரிவுகளில் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்தேடுத்துள்ளது. 

ET Startup Awards க்கு ஜூரிக்களாக முன்னாள் இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியான Nandan Nilekani, NITI Aayog நிறுவன சிஇஓ Amitabh Kant, Flipkart இணை நிறுவனர்  Sachin Bansal, One97 மற்றும் Paytm சிஇஓ Vijay Shekhar Sharma, முதலீட்டாளரான Subrata Mitra, Kartik Hosanagar மற்றும் Vani Kola, Google ன் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவின் நிர்வாக இயக்குனரான Rajan Anandan, Myntra நிறுவனர் Mukesh Bansal இருந்தனர். 


தேர்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த 8 ஸ்டார்ட் அப்கள் 
Startup of the year

 

freshdesk

 

Winner: Freshdesk

Founder: Girish Mathrubootham

Freshdesk நிறுவனம் சென்னையைச் தலைமை இடமாக கொண்ட cloud தொழில்நுட்பத்தை சார்ந்த customer engagement software நிறுவனமாகும். 5 வருடங்களாக 145 நாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. Freshdesk நிறுவனத்திற்கு இந்த ஆண்டிற்கான Startup of the year விருது வழங்கப்பட்டுள்ளது.


Top Innovator

 

mitrabiotech

Winner: Mitra Biotech

Founder: Mallik Sundaram

Mitra Biotech பயோடெக்னாலஜி நிறுவனமாகும். பல தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை (patented) பெற்றுள்ளது. இவர்களின் Canscript தொழில்நுட்பம், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் புற்று நோயாளிகளுக்கு சரியான சேர்க்கையில் மருந்துகளை தேர்ந்தெடுத்து நிர்வகிக்க உதவுகிறது. Mitra Biotech ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு Top Innovator விருது வழங்கப்பட்டுள்ளது.

அது, பெங்களூரில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைந்துள்ளது


Social Enterprise

 

agrostar

 

Winner: AgroStar

Founder: Shardul Sheth

AgroStar வேளாண் தொழில்நுட்ப நிறுவனமாகும். இங்நிறுவனம்  விசாயிகள் தங்களுக்கு தேவையான மூலப்பொருள் மற்றும் கருவிகளை மொபைலின் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் mobile-commerce platform நிறுவனமாகும்.

AgroStar புனேயை சேர்ந்த நிறுவனமாகும். 


Bootstrap Champ

zerodha

 

Winner: Zerodha

Founder: Nithin Kamath

Zerodha நிதி சேவைகள் சார்ந்த நிறுவனம். Stock & equity investment services, currency and commodity trading, and retail and institutional broking போன்றவற்றிற்கு இலவச தரகு மற்றும் ஆன்லைன் தள்ளுபடி தரகு சேவைகளை  வழங்குகிறது 

Zerodha நிறுவனர் நிதின் காமத் 17 வயதில் பங்கு வர்த்தகம் (trading in stocks) செய்ய துவங்கினார். பொறியியல் படித்து கொண்டிருக்கும்போதே பெரும்பாலும் பங்கு விலைகளை (share prices) கண்காணிப்பதிலேயே அதிக நேரம் செலவு செய்தார்.


Best on Campus

ather energy

 

Winner: Ather Energy

Founder: Tarun Mehta

கல்லூரி மாணவர்களுக்கு கார், ஸ்கூட்டர், ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் உருவாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் ஒரு சிலரே கனவுகளை செயல் வடிவில் உருவாக்குகிறார்கள். அந்த வகையில் தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள், அவர்கள் smart electric scooter ஐ உருவாக்கியிருக்கிறார்கள் . அவர்களின்ஸ்டார்ட் அப்  Ather Energy ஆகும். இதற்காக Best on Campus விருது வழங்கப்பட்டுள்ளது.

 Ather Energy ஸ்டார்ட் அப் smart electric scooter ஐ உற்பத்தி செய்கிறது. பெங்களூரில் உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது. 


Woman Ahead

 

 Portea Medical Meena Ganesh

 

Winner: Meena Ganesh

Company: Portea Medical

Portea Medical ஹெல்த் கேர் (healthcare) துறையில் உள்ளது. இதன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மீனா கணேஷ் ஆவார். இந்தியாவில் பெண்கள் தொழில்முனைவை தேர்ந்தெடுப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மீனா கணேஷின் தொழில்முனைவிற்காக Woman Ahead விருது வழங்கப்பட்டுள்ளது.


Midas Touch Award for Best Investor

 

Avnish Bajaj

Winner: Avnish Bajaj

Company: Matrix Partners

அவ்னிஸ் பஜாஜ்  2006 ஆம் ஆண்டில் Matrix Partners india வெஞ்சர் கேப்பிடல் முதலீட்டு நிறுவனத்தை நிறுவினார். முதலீட்டாளருக்கு வெற்றிகரமான முதலீட்டை செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அவ்னிஸ் பஜாஜ் வெற்றிகரமான இணையம் சார்ந்த நிறுவனமான Ola, Quikr and Practo ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார். அவர் செய்த வெற்றிகரமான முதலீட்டிற்காக Midas Touch Award for Best Investor விருது வழங்கப்பட்டுள்ளது.


Comeback Kid

freecharge

 

Winner: Kunal Shah

Company: Freecharge

குணால் ஷா Freecharge நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. Freecharge இந்தியாவின் முதன்மையான Digital Payments platform ஆகும். இதன் மூலம் மொபைல், DTH ஆகியவற்றிக்கு ரீ சார்ஜ் செய்துகொள்ளலாம்.  குணால் ஷா 16 வயதில் தனது நிதி தேவைக்காக டீ சர்ட், mixed tapes விற்பது, இணைய படிப்புகளை கற்றுக்கொடுப்பது போன்ற வேலைகளை செய்துள்ளார். அவருக்கு Comeback Kid விருது கொடுக்கப்பட்டுள்ளது.


Please Read Also:

STARTUP

 2016 ஆம் ஆண்டில் அதிக முதலீட்டு நிதியை பெற்ற 10 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons