ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவும் : All India Online Vendors Association (AIOVA)
இன்றைய இணைய உலகில் ஆன்லைன் (online) மூலம் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் $22.049 ட்ரில்லியன் (trillion) அமெரிக்க டாலர் அளவிற்கு மொத்த சில்லறை விற்பனை (retail sales) நடந்துள்ளதாக eMarketer தெரிவித்துள்ளது.
உலகளாவிய மொத்த சில்லறை விற்பனையில், ஆன்லைன் (Retail ecommerce sales) வழியாக மட்டும் $1.915 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சில்லறை விற்பனை நடந்துள்ளது. இதில் பொருட்கள் மட்டுமன்றி சேவைகளான ஆன்லைன் டிக்கெட் விற்பனை (ticket sales), உணவகங்கள் (restaurant), டிராவல் (travel) ஆகியவைகளும் அடங்கும். 2016 ல் உலகளாவிய மொத்த சில்லறை விற்பனையில் 8.7% ஆன்லைன் மூலம் நடந்துள்ளது.
இதுவே 2020 ஆம் ஆண்டில், $4.058 ட்ரில்லியன் (trillion) அமெரிக்க டாலர் அளவிற்கு இ காமர்ஸ் மூலம் சில்லறை விற்பனை நடக்கும் எனவும், இது உலகளாவிய மொத்த சில்லறை விற்பனையில் 14.6% இருக்கும் எனவும் eMarketer தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு ஆன்லைன் சில்லறை விற்பனை அதிகரித்து வருகிறது. இதே போல் இ-காமர்ஸ் நிறுவனங்களும் (E Commerce), ஆன்லைன் மூலம் பொருட்கள் (products) மற்றும் சேவையை (service) விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
All India Online Vendors Association (AIOVA)
இ காமர்ஸ் நிறுவன தளத்தில் மூலம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு (vendors) உதவுவதற்காகவும், வழிகாட்டுவதற்காகவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அரசிடமும், நிறுவனத்திடமும் எடுத்து சென்று முறையிடுவதற்காகவும் மற்றும் விற்பனையாளர்களை பாதுகாக்கவும் அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்கள் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதுதான் All India Online Vendors Association (AIOVA) ஆகும்.
AIOVA செயல்பாடுகள்:
AIOVA அமைப்பில் பல ஆன்லைன் விற்பனையாளர்கள் உறுபினர்களாக உள்ளனர். ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள், விற்பனையாளர்களுக்கு எதிரான நிறுவனம் மற்றும் அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள், பிரச்சனைகள் ஏதேனும் ஏற்படும்போது ஆன்லைன் விற்பனையாளர்களின் சார்பாக குரல் எழுப்பும்.
வரி (Taxes), கணக்கியல் (Accounting), மார்க்கெட்டிங் (Marketing), லாஜிஸ்டிக்ஸ் (Logistics) / கூரியர் (Couriers), கடன் சேவைகள் (lending, loan service) போன்ற E Commerce துறையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு AIOVA தளத்தில் பதிவிட்டு மற்ற விற்பனையாளர்களிடமிருந்து தீர்வுகளை பெற முடியும்.
இ காமர்ஸ் நிறுவனங்கள் பற்றிய கலந்துரையாடல், சந்தை சார்ந்த கலந்துரையாடல் (Marketplace Discussion), பொதுவான கலந்துரையாடல்களை (general Discussion) AIOVA தளத்தில் மேற்கொள்ள முடியும்.
மேலும் பல தகவல்களுக்கும், விவரங்களுக்கு AIOVA இணையதளத்தை அணுகவும்.
Please Read This Article:
வாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்